Saturday, September 29, 2018

ஸ்ரீ_ஹரி_ஸ்தோத்ரம்


#ஸ்ரீ_ஹரி_ஸ்தோத்ரம் (Shree Hari Stotram)
-
"திருமாலின் தச அவதாரங்களை எடுத்துரைக்கும் மந்திரம்."
-
🌻#ஜகஜ்ஜாலபாலம் கசத்கண்டமாலம்
ஸ்ரச்சந்த்ரபாலம் மஹாதைத்யகாலம்
நபோ நீலகாயம் துராவாரமாயம்
ஸுபத்மாஸஹாயம் பஜேஹம் பஜேஹம் ..... 🌻(01)🌻
-
🌻#ஸதாம்போதிவாஸம் கலத்புஷ்பஹாஸம்
ஜகத்ஸந்நிவாஸம் ஸ்தாதித்யபாஸம் ।
கதாசக்ரஶஸ்த்ரம் லஸத்பீதவஸ்த்ரம்
ஹஸச்சாருவக்த்ரம் பஜேஹம் பஜேஹம் ..... 🌻(02)🌻
— — — — — — — — — — — — — — — — — — — — — —
🌻#ரமாகண்டஹாரம் ஸ்ருதிவ்ராதஸாரம்
ஜலாந்தர்விஹாரம் தராபாரஹாரம் ।
சிதாநந்தரூபம் மநோஜ்ஞஸ்வரூபம்
த்ருதாநேகரூபம் பஜேஹம் பஜேஹம் ..... 🌻(03)🌻
-
🌻#ஜராஜந்மஹீநம் பராநந்தபீநம்
ஸமாதாநலீநம் ஸதைவாநவீநம்
ஜகஜ்ஜந்மஹேதும் ஸுராநீககேதும்
த்ரிலோகைகஸேதும் பஜேஹம் பஜேஹம் ..... 🌻(04)🌻
— — — — — — — — — — — — — — —
— — — — — — — — — — — — — — — —
🌻#க்ருதாம்நாயகாநம் ககாதீஸயாநம்
விமுக்தேர்நிதாநம் ஹராராதிமாநம்
ஸ்வபக்தாநுகூலம் ஜகத்வ்ருக்ஷமூலம்
நிரஸ்தார்தஶூலம் பஜேஹம் பஜேஹம் ..... 🌻(05)🌻
-
🌻#ஸமஸ்தாமரேஶம் த்விரேபாபகேஸம்
ஜகத்பிம்பலேஶம் ஹ்ருதாகாஶதேஸம்
ஸதா திவ்யதேஹம் விமுக்தாகிலேஹம்
ஸுவைகுண்டகேஹம் பஜேஹம் பஜேஹம் ..... 🌻(06)🌻
— — — — — — — — — — — — — — — —
— — — — — — — — — — — — — — — —
🌻#ஸுராலிபலிஷ்டம் த்ரிலோகீவரிஷ்டம்
குரூணாம் கரிஷ்டம் ஸ்வரூபைகநிஷ்டம்
ஸதா யுத்ததீரம் மஹாவீரவீரம்
மஹாம்போதிதீரம் பஜேஹம் பஜேஹம் ..... 🌻(07)🌻🌻
-
🌻#ரமாவாமபாகம் தலாநக்ரநாகம்
க்ருதாதீநயாகம் கதாராகராகம்
முநீந்த்ரை ஸுகீதம் ஸுரை ஸம்பரீதம்
குணௌதைரதீதம் பஜேஹம் பஜேஹம் ..... 🌻(08)🌻
-
#பலஸ்ருதி
#இதம்_யஸ்து நித்யம் ஸமாதாய சித்தம்
படேதஷ்டகம் கண்டஹாரம் முராரே
ஸ விஷ்ணோர்விஸோகம் த்ருவம் யாதி லோகம்
ஜராஜந்மஶோகம் புநர்விந்ததே நோ ..... 🌻(09)🌻

