ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்
Sunday, May 22, 2022
அயோத்தி ஸ்ரீராமனுக்கு காப்பு
ஸ்ரீ இராம ஜெயம்
🙏🌹💧🩸🔆☀️☀️🌲🙏💢🙏
🙏அயோத்தி ஸ்ரீராமனுக்கு காப்பு🙏
திருவடியே ஒரு வழியாய் நின்றோம் - இன்று
ஸ்ரீராமனருளால் திருக்கோயில் கண்டோம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் பலகோடி நூறாயிரம் -அவன்
திருவடிக்கு காப்பென்று நாம் பாடுவோம் திருநாமம் ஓராயிரம்
தயரதனின் மகனாக அவதாரம் செய்தான் -இன்று
அடியார்கள் தவத்தாலே புதிதாக வந்தான்
வனவாசம் கண்டான் ஈரேழு ஆண்டு -அவன்
கோயில் நாம் காண பல நூறு ஆண்டு
தர்மத்தின் வடிவாக தயரதன் ராமனைப் பெற்றான் -அந்த
தர்மத்தின் வழி நின்று அவன் கோயில் பெற்றோம்
சீதையை மீட்டான் ஸ்ரீராமன் அன்று - இன்று
அயோத்தியை மீட்டோம் அவனருளைக் கொண்டு
இராமனின் அருளாலே நாம் கூடி நின்றோம் -அந்த
ராமராஜ்யம் இன்று நாம் கண்டோம்
ஸ்ரீராமஜயம் என்று நாம் எழுதி வந்தோம் -அந்த
ஸ்ரீராமனின் ஜயம் இன்று நாம் கண்டோம்
பாதுகையோ அயோத்தி அரசையாண்டது -திரு
பாதமோ அகலிகை சாபம் அன்று தீர்த்தது -உன்
சாரங்கமோ சீதையின் சிறையிருப்பை மீட்டது -உன்
ஒரு நாமமோ எங்களை நாளும் காத்து நிற்கின்றது
சரணாகதியை சொல்ல வந்தவன் -தன்னை
சரணடைந்தாரைக் காத்து நிற்பவன்
ராமானுஜனை நமக்குத் தந்தவன் -இன்று
ராமராஜ்யம் நம்மைக் காண வைப்பவன்
உன்னையே நீ வணங்கும் திரு அரங்கம் - நீ
பதின்மரையம் பாட வைத்த திவ்யப் பிரபந்தம் -அவர்
பாடல் கேட்க நீ இருக்கும் திவ்யதேசம் -திரு
அயோத்தியே ஸ்ரீராமனின் திவ்யதேசம்
அகிலத்தை காக்கின்ற பரம் பொருளாவை -இன்று
ஆலயத்தின் கல்லெல்லாம் கருவாவை -நீ
பிரகலாதனை காக்க வந்த உருவாவை- ஸ்ரீராமனே
திவ்ய தேசம் காக்க நரசிங்க உருவாவை
ராம நவமி தெரியும் !!!! பரத தசமி தெரியுமோ ?!?
ராம நவமி தெரியும் !!!!
பரத தசமி தெரியுமோ ?!?
ராமன் பிறந்தது நவமியில் !
அவன் தம்பி பரதன் பிறந்தது தசமியில் !
கௌசல்யா ராமனைத் தந்தது நவமியில் !
கைகேயி பரதனைத் தந்தது தசமியில் !
புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !
பரத தசமி தெரிந்தது ?!?
லக்ஷ்மண தசமி தெரியுமோ ?!?
லக்ஷ்மணனும் , அவன் தம்பி சத்துருக்கனனும் பிறந்ததும் தசமியில்தான் !!!
சுமித்திரை பகவானுக்காக லக்ஷ்மணனைப் பெற்றதும்,
பாகவதனுக்காக சத்துருக்கனனைப் பெற்றதும் தசமியிலே !
ஆயில்யம் அடைந்தது லக்ஷ்மணனையும், சத்துருக்கனனையும் தந்தது.
புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !
நவமியில் வந்தவன் ஒருவன் !
அவனே ஆதிமூலன் !
தசமியில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே பரதன் !
இருவரில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே லக்ஷ்மணன் !
நால்வரில் கடையனாய்
வந்தவன் ஒருவன் !
அவனே சத்துருக்கனன் !
ராமன் உலகைக் காக்க வந்தான் !
லக்ஷ்மணன் அவனைக் காக்க வந்தான் !
பரதன் நாட்டைக் காக்க வந்தான் !
சத்துருக்கனன் அவனைக் காக்க வந்தான் !
ராமன் தர்மம் சொன்னபடி நடந்தான் !
லக்ஷ்மணன் ராமன் சொன்னபடி நடந்தான் !
பரதன் ராம பாதுகையோடு நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்கு பாதுகையாய் நடந்தான் !
ராமன் சீதையோடு நடந்தான் !
லக்ஷ்மணன் ராமனோடு நடந்தான் !
பரதன் ராமனுக்காய் நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்காய் நடந்தான் !
ராமன் தந்தை சொல் காத்தான் !
லக்ஷ்மண் தாய் சொல் காத்தான் !
பரதன் ராமன் சொல் காத்தான் !
சத்துருக்கனன் பரதன் சொல் காத்தான் !
ராமனோ தர்மம் !
லக்ஷ்மணனோ கைங்கரியம் !
பரதனோ நியாயம் !
சத்துருக்கனனோ சத்தியம் !
புனர்பூசமும், பூசமும், ஆயில்யமும் மூன்றும் தந்ததோ நால்வகை மோக்ஷம் !
நவமியும், தசமியும் தந்ததோ நால்வகை பிரயோஜனம் !
நேற்று ராம நவமி கொண்டாடினாய் !!!
நீ சுகப்பட்டாய் !
இன்று கொண்டாடினால் ராமனே சுகப்படுவான் !
பழி வந்தால் பரதனாயிரு !
சேவை செய்ய லக்ஷ்மணனாயிரு !
சிரத்தையில் சத்துருக்கனனாயிரு !
மொத்தத்தில் ராமனுக்கு பிடித்தமாதிரி இரு !
ஸ்ரீ பெரும்புதூரில் ராமானுஜர் ஹாரத்தில் காணப்படும், பேரருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள்....
Kanchi Devaperumal's six sentences to Ramanujar through Thirukachi Nambigal
(Sriperumbudur Ramanujar's Pendant)ஸ்ரீ பெரும்புதூரில் ராமானுஜர் ஹாரத்தில் காணப்படும், பேரருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள்....
1. “அஹமேவ பரம் தத்வம்"
நாராயணனே பரம் பொருள்.
2. “தர்சனம் பேத ஏவ”
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.
3. “உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”
சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.
4. ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”
அந்திம காலத்தில் சரணமடைந்தவன், நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.
5. “ஸரீர அவஸாநே முக்தி"
சரீர முடிவில் மோட்சமுண்டு
6. “மஹாபூர்ணம் ஸமாஸ்ரயே”
பெரிய நம்பிகளையே குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.
அட்சய திருதியை
அட்சய திருதியை பற்றி தங்கத்தை தவிர நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 60 விஷயங்கள்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவார்கள் என்ற தகவலைத் தவிர பெரியளவில் இதுகுறித்து பலருக்கும் தெரியாது. அட்சய திருதியை எனும் அற்புதம் குறித்த அபூர்வ 60 விஷயங்களை இங்கு காண்போம்.
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர - புராணம்‘ விவரிக்கிறது.
அட்சய திருதியை எனும் அற்புத நாள் தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் உன்னதநாள் அட்சய திருதியை. இந்தாண்டு மே 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.
1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.
2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை திருநாள்!
6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.
7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.
8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
10. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.
11. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.
14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
15. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.
16. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.
17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.
18. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.
20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
21. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
வேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்!
23. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
24. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
25. அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
இந்த அக்சய திருதியை தங்கம் வாங்க சிறந்தது அல்ல... ஜோதிடர்கள் கூறும் முக்கிய காரணம்
27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.
28. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
32. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.
33. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
36. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
37. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
மகாபாரதத்தில் நீங்கள் அறியாத பல அற்புதமான கதாபாத்திரங்களின் கதைகள்.
39. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.
42. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
43. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
45. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
46. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.
47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
48. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
49. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
50. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
51. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.
53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
54. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.
55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
58. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
59. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.
வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்! ஆவுடையார் கோயில் - ஆத்மநாதசுவாமி கோயில்
வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்! ஆவுடையார் கோயில் - ஆத்மநாதசுவாமி கோயில்
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil) இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார் கோயில் வட்டத்திலுள்ள, தேவார பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும்.
மூலஸ்தானத்தில், சுவாமி - அம்பாள் சிலைகள் இருப்பது தான் வழக்கம்; ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார்கோவிலில் சிவலிங்கத்துக்கு பதிலாக குவளையும்,
அம்பாளுக்கு பதிலாக பாதமும் மட்டுமே உள்ளது.
பொதுவாக, சிவாலய மூலஸ்தானங்களில், ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும்; ஆனால், இங்கு, வெறும் ஆவுடையார் மட்டுமே உள்ளது.
லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் குவளை சாத்தப்பட்டுள்ளது.
குவளை உடலாகவும், உள்ளிருக்கும் உருவமற்ற பகுதி ஆத்மாவாகவும் கருதப்படுவதால், சுவாமிக்கு, 'ஆத்மநாதர்' என பெயர் வந்தது.
கோவில்களில் தீபாராதனை தட்டைத் தொட்டு, பக்தர்கள் கண்ணில் ஒற்றிக் கொள்வர். ஆனால், இங்கு, சுவாமிக்கு தீபாராதனை செய்த தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. ஆவுடையாருக்கு பின்புறம் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியனாகவும், சிவப்பு - அக்னியாவும், பச்சை நிறம், சந்திரனாகவும் கருதப்படுகின்றன.
சுவாமிக்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றுகின்றனர். இவற்றை வணங்கினாலே தீபாராதனை தட்டை வணங்கியதற்கு சமம் என்பதால், அதை வெளியில் கொண்டு வருவதில்லை.
அதேபோன்று, பொதுவாக, சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கியும், சில
மேற்கு பார்த்தவாறும் இருக்கும். ஆனால், ஆவுடையார் கோவில் தெற்கு நோக்கி உள்ளது.
சிவன், குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும்
நிலையை, தட்சிணாமூர்த்தி என்பர்.
'(தட்சிணம்)' என்றால் தெற்கு; சிவன்,
மாணிக்கவாசகருக்கு குருவாக உபதேசம் செய்த தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
சூரிய, சந்திர கிரகணங்களின் போது கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இங்கு கிரகணநாளில், ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆதியந்தம் இல்லாத உருவமற்ற சிவனுக்கு, எக்காரணத்தாலும் பூஜை தடைபடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
அம்பாளின் பெயர் யோகாம்பாள்; இவளுக்கும் உருவம் இல்லை.
சிவனை மீறி, தட்சனின் யாகத்திற்கு சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, இத்தலத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல், உருவத்தை மறைத்து தவம் செய்தாள். எனவே, அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை.
அவள் தவம் செய்த போது பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இப்பாதத்தை கண்ணாடியில் பிரதிபலிக்க செய்துள்ளனர்.
இவளது சன்னிதி அடைத்தே இருக்கும் என்பதால், சன்னிதி முன் உள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.
ஆத்மநாதர் முன் உள்ள படைக்கல்லில், புழுங்கல் அரிசியில் சமைத்த
சூடான சாதத்தை ஆவி பறக்க கொட்டுவர்.
அப்போது சன்னிதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும்.
