#ஏழு_விதமான #ஆச்சரியங்கள் ....
1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள்,கவலைப்படாமல்,
#தன்கடமைகளச்_செய்யாமல்
#சிரித்துக் #கொண்டிருப்பது #ஆச்சரியம்.!!!
2. ஒரு நாளில் இவ்வுலகம் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், #உலகத்தின்மீது_மோகம் #கொண்டிருப்பது #ஆச்சரியம்...!!!
3. எந்த ஒரு செயலும் இறைவன் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன்
#கைநழுவிச்சென்றவற்றை
#எண்ணி_கவலைப்பட்டுக் #கொண்டிருப்பது #ஆச்சரியம்...!!!
4. மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை
நம்புகின்ற மனிதன்,#அதனைப்_பற்றி #அக்கறையின்றி #வாழ்ந்து #கொண்டிருப்பது #ஆச்சரியம்...!!!
5. நரக நெருப்பின் வேதனை பற்றி அறிந்த மனிதன்,அது பற்றி #சிந்திக்காமல் #தொடர்ந்தும் #பாவம், #தவறு #செய்வது #ஆச்சரியம்...!!!
6. இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு #எவருக்கோவணக்கத்தை
#நிறை #வேற்றுவது #ஆச்சரியம்...!!!
7. நரகம், சொர்க்கத்தைப் பற்றி அறிந்த மனிதன், உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் தமது #முழு_வாழ்வையும்கழிப்பது
#ஆச்சரியம்..!!!!
🙏ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்🙏
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்
Sunday, June 7, 2020
ராம” நாமம்
“ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும்
நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம்-நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.
கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே.
கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.
பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே.

நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.
நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து.
நாமம், “பாதை மீறிவர்க்கும் தவறிவர்க்கும்” வழி காட்டும்
எல்லா நாமமும் பரபிரும்மத்தின் நாமமே, நாமம் சரியான நேரத்தில் ஞானத்தை அளித்துவிடும்.
பகவானின் மிக சமீபத்தில் இருப்பது நாமம்.
நாமத்துடன் எழுவீர், பணியின் “தொடக்க-இடை-இறுதியில்” நாமத்துடன் இணைவீர்.
நாமத்துக்கு விலக்கு இல்லை.
நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும்
நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும்.
நாமம் தாய்-தந்தை போன்றது.
நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும்.
பவரோக அருமருந்து நாமம்.
சாஸ்திரங்களின் முடிவு நாமம்.
நான்கு லஷம் கோடி ஜன்மாக்கள் எடுத்து வேத-அத்யானம், யோகம், யாகம், தீர்த்தாடனம், பூஜை, ஸ்வதர்ம அனுஷ்டானம் என செய்து இருந்தால்தான் வாயில் ஒரு “ராம” நாமம் வரு்ம்.
நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும்.
காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.
நாமம் சொன்னால் பகவானே வந்துவிடுவார்
சொல்பவரின், “ஜாதி, மதம், தரம், இடம், காலம்”, பேதமற்றது நாமம்.
நாமமே சரணாகதி, உலகுக்கு ஜீவன் வரும்போதும் போகும்போதும், நாமம் சொல்லலாம்.
நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.
நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை.
நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது.
நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்
நாமத்தை, எண்ணுவதை விட, எண்ணுவது சிறப்பு.
நாமத்தால் அடைய நாமமே சாதனம்.
நாமம்,நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும்.

நாராயணா நீயே கதி
அன்னையாய் நீயிருந்து
அன்பை ஊட்டுவித்தாய்!
அப்பனாய் நீயிருந்து
அறிவை ஊட்டுவித்தாய்!
எனக்கு எல்லாமும் நீயேயன்றோ நாராயணா!
எம் சிந்தை ஒருபொழுதும்
உமை அகலாதிருக்கும் வண்ணம்
உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!
இப்பொழுதும் எப்பொழுதும் முப்பொழுதும் உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!
எல்லாமாய் நீயிருக்க வெறும் எழுத்தாய் நானிங்கு உன் பாதச் சரண் தேடினேன்!
கோவிந்தா உன் பாதச் சரண் தேடினேன்!
என்றென்றும் எம்மனதில் குன்றாது நிற்பவனே!
என் ஆண்டவனே என்னப்பன்
அய்யா எனக்கு🙏

இதம் கிடைக்குமா? இன்ப நிலை கிடைக்குமா?