இதி ஶ்ரீமத் பரமஹம்ஸ ஸ்வாமி ப்ரஹ்மாநந்த விரசிதம்
ஶ்ரீ ஹரிஸ் தோத்ரம் ஸம்பூர்ணம்.
-

Monday, September 24, 2018

ப்ரம்மம் ஒன்று தான் பர‌ ப்ரம்மம் ஒன்று தான்

ப்ரம்மம் ஒன்று தான் பர‌ ப்ரம்மம் ஒன்று தான் பர‌
ப்ரம்மம் ஒன்று தான் பர‌ ப்ரம்மம் ஒன்று தான்
-
தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே
தந்தனா னா பலே தந்தனா னா பலே
தந்தனா னா பலே தந்தனா னா
-
எத்தனையோ வேறுபாடு ஏழுலகம் காணும்
அத்தனைக்கும் ஸ்ரீ ஹரி அந்தராத்மா
எத்தனையோ வேறுபாடு ஏழுலகம் காணும்
அத்தனைக்கும் ஸ்ரீ ஹரி அந்தராத்மா
-
பூமியில் ஐந்தறிவு குலம் என்பது ஒன்றே
அத்தனைக்கும் ஸ்ரீ ஹரி அந்தராத்மா
பூமியில் ஐந்தறிவு குலம் என்பது ஒன்றே
அத்தனைக்கும் ஸ்ரீ ஹரி அந்தராத்மா
-
தந்தனா னா ஹரே தந்தனா னா ஹரே
தந்தனா னா பலே தந்தனா னா பலே
தந்தனா னா பலே தந்தனா னா

அமலன் ஆதிபிரான்

அமலன் ஆதிபிரான் -  பாசுரம் 10 .
************************************

கொண்டல் வண்ணனைக்  கோவலனாய் வெண்ணை

உண்டவாயன்   என்னுள்ளம்  கவர்ந்தானை

அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினை

கண்ட கண்கள் மற்றொன்றினைக்  காணாவே .  (10)

Meaning :

Lord Ranganatha is very dark  blue in colour , like the sea.

HE is Gopalan of Gokulam.

HE  swallowed Butter and so is with a mouth smeared with butter .

HE has fully captured my mind .

HE is the head of all Devas.

He is the Jewel of Srirangam .

Having seen Lord Ranganatha , the Amrutham ( nectar )  , my eyes will not see anything else. ( I do not want to see anything other than Lord Ranganatha. )

==================================

After the Azhwar sang this prabhandam , அமலன் ஆதிபிரான் ,  Lord Sri Ranganatha just made the azhwar merge in HIM.  So Great is The Lord`s LOVE AND COMPASSION to HIS DEVOTEES , that HE BLESSES THEM ALL instantly , irrespective of who they are by Religion,  Caste, Creed , Sex etc.

Let us keep praying The Lord without any expectation. Lord Sri Ranganatha will surely rid us of all our sins and relieve us from the sufferings of  Samsara, the cycle of births and deaths.

LET  US  RECITE  THE  SWEET  AND  SHORT  TEN  VERSES   OF Amalan Adhipiran (  அமலன் ஆதிபிரான்.) DAILY as our Prayer to Lord Sri Ranganatha.

( Amalan Adhipiran concluded.)
********************************

திருப்பாணாழ்வார்  திருவடிகளே  சரணம் .

Sunday, September 16, 2018

Bashyakara Sannidhi in Tirumala

While driving uphill, nearly 3/4th of the way up on the right-hand side in a hairpin bend you can spot a signboard saying “Bashyakara Sannidhi”. Stopping your vehicle here and walking about 15-20 steps up you will see the Sanidhi for Udayavar Sri Ramanujar.

The small temple here is on the walking path from plains to temple, at Step No.3260 in a place known as முழங்கால் முடிச்சு (Muzhankal Mudichu, knot below your knee and above angle) signifying the climb in this stretch is painful. It is said Sri Ramanujar rested here before he climbed up to Tirumala.


Sri Ramanujar is a Vaishnavite Acharya who is known for his reformist, was born in Sriperumbuthur and is credited with the design of daily rituals performed in Tirumala Tirupati sanctum-sanctorum till date.



