பாண்டுரங்க! பாண்டுரங்க! பாண்டுரங்க! - ரங்க
பாண்டுரங்க! பாண்டுரங்க! பாண்டுரங்க! - ரங்க. (பா).
பாண்டுரங்க விட்டலனை பாடிடுவோம் - நம்
பாவங்கள் போக்க வழி தேடிடுவோம். (பா).
பண்டரியில் நாம் எல்லாரும் கூடிடுவோம் - அந்த
புண்டரிகாக்ஷனருள் நாடிடுவோம். (பா).
வட்ட வட்டமாக நின்று ஆடிடுவோம் - கையை
தட்டிக் கொண்டு விட்டலனை பாடிடுவோம். (பா).
கஷ்டங்களைத் தீர்க்கும் அந்த விட்டலனையே
நமது இஷ்ட தெய்வமாகவே கொண்டாடிவோம். (பா).
சந்தனத்திலகமிட்ட சுந்தரனை நம் - சிந்
தையில் என்னாளுமே வைத்திருப்போம். (பா).
சிந்தையில் நிற்கும் பாண்டுரங்கனையே
மங்களமும் அருளும்படி வேண்டிடுவோம். (பா).
No comments:
Post a Comment