ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏
*இன்று 07.07.2022*
*வியாழக்கிழமை*
*ஆனி சித்திரை நட்சத்திரம் திருவாழியாழ்வான் ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஜெயந்தி* 🙏🙏
*சக்கரத்தாழ்வார் ஜெயந்தி*
*ஸ்ரீ சுதர்சனாஷ்டகம்*
🙏🙏🙏🙏
அதிதி
பெருமாள் சுதர்சன பக்தி ஸ்லோகம்
ஸ்ரீ ஸுதர்ஷன அஷ்டகம்
ப்ரதிபட ச்ரேணி பீஷண !
வரகுணஸ் தோம பூஷண!
ஜநிபய ஸ்தான தாரண !
ஜகத வஸ்தான காரண !
நிகில துஷ்கர்ம கர்சன !
நிகம ஸத்தர் மதர்சன !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
🌺 திரு சுதர்ஸன பெருமானே !
உனது ஒளிமிக்க கடைக்கண் நோக்கால் பகைவர்கள் அஞ்சி நிற்கும் காட்சியைக் கொண்டவனே !
அரிய நற்குணங்களின் திரல்களை அணிகலங்களாகக் கொண்டவனே !
ஆற்ற முடியாத பிறவிப்பிணியைக்
களைந்து எங்களைக் காப்பவனே !
நெருப்பைப் போல அடியார்களின் எல்லாப் பாவங்களையும் அழித்து ஒழிக்கும் இனியவனே
இவ்வுலகில் நாங்கள் வாழ்வில்
வெற்றி பெற எங்களுக்கு அருள்புரிவீராக !!
சுபஜகத் ரூப மண்டன !
ஸு ரகனத் ராஸ கண்டன !
சதமக ப்ரஹ்ம வந்தித !
சதபத ப்ரஹ்ம நந்தித !
ப்ரதித வித்வத்ஸ பக்ஷித !
பஜதஹிர் புத்ந்ய லக்ஷித!
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன!
🌺 திருசக்கரத்தாழ்வாரே ! மங்களகரமான உலகத்தைத் திருமேனியாகக் கொண்ட திருமாளுக்கு ஏற்ற அணியானவனே !
தேவர்களின் மனபயத்தை நீக்குபவனே ! முன்பு மேன்மைமிக்க நூறு வேள்விகளைச் செய்த இந்திரனாலும், நான்முகனாலும், வணங்க பெறுமாறு அமைந்தவனே!
உலகம் போற்றுகின்ற மெய்ஞாணியர் வைகுண்டகதி பெற உனது திருவடிகளை ஏற்றுக்கொண்டனர்.
நாமும் அவர் திருவடிகளை
பற்றி நம் வாழ்வில் அனைத்திலும்
வெற்றி பெற பிரார்த்திப்போம்..
ஸ்புடதடி ஜ்ஜால பிஞ்சர !
ப்ருதுதர ஜ்வால பஞ்சர !
பரிகதப் ரத்ன விக்ரஹ !
படுதர பிரக்ஞ துர்க்ரஹ !
ப்ரஹரணக் ராம மண்டித !
பரிஜந த்ராண பண்டித !
ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
🌺 பேரொளி வீசும் மின்னற்கூட்டத்தை
யொத்துப் பொன்போல் ஒளிவீசும் திருவடிகளையுடையவனே!
வாய்திட்ட வெவ்விய கொழுந்துகளாகிய அழற்கூட்டை இனிதே பெற்றவனே !
அன்பொழுக தொழும் அடியார்களை உனது எந்திரத்தைச் சுற்றிலும் கொண்டுள்ள திருமேனியை உடையவனே !
நிலைபெற்ற அடியவர்களைக் காக்கின்ற குறைவற்ற தனித்தன்மை பெற்றவனே !
சுதர்ஸன சக்கரமே !
இவ்வுலகில் நீ வெற்றி பெற்றது போல் நாங்களும் நாராயணனின் அருளால் வெற்றி பெற எங்களுக்கு துணையாக இருப்பாயாக !!
நிஜபத ப்ரீத சத்கண !
நிருபதி ஸ்பீத ஷட்குண !
நிகம நிர்வ்யூட வைபவ !
நிஜபர வ்யூஹ வைபவ !
ஹரிஹர த்வேஷ தாரண !
ஹரபுர ப்லோஷ காரண !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
🌺 மெய்ப்பொருளாகிய உனது திருவடித் தாமரைகளை விரும்பித் தவம் மேற்கொள்ளும் அடியவர்கள் சூழ்ந்திருக்கப் பெற்ற பரம்பொருளே !
ஐயப்பாடுகளைக் களைந்து எம்மை ஆட்கொள்ள வேண்டி இயற்கையாகவே ஆறு திருக்குணங்கள் அமைந்து அருள் செய்யும் பெருமானே !
பேசப்படுகின்ற பரம், வியூகம் என்ற அழகிய திருமேனியின் பெருமைமிக்கவனே ! இந்திரனின் பகைவர்களை ஒழித்தவனே ! திருவாழி பரனே !
இவ்வுலகில் நீ வெற்றி பெற்றது போல் நாங்களும் கிருஷ்ணனின் அருளால் வெற்றி பெற எங்களுக்கு துணையாக இருப்பாயாக
தநுஜ விஸ்தார கர்தன !