இதம் கிடைக்குமா? இன்ப நிலை கிடைக்குமா?
எதிராசன் இணையடியில் சுகம் கிடைக்குமா?எனக்கு−
எதிராசன் இணையடியில் சுகம் கிடைக்குமா? (இதம்)
மலை போல துன்பங்கள் எனை வந்து வாட்டும் போது−
"கலங்காதே” என்றுந்தன் குரல் கேட்குமா?−நீ
“கலங்காதே” என்றுந்தன் குரல் கேட்குமா? (இதம்)
மதத்தாலே பல நூறு பிழைகள் நான் செய்திடினும்−என்னை
இதத்தாலே பணி கொள்ள நீ வருவாயா?
குன்றாத வினையேனை, குணமொழிந்த தமியேனை−
நன்றாக நீ வந்து ஆட்கொள்வாயா?−நான்
நன்றாக நீ வந்து ஆட்கொள்வாயா? (இதம்)
இத்தனை நாள் உனை பிரிந்தேன் எந்தன் இருவினையால்!−
இனி நீ இட்ட வழக்காக எனை ஆக்குவேன்;
பல் நோவும் எனை வந்து தினம் தினமே
நலக்கும் போது−
வல்வினையேனை விடுவிக்க நீ வருவாயா? (இதம்)
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்
🌈🔥திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்🔥🌈
🌈🏞️11 : பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே🏞️🌈
🌺மற்ற ஆழ்வார்களுக்கு இல்லா பல சிறப்புகள் ஆண்டாளுக்கு உண்டு.
🌺மற்ற ஆழ்வார்களுக்கு மத்தியில் ஆண்டாள் மட்டுமே பெண்ணானவள்.செல்வாக்கும் மிக்கவள்
🌺ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிச் செடியின் கீழே விஷ்ணுசித்தர் என அழைக்கப்படும் பெரியாழ்வாரின் குமாரத்தியாக ஆனார்.
🌺பூமாதேவியின் அம்சமாகப் பிறந்ததாக ஐதீகம்
🌺பெண்களின் பருவங்களை ஏழு நிலைகளாகப் பிரிக்கலாம்
🌺ஐந்தாம் வயதிலிருந்து ஏழாவது வயது வரை - பேதை
எட்டு வயதிலிருந்து 12 வயதுவரை - பெதும்பை
13 வயது மட்டும் - மங்கை
14 வயதிலிருந்து 19 வரை - மடந்தை
20 வயதிலிருந்து25 வயதுவரை- அரிவை
26 வயதிலிருந்து 32வரை - தெரிவை
அதன் பிறகுபேரிளம் பெண்
🌺(பகவத்
விஷயங்களை வளர்த்துக் கொள்வதில் நமக்கு ஏழு நிலைகள் உள்ளன.
🌺அவை, அபிலாஷை,சிந்தனை,அனுஸ்ம்ருதி,இச்சா,ருசி,பரபக்தி,பரமபக்தி.ஒருப்பொருளைப் பார்த்ததும் அதன் மீது ஏற்படும் விருப்பம் அபிலாஷை எனப்படும்.
🌺அதன் பிறகு வேறோர் இடத்தில், வேறோர் காலத்தில் மீண்டும் அந்த பொருள் பற்றி நினைவு வருவத்ற்குப் பெயர் சிந்தனை.
🌺இந்தச் சிந்தனை அதிக நேரம் நிற்காது.அதற்கு அடுத்து அப்பொருளைக் குறித்து சிந்தனைப் போராட்டம் ஏற்படும் நிலைக்கு அனுஸ்மிருதி எனப்படும்.
🌺அனுஸ்மிருதிக்கு
ப்பின் அப்பொருள் மீது இச்சை ஏற்படும்.இச்சை நிலைக்குப் பின் அந்தப் பொருளை அடைய வேண்டும் என்ற நிலைக்கு ருசி எனப்படும்.
🌺இந்நிலையில் எம்பெருமானுடன் கூடி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்..
🌺இறைவனுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்ற இன்ப நிலையான சேர்க்கையும்,
🌺 அப்பெருமானைப் பிரிந்திருக்க வேண்டும் என்ற துன்ப நிலையான பிரிவும் சேர்ந்தது பரபக்தி ஆகும்.
🌺எம்பெருமானுடன் ஒன்றாக இருந்து வைகுண்டத்தில் பதவி வகிக்கும் நிலையே பரமபக்தி ஆகும்.