Friday, September 14, 2018

வசுதேவன் வேறு! வாசுதேவன் வேறு!

வசு+தேவன்=செல்வம்+மிகுந்தவன்!


வசுதேவன் வேறு! வாசுதேவன் வேறு!
வசுதேவன் மகன் வாசுதேவன் என்று கொண்டாலும், இறைவனுக்கு வாசுதேவன் என்பது மூலப்பெயர்! அவதார காலங்களை எல்லாம் கடந்த பெயர் அது! பர-வாசுதேவன்!)
எப்படி H2O என்பதில் இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு உயிர்வளிக்குக் (ஆக்சிஜன்) கட்டப்பட்டிருக்கு?Single Covalent Bond என்பதாலே! இது எத்தனை ஹைட்ரஜன் அணுக்களையும் அதனதன் தன்மைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளக் கூடியது! Thatz why we have more covalent bonds than ionic bonds.

அதனால் தான் H2O என்னும் நீருக்கு அனைத்தும் கரைக்க வல்ல குணம் (Universal Solvent)! நாரணம் என்பதும் இந்த நீர் தான்! இந்த வேதியியல் நீர் என்பதைக் கொண்டே பல நுட்பமான படைப்புத் தத்துவங்களை அறிவியல் பார்வையில் புரிந்து கொள்ள முடியும்!

எப்படி பல ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு உயிர்வளிக்குக் கட்டப்பட்டிருக்கோ, அதே போல பல ஆத்மாக்களும் ஒரே பரம்பொருளுடன் கட்டப்பட்டு இருப்பது பிரணவ நாதம் என்ற சப்த மாத்திரத்தினால்!படைப்புத் தொழிலைப் பிரணவம் கொண்டு செய்கிறேன் என்று பிரம்மன் கூறுவதும் இதனால் தான்!

அது போல ஒரே இறைவன், பல கோபிகைகளுக்கும், பலப்பல கண்ணன்களாய்த் தோற்றம் காட்டுகிறான்! இப்படி மாயம் செய்யும் வசுதேவனின் மகனே, வாசுதேவா! உனை அல்லால் எங்களுக்கு வேறு பரம்/கதி இல்லை!
கள்ளச் சிரிப்பழகன், கருப்பழகன், எழுகமலப் பூவழகன், கண்ணன்! அவனைச் சுற்றிச் சத கோடி கோபியர்கள்! இருவரையும் கட்டி வைப்பது புல்லாங் குழலின் பிரணவ நாதம்!

சரி, கோடி கோபியர்கள் சூழ்ந்தால் ஒரே ஒரு கண்ணன் என்ன செய்ய முடியும்? அத்தனை பேரும் அவரவர் அபிமானித்தாற் போலே, அவரவர்க்கு அவ்வவ்வாறு காட்சி தருகிறான் இறைவன்! இந்தக் க்ளோனிங் எஃபெக்ட் வேறு எந்த அவதாரத்திலும் இல்லை!

Thursday, September 13, 2018

அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோவில்

🌺🌺 108 திவ்யதேசங்கள் 🌺🌺

அருள்மிகு திருநறையூர் நம்பி  திருக்கோவில் :-
திருநறையூர் (நாச்சியார் கோவில்)

மூலவர்           :     சீனிவாசன், திருநறையூர் நம்பி, சுகந்தவனநாதன்.

தாயார்            :     வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார்

உற்சவர்         :     வாசுதேவன்

கோலம்          :      நின்ற திருக்கோலம்

திசை             :      கிழக்கு

விமானம்      :      சீனிவாச விமானம், ஹேம விமானம்

தீர்த்தம்         :      மணி முத்தா புட்கரணி

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்

நாமாவளி      :  ஸ்ரீ நம்பிக்கை நாச்சியார் ஸ்ரீ வஞ்சுளவல்லி ஸமேத ஸ்ரீ நம்பிஸ்வாமிநே நமஹ