சுவாமி உருவமற்றவர் என்பதால், உருவமில்லாத ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது.
இது தவிர பாகற்காய் மற்றும் கீரையும் நைவேத்தியமாக படைக்கப்படும்.
வித்தியாசமான நடை முறைகள் கொண்ட இக்கோவிலை, வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!
1100 ஆண்டுகளுக்கு முந்திய கோயில்!
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே
சொல்லி அடக்கி விட முடியாது.
அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோயில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே
இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.
மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்
இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால்
அது ஏட்டில் அடங்காது.
இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்தது
கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோனாட்டிற் கெல்லையெனச் சொல்
என்றும்
வெள்ளாறதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி
என்றும்
கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்தார்
தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற
சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது.
அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.
இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருநெல்வேலி, திருவாரூர், ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில்
உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில்
மிகவும் பெரிய தேர்களாகும்.
இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும்.
சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.
50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.
50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்லோ - மரமோ - காண்போர் வியப்பர்
இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட கற்சிலைகள் இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும் போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும்.
வடக்கயிறு:-
இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும்.
உருவம் இல்லை - அருவம்தான்:-
தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில்
மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில்
எந்த விதச் சிலையும் கிடையாது.
அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில்
என்பது சொல்லாமலே விளங்கும்.
பூதம் கட்டிய கோயில்:-
ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கை:-
கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.
ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை
ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும்
இரண்டரையடி கனமும் உள்ளதாகும்.
இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி
செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.
திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.
ஒரே கல்லிலான கற்சங்கிலி:-
கல் வளையங்களாலான சங்கிலி
இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான
கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.
படைகல்:-
இங்கே மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்திலே படைகல் என்கிற ஒரு திட்டுக்கல் இருக்கிறது. இந்தத் திட்டுக்கல் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறைக்கல்லாகும். இந்தத் திட்டுக்கல்லில்தான்
6 கால பூசைகளுக்கும் உரிய அமுதினை வடித்துப் படைத்து ஆற வைக்கிறார்கள்.
புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்:-
எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே
அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள்.
ஆனால் இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப் படுவது இங்கு மட்டும்தான்.
அணையா நெருப்பு:-
கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும்
அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை.
பாண்டியர் - சோழர் - நாயக்க மன்னர்கள் கட்டியது!
இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.
இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன்
கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே விக்ரமாதித்ய
சோழன் தான்) மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது.
உருவமற்ற அருவக் கோயில்:-
தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது.
அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம். இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும்.
தேவதாரு மரம்:-
மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பதும் தேக்கு மரங்கள் நூற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்தது
என்பது நமக்குத் தெரியும். ஆனால் இக்கோயிலில் பயன்படுத்தியுள்ள தேவதாரு மரங்களோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரங்கள் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவபெருமான் வாசஸ்தலமான கைலாயத்தில் தேவதாரு மரம் இருப்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.
அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்று பார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம்.
இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது.
வற்றாத திருக்குளம்:-
இங்கு திருத்தமம் பொய்கை எனப்படும் வற்றாத திருக்குளமும் மூல விருட்சமான குருந்த மரமும் 96 அடி உயரம் 51 அடி அகலம் உடைய ராஜகோபுரம் ஆகியவையும் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் கருவறைக்கு
மிக அருகில் 2 கிணறுகள் உள்ளன இதில் 5 அடி ஆழத்தில் இன்றும்
தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம்.
கவிபாடும் கற்சிலைகள்:-
உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன.
அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது.
இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.
நவநாகரீக நகைகள்:-
தற்காலிக நவநாகரீக நகைகள் கல்லூரி மாணவிகளும் உயர்தர குடும்பப் பெண்களும் அணிகின்ற நவீன அணிகலன்கள் தங்க நகைகள் சங்கிலிகள் போன்ற எந்த ரக நகையானாலும் அவையனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே இங்குள்ள சிலைகளிலே வழங்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.
நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும்.
இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப்
பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும்.
குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும்.
பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளை நிறம் இருக்கும்.
நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும்.
இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச
கல்யாணி குதிரையாகும்.
சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.
வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தி
இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.
இந்தச் சிலையை இந்தக் கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும்.
இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள். தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின்
ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார்.
1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடி
இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நாமும் வாழ்க்கையில் ஒரு முறை கண்டிப்பாக இந்த அதிசய ஆலயத்தை தரிசித்தது வரலாமே!!!!!
திருச்சிற்றம்பலம்!!!!!
பஞ்ச_நாமங்கள்!!!!!
பஞ்ச_நாமங்கள்!!!!!
எப்படியாவது மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா??? என கடவுள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிராறாம்.
திருமாலின் பஞ்ச நாமங்களில் 5ல்
1வது நாமம்
*""ராமா""*
ராமா ராமா ராமா என்று ஒரு நாளைக்கு எத்தனை தரம் முடியுமோ மனதில் அத்தனை தடவை சொல்லுங்கள்.
மனதில் சஞ்சலங்கள், துக்கங்கள், குழப்பங்கள் வரும் போது தனியாக ஓரிடத்தில் அமர்ந்து மனதிற்குள்
"ராம" நாமத்தைச் சொல்லுங்கள். மனம் அமைதி அடைவது நிச்சயம்....ராமா என்ற நாமத்தைக் கேட்டாலே அனுமன் அந்த இடத்தில் வந்து அமர்ந்து விடுகிறானாம்.
"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர ஹ்ருதமஸ்த காஞ்சலிம்"
பத்தாயிரம் ராமநாமாக்கள் சொன்னால் ஏழு கோடிமந்திரங்கள் சொன்னபலனாம்!
2வது நாமம்....
*""க்ருஷ்ணா""*
இந்த நாமமே பாண்டவர்களைக் கூடவே இருந்து காத்தது.....குந்தி க்ருஷ்ணனிடம் கேட்ட வரம் "க்ருஷ்ணா!!!
எனக்கு கஷ்டங்களைக் கொடு!!! அப்போதுதான் உன்னை மறவாமல் இருப்பேன்."... என்றாள்........
கஷ்டங்களைத் தாங்கும் ,மன வலிமையைக்கொடுக்கும் ,நாமம்........
3வது நாமம்
*"நாராயணா""*
சிறுவன் ப்ரஹ்லாதனை காத்த,நாமம்.
எத்தனை இடர்கள் அவன் அடைந்த போதும்அவனைக் காப்பாற்றிய"நாமம்.. பகவானுக்கு பிடித்த குழந்தை அவன்.....
ஆண்டாள் தன்,பாசுரத்தில்"நாராயணனே நமக்கே பறை,தருவான்...என்று, "ஏ" காரத்தில் பெருமை பொங்க சொன்ன நாமம்.
4வது நாமம்
*"கோவிந்தா"*
துச்சாசனன் பாஞ்சாலியை சபையில் துகிலுரித்த போது நிர்கதியாக நின்ற அவளுக்கு கை"கொடுத்த நாமம்....
" தனது இரு கைகளையும் உயரத்"தூக்கி ""கோவிந்தா!! கோவிந்தா!!! எனக் கதறிய போது அவள் மானத்தைக் காப்பாற்றிய நாமம்.......அன்றும், இன்றும், என்றும் திருமலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் நாமம்.......
5வது நாமம்...
*"நரஸிம்மா"*
பக்தர்கள்கேட்டதை உடனே கொடுப்பவனாம். "நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு.....அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே
தூணைப் பிளந்து கொண்டு வந்தான்.....
" நீயே கதி" என சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பானாம்."ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்" என்று சொன்னதே
இல்லையாம்.....அப்படிப்பட்ட கருணாமூர்த்தி அவன்....
அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில்
"நாரஸிம்ஹ"வபுஶ்ரீமான் கேசவ புருஷோத்தம:
என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொன்னார் பீஷ்மர்.....
ராமா! கிருஷ்ணா! நாராயணா! கோவிந்தா! நரஸிம்மா என்ற இந்த எளிமையான ஐந்து திருநாமங்களையும், எப்போதும் நாத்தழும்பேறக்"கூறுவோம்.
திருமாலின் இந்த திருநாமங்கள் நம்மை உய்விக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!!!
ஓம் நமோ நாராயணா 🙏🌹🙏
*ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு:-*
*ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு:-*
--------------------------------*1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.*
*2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.*
*3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.*
*4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.*
*5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.*
*6. நரசிம்மருக்கு. நர சிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன்,* *சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.*
.
*7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக* *கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.*
*8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.*
*9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.*
*10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது.*
.
*11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.*
*12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.*
*13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியததில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.*
*14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.*
*15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.*
*16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.*
*17. "எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.*
*18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.*
*19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.*
*20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.*
*21. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.*
*22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறியுள்ளார்*.
*23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.*
*24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.*
*25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.*
*26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.*
*27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.*
*28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப-புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.*
*29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.*
*30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.*
*31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.*
*32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.*
*33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.*
*34. நரசிம்மரை வழிபடும் போது "ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.*
*35. "அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.*
*36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.*
*37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.*
*38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.*
*39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.*
ராமர் ஏன் உயர்ந்தவர்
ராமர் ஏன் உயர்ந்தவர்
🌹ராவணன் மாயமான் உருவெடுக்க மாரீசனிடம் சொன்னபொழுது ராமனின் குணம் பற்றி வியந்துரைத்து அவனுக்கு துரோகம் புரிய முடியாது என மருவுகின்றான் மாரீசன்.
🌹ராமன் உருவெடுத்தால் சீதை மயங்குவாள் என திட்டம் போட்ட ராவணன்,, ராம உருவெடுத்து அந்த உருவில் தனக்கு மாபெரும் நல்ல குணங்கள் வருவதை உணர்ந்து அதை சட்டென மாற்றி கதறி அழுதான் என்கின்றது புராணம்.
🌹போர்க்களத்தில் ராமனின் அழகையும் அவனின் வீரத்தையும் , ஆயுதம் இல்லா தன்னை வீட்டுக்கு அனுப்பி நாளை வா என சொன்ன ராமனிடம் மனமார தோற்றான் ராவணன்.
🌹லங்காபுரியில் அவன் அழகில் தோற்றாள் சூர்ப்பநகை, அவன் அன்பில் தோற்றான் விபீஷ்ணன், அவன் வீரத்திலும் கருணையிலும் தோற்றான் ராவணன்.
🌹ராவணன் வாலியாலோ, இல்லை கார்த்த வீரியனாலோ கொல்லபட்டிருக்க வேண்டியவன். ஆனால் அவனின் பெரும் பக்தியின் பலன் ராமன் எனும் நல்லவனால் கொல்லபட்டான், இதை உணர்ந்தே மகிழ்வாய் உயிர்விட்டான் ராவணன்.
இதைவிட ராமனின் பெருமை சொல்ல என்ன உண்டு?
தந்தை பாசத்துக்கு எடுத்துகாட்டான ஒருவன் உண்டா?
ராமன் வாழ்வு சொல்லும்
ஒரு மூத்த சகோதரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யார் உதாரணம்?
ராமன் வாழ்வு சொல்லும்
ஒன்றுமே இல்லா பராரி நிலையில் ஒருமனிதன் எப்படி இருக்க வேண்டும்?
ராமன் வாழ்வு சொல்லும்
தந்தையும் மனைவியும் பிரிந்த நிலையில் அனாதையாய் நிற்கும் நிலையில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்?
ராமனின் வாழ்வு சொல்லும்.