🌺இந்த ஏழு நிலைகளும் ஒரு பெண்ணின் தன்மையிலிருந்தே வைணவத்தில் பேசப்படுகிறது)
🌺ஆண்டாள், பேதைப் பருவத்திலேயேஆண்டவனுடன் கலக்கும் ஒரு நிலையையும் அடைந்து விடுகிறாள்.
🌺பெருமாளின் வாத்சல்யம் அவளை எந்தவித பிரயத்னமும் இன்றி உத்தாரணம் செய்து விடுகிறது
🌺ஆண்டாள் , வராகப் பெருமாளால் உத்தாரணம் பண்ணப்பட்ட பூமித்தாயார், அல்லவா?.
🌺இறைவன் அவளின் பயத்தைப் போக்கி அவளை மடியில் இருத்தி வேதங்கள் அனைத்தும் ஓதுகிறார்
🌺அப்போது தாயாருக்கு ஒரு சந்தேகம்.ஏற்கனவே வேதம் அத்தனையும் கற்றுக்கொண்டு,, பரம்பொருளைக் கண்டுபிடித்து,
🌺எம்பெருமானை
யடைய ஜீவன் மிகவும் சிரமப் பட வேண்டுமே என சந்தேகம்
🌺ஆகவே பெருமாளின் கட்டளைப்படி அவள் கோதை நாச்சியாராக பூவுலகில் பிறந்து,
🌺நான்கு வேதத்திற்கும் நிகரான திருப்பாவையை படைக்கிறாள்
🌺பூமித்தாயை அதிகம் தவிக்க வைக்காமல், உத்தாரணம் பண்ணிய பெருமாளே..ஆண்டாளையும் மிகச் சிறு வயதிலே யே ஞானம் அடைய வைத்து
🌺திருப்பாவை என்ற வேதத்தின் சாரத்தை நமக்கு அளித்துவிட்டு உத்தாரணம் செய்து விட்டார்
🌺அப்படிப்பட்ட, ஆண்டாளைப் போல சிறு வயதிலேயெ ஞானம் பெற்று எம் பெருமானை அடையவில்லையே தான் என்பதையே
🌺 "பிஞ்சாய் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே" என் கிறாள் திருக்கோளூர் பெண்.
🌺சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஸ்ரீகிருஷ்ண கதைகளைக் கேளுங்கள்
பீஷ்மர், சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் வந்து காயத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. 'எந்தச் சூழலிலும் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று பகவான் ஸ்ரீகண்ணபரமாத்மா செய்து கொடுத்த சத்தியம் அர்ஜுனனுக்கு நினைவுக்கு வந்தது. இதனால் ரொம்பவே கலவரமாகிப் போனான் அவன்.
இந்தச் சத்தியத்தைத் தெரிந்து வைத்திருந்த பீஷ்மர், மேலும் மேலும் அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். எல்லா அம்புகளும் கிருஷ்ண பரமாத்மாவின் திருமுகத்தில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. அவை அனைத்தையும் சிரித்த முகத்துடன் தாங்கிக்கொண்டார் ஸ்ரீகிருஷ்ணன்.
அதுமட்டுமா? அதே சிரித்த முகத்துடன், திருமுகத்தில் உண்டான அத்தனைத் தழும்புகளுடன் இன்றைக்கும் நமக்குத் திருக்காட்சி தந்துகொண்டிருக்கிறார் திருவல்லிக்கேணி திவ்விய தேசத்தில்!
ஒருவேளை போர் முனைக்கு ஸ்ரீருக்மிணிதேவியும் வந்திருந்தால் என்னாகியிருக்கும்?அவனுக்கு முன்னே நின்றபடி, அத்தனை அம்புகளையும் தடுத்திருப்பாள். தழும்புகள் இல்லாத கிருஷ்ண பரமாத்மாவாக இருந்திருப்பார், பகவான்!
ஸ்ரீருக்மிணிதேவி வராததும் ஒருவகையில் நல்லதுக்குத்தான்! அப்படி அவள் வராததால்தான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் தழும்பேறிய முக தரிசனம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
அர்ஜுனன் எனும் உண்மையான பக்தனுக்காக, பாண்டவர்கள் என்கிற நல்லவர்களுக்காக எதையும் தாங்கிக்கொள்வான்; எதனையும் ஏற்றுக் கொள்வான் ஸ்ரீகிருஷ்ணன் என்பதை உலகுக்குக் காட்டுகிற ஒப்பற்ற திருத்தலம் அல்லவா அது?!