ஊர்              :     நாச்சியார் கோவில்

🌺🌺 தலவரலாறு :-

சோழர் பரம்பரையில் வந்துதித்த மிகச் சிறந்த சிவ பக்தனும், 63 நாயன்மார்களில் ஒருவனுமான, எண்டோள் ஈசர்க்கு எழில்மாடம் எழுபது அமைத்த "கோச்செங்கட்சோழன்" கட்டிய வைணவத் திருத்தலம் "திருநறையூர்" என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

கோச்செங்கட்சோழன் இத்தலம் வந்து வழிபட்ட சம்பவங்கள், நாயன்மார்கள் வரலாற்றைக் கூறும் "சேக்கிழார் பெரியபுராணத்தில்" பதிவாகவில்லை.

🌺🌺 பாசுரம் :-

ஆயினும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் இத்தல இறைவன் மீது பாடிய பாசுரங்களில் தெளிவாகப் பாடியுள்ளார்.  கல்வெட்டுகளும் அதை உறுதி செய்கிறது.

இருக்கிலங்கு திருமொழிவா
யெண்டோ ளீசற்கு
எழில்மாடம் எழுபது செய்(து)
உலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த
கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்
களே.          - திருமங்கையாழ்வார்.

🌺🌺 திருமாலை வணங்கிய நாயன்மார் :-

சிறந்த சிவ பக்தனாகவும், அரசனாகவும் விளங்கிய இம்மாமன்னன் மாற்றாரிடம் தோற்று நாடு இழந்து, மறைந்து வாழும் நிலை வந்தது.  அச்சமயத்தில் ஒரு நாள்  மணி முத்தா நதிக்கரையிலிருந்த முனிவர்களைக் கண்டு வணங்கி தன்னுடைய குறையை எடுத்துக் கூறினான்.

அதற்கு, முனிவர்கள் திருநறையூர் நம்பி திருத்தலத்தில் பெரிய வாள் ஒன்று உள்ளது. பரந்தாமனான நம்பியை வழிபட்டு அவ்வாளினைக் கொண்டு போர் புரிந்தால் வெற்றி காண்பாய் என்று உபதேசம் செய்தனர்.

அவ்வாறே, மணிமுத்தா நதியில் நீராடி இத்தல நம்பியை வணங்கி  தெய்வ வாளினைப்   பெற்று வெற்றி வாகை  சூடி வைணவ பக்தனாகவும் மாறினான்.

இப்பெருமாளின் முக்கிய பூஜைக்கு நிலம் அளித்தான்.  இம்மன்னன் நம்பியின் மீது கொண்ட பக்தியையும், தெய்வ வாள் பெற்றதையும், திருமங்கையாழ்வார் தாம் பாடிய திருமொழியில் அழகாகப் பாடியுள்ளார்.

கோச்செங்கட்சோழன் பிரம்மாண்டமான முறையில் கோவில் அமைத்தான்.  அப்போது இவ்வூர் "நறையூர்" என்று பெயர் பெற்று விளங்கியது. அதனால், இத்தல இறைவனுக்கு "திருநறையூர் நம்பி" என்பதோ திருநாமம். 

பிற்காலத்தில் "சீனிவாசப் பெருமாள்" என்ற திருநாமம் பெற்றார். இறைவனுடன் உறையும் திருமகள் தாயாருக்கு வஞ்சுளவல்லி தாயார் என்பது திருநாமம்.

🌺🌺நாச்சியார் கோவில் :-

இங்கு தாயாரே சிறப்பு பெற்று விளங்குவதால் இத்தலம் "நாச்சியார் கோவில்" எனப் பெயர் பெற்றது.  பெருமாள் கோவில்களில் தாயார் சன்னிதி பெருமாளை விட சற்று பின்னோக்கி அமைந்திருக்கும். 

ஆனால், இத்தலத்தில் சிவாலயங்களில் அம்பாள் சன்னிதி  அமைந்திருப்பதைப் போல தாயார் சற்று முன்நோக்கி நின்ற கோலத்தில் பெருமாளின் சன்னிதியிலேயே காட்சி தந்து அருளுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இதன் காரணமாகவே இத்தலம் நாச்சியார் கோவில் எனப் பெயர் பெற்றோ விளங்குகிறது.