நம்பியோரை காப்பது எப்படி, தர்மத்தை அரங்கேற்றுவது எப்படி?
அவன் வாழ்வு சொல்லும்
மனிதன் தன்னிலும் கீழான விலங்குகளிடமும் பறவைகளிடமும் கருணையாய் இருப்பது எப்படி?
அவன் வாழ்வு சொல்லும்
எல்லாம் தொலைத்த நிலையிலும்எதுவுமே இல்லா நிலையிலும் தர்மமும் கருணையும் ஒருவனிடம் இருந்தால் அவன் எப்படி மீள்வான்? அதை அவன் வாழ்வு சொல்லும்
ராஜ்யமும், ஏராளமான பெண்களும், ஏன் அந்நிய ராஜ்யங்கள் ஏராளம் கண்முன் நின்று தனக்காக ஏங்கினாலும் ஒரு மனிதன் எப்படி ஒதுங்க வேண்டும்?
ராமன் வாழ்வு சொல்லும்
நல்ல அரசன் எப்படி இருக்க வேண்டும், தன் குடிகளை கண்காணித்து தன்மேல் நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும்?
ராமனே உதாரணம்
இதனாலே காலம் காலமாக இந்த உலகில் ராமனை வழிபட சொன்னார்கள், அவன் கதையினை படிக்க சொன்னார்கள்.
🌹ராமன் கதையினை முழுக்க வாசிக்கும் ஒருவனுக்கு அவனின் ஏதாவது ஒரு குணம் வரகூடும், அவன் அதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக
ஹரிசந்திரன் கதையினை எத்தனை பேர் காலம் காலமாக கேட்டாலும் காந்தி எனும் மாமனிதன் அவனால் உருவானான் அல்லவா? அதை போல லட்சோப லட்சம் ஆண்டுகள் ஆனாலும் அவனை போல் ஒருவன் வருவான் என ராமனின் கதையினை இச்சமூகம் வைத்திருந்தது.
🌹தான் வீரன் எனும் வாலியின் அகங்காரம் அவனால் ஒழிக்கபட்டது, அழகி எனும் கர்வம் கொண்ட சூர்ப்பநகையின் அகங்காரம் அவனாலே ஒழிக்கபட்டது, தாடகை அவனிடமே அடங்கி வீழ்ந்தாள்.
🌹மூவுலகை வென்ற ராவணின் அகங்காரம் அவனிடமே ஒழிந்தது, தன்னை வெல்ல சத்திரியன் எவனுமில்லை எனும் பரசுராமனின் அகங்காரமும் அவனிடமே ஒழிந்தது.
அகங்காரம் ஒழிய ராமனை வணங்குங்கள் என்றது இந்த பூமி,
🌹ஆற்றல் கொண்டவன் ராமனை பணிந்தால் அனுமன் போல் வாழ்வான், அகங்காரம் கொண்டவன் அழிவான் என சொன்னது.
🌹ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் (மனைவி) என வாழ்ந்தவன் ராமன்..
ராமனின் ஒரே குறை, குறை காணமுடியா வாழ்வினை அவன் வாழ்ந்தான் என்பதன்றி வேறல்ல
ராமனை இங்கு எக்காலமும் நினைவில் நிற்க சொன்னார்கள், அவனை அனுதினமும் வணங்கினால் அவனை போல் நற்குணத்தில் ஒன்று வரும் என்றார்கள், அவன் அருள் பெருகும் என்றார்கள்.
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் !
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் !
ஜெய் ஸ்ரீராம் 🙏🌹🙏
Subscribe to:
Posts (Atom)
அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது. இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...
-
Yadirajan vadivalagu paRpamenaththigazh painGgazhalum thanN pallavamE viralum pAvanamAgiya paiNthuvarAdai padhiNtha marunGgazhagum mu...
-
Thiruppavai Pasuram is a popular bhajan addressed to Lord Perumal or Mahavishnu. Written by Saint Andal, also known as Nachiar and Ko...