ஒருகட்டம் வரை அமைதியாக இருந்து, அத்தனை அம்புகளையும் முகத்தில் வாங்கிக்கொண்ட கண்ணன், அடுத்து அர்ஜுனனுக்கு பீஷ்மர் குறி வைத்தபோது, பொங்கியெழுந்தான். விறுவிறுவென தேரில் இருந்து இறங்கினான். பீஷ்மரை நோக்கி வேகம் வேகமாக நடந்தான். சட்டென்று அவன் கையில் சக்ராயுதம் சுற்றியது. 'ஆயுதத்தையே எடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே கிருஷ்ணா...' என்று எல்லோரும் கேட்பதாக ஒருகணம் தோன்றியது அவனுக்கு.
ஆனாலும், அவன் ஆயுதத்தை எடுத்தான்; சத்தியத்தை மீறினான். 'எனக்கு ஆபத்து வந்தால் அதைப் பொறுத்துக் கொள்வேன். என் அடியவருக்கு ஏதேனும் ஆபத்து என்றால், ஆயுதம் எடுக்கவும் தயங்கமாட்டேன்’ என்பதைச் சொல்லாமல் சொல்லி, உலகுக்கு உணர்த்தினான் ஸ்ரீகிருஷ்ணன். அதனால்தான் கண்ணபிரானுக்கு 'சூன்யஹ:' எனும் திருநாமம் அமைந்தது.
சூன்யஹ என்றால், ஒரு தீமையும் துர்க்குணமும் இல்லாதவன் என்று அர்த்தம். தீமைகளுக்கும் துர்க்குணங்களுக்கும் ஆட்படாதவன் என்று பொருள்.
ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிச் சொல்லும்போது, அவருடைய அடியவர்களுக்கு அவன் தரும் முக்கியத்துவம் நமக்குத் தெரிகிறது அல்லவா? அப்படி நமக்காக அவன் ஓடோடி வரவேண்டும் என்றால், நமக்காக அவன் எதையும் செய்யத் துணியவேண்டும் என்றால் நாம் காமத்துடன் இருக்கவேண்டும்.
காமம் என்றால் ஆசை என்று அர்த்தம். நாம் ஆசைப்படுவது முக்கியமில்லை; எவரிடம் ஆசை கொண்டிருக்கிறோம் என்பதே முக்கியம். ஸ்ரீகிருஷ்ணரிடம் ஆசை கொண்டு இருப்பதே சிறப்பு. ஸ்ரீகிருஷ்ணப் பிரேமையுடன் இருந்தால்தான், எப்போதும் கிருஷ்ண கைங்கர்யத்திலேயே இருந்தால்தான், அவனுடைய பரிபூரண அருளையும் ஆசீர்வாதத்தையும் நாம் பெறமுடியும். கண்ண பரமாத்மாவின் அருளும் ஆசீர்வாதமும் இருந்துவிட்டால் அறம், பொருள், வீடு என சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுவிடலாம்.
'பணிவிடை செய்வதைக் காட்டிலும் நிறைவான இன்பம் வேறு எதுவுமில்லை’ என்று ஸ்ரீராமனுக்குச் செய்யும் பணிவிடை குறித்து லட்சுமணன் சிலாகித்துச் சொல்கிறார். 'வாக்காலும் மனத்தாலும் காயத்தாலும் (உடல்) இறைவனுக்குப் பணிவிடை செய்யவேண்டும்’ என்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள்.
'வாயினாற் பாடி, மனத்தால் சிந்தித்து, தூமலர்த் தூவித் தொழுவேன்’ என்று ஸ்ரீஆண்டாளும் பாடுகிறாள். ஒவ்வொரு வரியிலும் உருகுகிறாள்; தன் உள்ளத்தை அப்படியே பதிவு செய்கிறாள்.
கிருஷ்ண பக்தியை, ஸ்ரீகிருஷ்ணர் மீது கொண்டிருக்கிற பிரேமையை இப்படித்தான் நாமும் கொள்ளவேண்டும். எப்போதும், எந்த நேரத்திலும், எவ்விதமான சூழல் வந்திடினும் ஸ்ரீகிருஷ்ணர் மீது கொண்டிருக்கிற பக்தியை விட்டுவிடவே கூடாது. பூலோகத்திலும் சரி... வைகுண்டத்திலும் சரி... நாம் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பதற்கு ஸ்ரீகிருஷ்ணர் மீது கொள்ளும் காதலே நமக்கு நல்ல நல்ல பலன்களை ஈட்டித் தரும்.