🌺🌺 கல் கருடசேவை :-

பெருமாள் கோவில் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது "கல் கருட சேவை". இங்கு பெருமாள் கல் கருட வாகனத்தில் திருவீதியுலா வருவது எந்த திருத்தலத்திலும் காணமுடியாத தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இங்கு கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் விளங்குகிறார்.  உற்சவராக கருடன் பெருமாளைத் தாங்கி திருவீதி உலா வரும்போது அற்புதம் ஒன்று நிகழ்கிறது.

கல் கருட உற்சவர், சன்னிதியில் இருந்து தூக்கிச் செல்லும் பொழுது கனமானது, பாதம் தாங்கிகளில் நான்கு நபர்களாலேயே தூக்கி விடக்கூடிய அளவிலேயே இருக்கும். 

இம்மூர்த்தி பிரகாரம் ஒவ்வொன்றைக் கடக்கும்பொழுது கல்கருடனனின் கனம் அதிகரித்துக் கொண்டே வருவதால், தான்கு பேர் என்பது 8, 16, 32, 64 மற்றும் 128 என்பதாகப் பாதந்தாங்கிகளின் எண்ணிக்கை உயரும்.

உற்சவம் நிறைவாகி மீண்டும் சன்னதியை அடைய வரும்போது, இதே கல் கருடனின் கனம் குறைந்து கொண்டே வருவதால் 138 பாதந்தாங்கிகள் என்பது 64, 32, 16, 8 என்று குறைந்து சன்னிதியை அடையும் போது 4பாதந்தாங்கிகள் என்ற கணக்கில் முடிவுறும்.

கருட சேவை உற்சவத்தின் போது பெருமாளுடன் வஞ்சுளவல்லி தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருகின்றனர்.

🌺🌺 சிறப்புகள் :-

வைகுண்ட வாசனான கண்ண பரமாத்மா குடும்பத்துடன் காட்சி தந்து அருளும் அற்புதத்தலம்.  63 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கட் சோழன் நாயனாரால் அமைக்கப்பட்ட திவ்யதேசம்.

இறைவன் திருநறையூர் நம்பி கல்கருட வாகனத்தில் உற்சவம் எழுந்தருளும் ஒரே திவ்யதேசம்.   தாயார் திருமகள் வஞ்சுளவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

பெருமாள் கல்கருட வாகனத்தில் வீதியுலா வரும் சிறப்பு வாய்ந்த திருத்தலம். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் திருநறையூர் நம்பியின் சக்கரங்களைக் கொண்டு பஞ்ச ஸமஸ்காரங்களைச் செய்து கொண்ட திருத்தலம்.

திருமங்கையாழ்வார் 111 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் குடந்தையிலிருந்து 10 கி.மீ தொலைவில் நாச்சியார் கோவில் உள்ளது.  ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.

அருள்மிகு திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்.
அருள்மிகு வஞ்சுளவல்லி தாயார் திருவடிகளே சரணம்

"ஓம் நமோ நாராயணாய நமஹ".

Wednesday, September 12, 2018

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோவில்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோவில் :-

திருவிண்ணகர் (எ) ஒப்பிலியப்பன் கோவில்

மூலவர்             :     ஒப்பிலியப்பன்

தாயார்              :     பூமிதேவி

உற்சவர்            :     ஸ்ரீனிவாசன்

கோலம்             :     நின்ற திருக்கோலம்

திசை                 :     கிழக்கு

விமானம்           :    சுத்தானந்த விமானம்

தீர்த்தம்              :     அகோராத்ரா புட்கரணி,  ஆர்த்தி புட்கரணி, சாரங்க தீர்த்தம்,  சூரிய தீர்த்தம்,  இந்திர தீர்த்தம்

மங்களாசாசனம்  :     பேயாழ்வார் - 2 பாசுரம்,  நம்மாழ்வார் -11 பாசுரம், திருமங்கையாழ்வார் - 34 பாசுரம்.