ஜனித மிச்ராவி கர்தன !
தநுஜ வித்யா விகர்தன !
பஜத வித்யா நிவர்தன !
அமர த்ருஷ்டஸ் வவிக்கிரம !
ஸமர ஜுஷ்ட ப்ரமிக்கிரம !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
🌺 அரக்கர்களை மேன்மேலும் வளர்ச்சி பெறதாவாறு வேரறுப்பவனே ! அடியவர்கள் பந்தத்தினால் ஏற்படுகின்ற பிறவி இருளை நீக்கும் செஞ்சூரியனைப் போன்றவனே !
அசுரர்கள் செய்கின்ற மாயைகளை
முற்றிலும் நீக்குகின்ற தந்தையே !
உன்னை அபயமென அண்டியவர்கள் அஞ்ஞானத்தை நீக்குகின்ற அறிவனே !
தேவர்கள் வியந்து நிற்குமாறு ஓங்கிய வீரத்தன்மை கொண்ட சுதர்ஸன பெருமானே !
போரில் சுற்றிவரும் பகைவர்களிடையே சுழன்றாடி, அவர்கள் உன் காலில் வீழ்ந்து வணங்குமாறு வெற்றி கொள்ளும் தலைவனே !
பண்புடைய நீ நன்முறையில் மென்மேலும் வெற்றி பெற்று எங்களையும் உன் அருளால் வாழ்வில் வெற்றி பெற செய்வாயாக !!
ப்ரதி முகாலீட பந்துர !
ப்ருது மஹாஹேதி தந்துர !
விகட மாயா பஹிஷ்க்ருத !
விவிதமாலா பரிஷ்க்ருத !
ஸ்திர மஹா யந்த்ர தந்த்ரித !
த்ருடதயா தந்த்ர யந்த்ரித !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
மஹித ஸம்பத் ஸதக்ஷர !
விஹித ஸம்பத் ஷடக்ஷர !
ஷட சக்ர ப்ரதிஷ்ட்டித !
ஸகல தத்வ ப்ரதிஷ்ட்டித !
விவித ஸங்கல்ப கல்பக !
விபுத ஸங்கல்ப கல்பக !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
🌺 பெருமைமிக்க ஞானிகட்கு என்றும் பெறற்கரிய வைகுண்டத்தை நல்கும் இனியவனே !
செல்வச் சிறப்பைக் கொண்ட
ஆறெழுத்து மந்திரத்தையுடையவனே ! நிலைபெற்ற அருகோணத்தில்
உலகம் வியக்க நிலைத்தவனே !
உலகிலுள்ள எல்லா தத்துவங்களிலும் உட்பொருளாக அமைந்திருந்து, விரும்பிய பல்வேறு செயற்பாடுகளை நன்கு செய்து முடிப்பவனே !
ஞான விண்ணவர்கட்குக் சிறந்த கற்பகத்தருவாக அமைந்து அவர்கள் வேண்டியவைகளைக் தருபவனே !
ஆழியப்பா !
எங்களுக்கும் உன் கருணை
கடாக்ஷம் கிடைக்க அருள் புரிவாயாக !
புவன நேத்ர த்ரயீமய !
ஸவன தேஜஸ் த்ரயீமய !
நிரவ திஸ்வாது சிந்மய !
நிகில சக்தே ஜகந்மய !
அமித விச்வ க்ரியாமைய !
சமித விஷ்வக் பயாமய !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
ஜெயஜெய ஸ்ரீ ஸுதர்ஷன !
🌺 உலகில் கண்ணாக அமைந்தவனே !
வேதங்களையே திருமேனியாகக் கொண்டவனே !
புனித வேள்விகளில் முத்தீயாக விளங்குபவனே ! ஒப்பற்ற இன்பஞான வடிவானவனே !
எதனையும் செய்து முடிக்கும் வலிமை பெற்றவனே !
புதுமைசேர் உலகமே வடிவாக அமைந்தவனே !
நலத்தைத் குலைக்கும் பிணிகளோடு பயத்தையும் ஒழிப்பவனே !
திருஆழியனே ! நீ உலகில் வெற்றி பெற்றது போல் நாங்களும் எங்கள் வாழ்வில் வெற்றி பெற அருள்வாயாக !
ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம் நிறைவு பகுதி !!
த்விச துஷ் கமிதம் ப்ரபூத ஸாரம்
படதாம் வேங்கட நாயக ப்ரணீதம் |
விஷமே அபி மநோரத:ப்ரதாவன் ந
விஹன்யேத ரதாங்க துர்யகுப்த : ||
கவிதார்க்கிக ஸிம்ஹாய
கல்யாண குணசாலிநே :
ஸ்ரீமதே வேங்கட நாதாய
வேதாந்த குரவே நம |
🌺ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் அருளிய
ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகத்தை குற்றமற்ற மெய்யன்போடு மனத்திடையே ஓதுவார்களாயின், வாசிகையான் திருவருளே நமக்கு எல்லையற்ற பேரின்பத்தை அருள்வதோடு நாளும் நம் விரும்பியனவைகளையும் கிடைக்க ஸ்ரீ சுதர்ஸன பெருமானை வேண்டுவோம்..
ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம் சம்பூரணம்.
ஓம் நமோ நாராயணாய 🙏
No comments:
Post a Comment