அந்தக் காலத்தில் ரேடியோ கேட்டவர்கள் அதிகம். ஆகவே, அதில் விளம்பரங்கள் நிறைய வந்தன. பிறகு, தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. இதிலும் ஏகப்பட்ட விளம்பரங்கள் வருகின்றன. இந்த விளம்பரங்கள் அனைத்துமே நம்மைக் குறி வைத்து, அந்தப் பொருளை வாங்கவேண்டும் என்கிற ஆவலை நமக்குள் தூண்டிவிடுவதற்காகவே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன.
ஒரு பொருளுக்கும் நமக்குமான தொடர்பு அங்கே கிடைக்கிறது. அதற்குச் சங்கம் என்று பெயர். அந்தத் தொடர்பு, வாங்குகிற ஆசையை நமக்குள் விதைக்கிறது. அந்த ஆசை, ஒரு கட்டத்தில் அடைந்தே தீரவேண்டும் என்கிற துடிப்பையும் தவிப்பையும் ஏற்படுத்துகிறது. ஒரு பொருளின் மீதான ஆசையே நம்மை இந்த அளவுக்குத் தூண்டிச் செல்கிறபோது, ஸ்ரீகிருஷ்ணர் மீது நாம் வைத்திருக்கும் ஆசை, நம்மை எந்த இடத்துக்கு நகர்த்திக்கொண்டு செல்லும் என நினைத்துப் பாருங்கள்!
அதாவது, ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் எனில், முதலாவதாக அவர் மீது பக்தி நமக்கு இருக்கவேண்டும். 'நீதாம்பா எனக்கு எல்லாமே!' என்று சரணாகதி அடையவேண்டும். தெரிந்துகொள்ளத் தெரிந்துகொள்ள... பக்தி பெருகும்; ஆசை அதிகரிக்கும்; பிரேமை பொங்கித் ததும்பும்.
'பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தூண்டும். 'கிருஷ்ண பகவான், எப்பேர்ப்பட்டவர் தெரியுமா?' என்று தெரிந்ததைப் பற்றி, எவரிடமேனும் விளக்கத் தோன்றும். அவனுடைய திருநாமங்களைச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கத் தோன்றும்.
'ஸ்ரீகிருஷ்ணரின் மகோன்னதங்களைச் சொன்னாலும் புண்ணியம்; சொல்லச் சொல்லிக் கேட்டாலும் புண்ணியம்; சொல்பவருக்கும் புண்ணியம்; கேட்டவர்க்கும் புண்ணியம்’ என்கிறது கீதை.
அதுவும் எப்படி? அந்தப் புண்ணியம் 21 தலைமுறைக்கும் போய்ச் சேருமாம்!
ஆகவே, ஸ்ரீகிருஷ்ண கதைகளைக் கேளுங்கள்; சொல்லுங்கள்; புண்ணியம் தலைமுறை கடந்து தொடரட்டும்!
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
Saturday, June 6, 2020
Significance of Sahasranamam
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசியில் ஒரு ஸ்லோகத்தில் "சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்து" என்று வருகிறது. இதன் பொருள், அது பகவானின் நாமம் என்று தெரிந்து கூட சொல்ல வேண்டாம். நாரயணா என்ற சப்தமே நமது துயரங்களை போக்க வல்லது. எப்படி ஒரு குழந்தை தனது மழலை சொல்லால் கூறுவதை (அது தவறாக இருந்தாலும்) தாய் புரிந்து கொள்கிறாளோ, அது போல அவனது பெயரை நாம் தெரிந்து சொன்னாலும் தெரியாமலே சொன்னாலும் பகவான் அதை நாம சங்கீர்தனமாக ஏற்று கொண்டு நமக்கு அருள் செய்கிறார்.
"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"
நித்தியம் நாராயண நாமம் சொல்வோம்! நமது துன்பம் நீங்கி இன்பமும் வீடும் அடைவோம்
நாராயணா நீயே கதி ஐயா 🙏🌹❣️🌹❣️🌹🙏

Subscribe to:
Posts (Atom)
அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது. இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...
-
Yadirajan vadivalagu paRpamenaththigazh painGgazhalum thanN pallavamE viralum pAvanamAgiya paiNthuvarAdai padhiNtha marunGgazhagum mu...
-
Thiruppavai Pasuram is a popular bhajan addressed to Lord Perumal or Mahavishnu. Written by Saint Andal, also known as Nachiar and Ko...