நாமாவளி          :     ஸ்ரீ பூமிதேவி ஸமேத ஒப்பிலியப்பன் ஸ்வாமிநே நமஹ.

ஊர்                      :     திருநாகேஸ்வரம், கும்பகோணம்.

🌺🌺 தலவரலாறு :-

முற்காலத்தில் மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேய மகரிஷி, "பூமாதேவி" தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென்றும், "திருமால்" தனக்கு மாப்பிள்ளையாக வேண்டுமென்றும் ஆசையுற்று இங்குள்ள துளசி வனத்தில் கடும் தவம் செய்தார்.

அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த பெருமாள், பெரிய பிராட்டியை நோக்கி "தேவி! நீ சென்று மார்க்கண்டேயரின் மகளாக இரு.  தக்க நேரத்தில் நான் வந்து உன்னுடன் உறைவேன்" என்றார்.

அதற்கு மனமிறங்கிய பூமாதேவி ஒருநாள் துளசிச் செடியின் அருகே இரண்டு வயது பெண் குழந்தையாகத் தோன்றினார். அக்குழந்தை பூமி பிராட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிய மார்க்கண்டேய மகரிஷி "பூமாதேவி"எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.

"பூமாதேவி" திருமண வயதை அடைந்தாள்.  அவளுக்கு திருமணம் செய்து வைக்க தக்க மணமகனைத் தேடினார் மார்க்கண்டேயர்.  அவரிடம் நாராயணர் கொஞ்சம் விளையாடத் தீர்மானித்தார்.

 "திருமால்" வயோதிக அந்தணர் வேடம் பூண்டு, கந்தலான ஆடையை உடுத்திக் கொண்டு முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார்.  அவரை வணங்கி வரவேற்ற முனிவர், "தாங்கள் விரும்புவது யாது?" எனக் கேட்டார்.

 அதற்கு முதியவர், "நான் உயர்ந்த குடியில் பிறந்தவன். வயதான காரணத்தால் தள்ளாமையால் வருந்துகிறேன். மனைவி இல்லாதவனுக்கு இல்லறமில்லை.  தங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்" என்றார்.

இதைக்கேட்டு திடுக்கிட்ட முனிவர் "இதற்கு நான் உடன்பட மாட்டேன்" என்று உறுதியுடன் கூறிவிட்டார்.

ஆனால், முதியவரோ "தங்கள் மகளை திருமணம் செய்து தராவிட்டால் தங்கள் எதிரிலேயே உயிரை விடுவேன்" என்றார்.

செய்வதறியாது திகைத்த முனிவர்,  தனது மகளிடம் சென்று நடந்ததை விளக்கினார்.  அதற்கு அவள், வயோதிகரை மணக்க சம்மதிக்கமாட்டேன்.  வற்புறுத்தினால் உயிரை விட்டு விடுவேன் என்றாள்.

மார்கண்டேய மகரிஷி வேறு வழி  தெரியாமல் திருப்பதி வெங்கடேச பெருமாளை நினைத்து வழங்கினார். அப்போது அந்தணர் வெங்கடேசப் பெருமாளாகக் காட்சி தந்தார்.

முனிவரே உமது ஆசையை நிறைவேற்றவே இங்கு வந்தேன். உமது மகள் பூமாதேவியை எனக்கு திருமணம் செய்து தர வேண்டும்.

உமது மகள் சிறு பெண்ணாதலால், அவளுக்கு உப்பு போட்டு உணவு வகை எதுவும் சமைக்கத் தெரியாது என்று கூறினீர்கள். ஆதலால், "இந்த தலத்தில் யாம் உப்பை மறுத்தோம்.  உப்பில்லாமல் எனக்கு நைவேத்தியம் படைப்பவரும், உப்பற்ற பண்டங்களை உண்பவரும் எனது அருளை பரிபூரணமாக பெறுவர். உமது மகளை எனக்குத் திருமணம் செய்து தருவீராக!" என்றார்.

இதைக்கேட்டு மகிழ்ந்த முனிவர், "பரந்தாமனே! எனது பதல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள்.  நீர் எந்நாளும் எனது புதல்வியுடன் இத்தலத்திலேயே இருக்க வேண்டும். இந்த தலம் எனது பெயரால் அழைக்கப்பட வேண்டும். உப்புற்ற உனது உணவு பக்தர்களுக்கு, பெரும் சுவையுடன் இருக்க வேண்டும்" என்ற வரங்களைக் கேட்டார். பெருமாளும் அவர் கேட்ட வரங்களை அருளி "பூமாதேவியை" மணந்தார்.  இன்றளவும் பூமாதேவியுடன் தம்பதியாக திருமண கோலத்திலேயே காட்சி தருகிறார்.

உப்பில்லாத உணவையே விரும்பி ஏற்றதால் "உப்பிலியப்பன்" என்ற திருநாமம் பெற்றார்.  அப்பெயர் மருவி "ஒப்பிலியப்பன்" என்று ஆனது. இன்றளவும் இவருக்கு உப்பில்லாத உணவு வகைகளே நைவேத்தியமாகச் சமர்ப்பிக்கப்படுகிறது.

🌺🌺 சிறப்புகள் :-

உப்பில்லாத உணவு படைக்கப்படும் ஒரே திவ்யதேசம்.   தாயார் பூமிதேவி மூலவருக்கு அருகிலேயே காட்சி தரும் திவ்யதேசம்.

செண்பக வனம், ஆகாசவனம், திருவிண்ணகர், மார்க்கண்டேய சேத்திரன், தென்திருப்பதி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் தலம். 

ஆழ்வார்களில் ஒருவரன "நம்மாழ்வார்" பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என ஐந்து வடிவங்களில் காட்சி கண்ட தலம்.

மார்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தர்மதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்த தலம்.

மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.  திருநாகேஸ்வரம் இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு ஒப்பிலியப்பன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு பூமிதேவி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺

"ஓம் நமோ நாராயணாய நமஹ".

நாராயணா! ஸ்ரீஹரி



நாரதர் தினமும் லட்சம் தடவையாவது "நாராயண' என்ற நாமத்தை ஜெபித்து விடுவார். ஒரு கட்டத்தில், அவருக்கு தன்னை விட பெரிய நாராயண பக்தன் இல்லை என்ற எண்ணம் உருவானது. மிகுந்த பெருமையுடன் வைகுண்டம் சென்றார். ""நாராயணா! ஸ்ரீஹரி! பக்தவத்சலா! அடியேனின் நமஸ்காரம். ஒன்று கேட்பேன். பதிலளிப்பீர்களா?'' என்றார். ""உம்...கேள், உலகத்திலுள்ள எல்லார் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையிலிருப்பவன் ஆயிற்றே, கேள்.. சொல்கிறேன்,'' என்றார். ""இந்த உலகில் உமது சிறந்த பக்தன் யார் என சொல்வீர்களா?'' ""உம்...ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்திலே இருக்கிற திருத்தங்கல் வெங்கடேசன் தான் சிறந்த பக்தன்,'' என்றார் பகவான். நாரதருக்கு ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஆகிவிட்டது. அப்படிப்பட்ட பக்தனை பார்த்தே தீருவது என்று திருத்தங்கல் வந்தார். தன்னை மறைத்துக் கொண்டு வெங்கடேசனைக் கவனித்தார். வெங்கடேசன் காலையில் எழுந்தான். கடன்களை முடித்துவிட்டு "ஹரி நாராயணா' என்று சொல்லிவிட்டு கலப்பையுடன் வயலுக்குப் போனான், அங்கே காத்திருந்தவர்களிடம், ""நீ உழு, நீ விதைக்கிற வேலையைப் பார், நீ களத்துமேட்டுக்கு போ, நீ உரம் போடு,'' என்று வேலையைப் பிரித்துக் கொடுத்தான். அவனும் வேலையில் இறங்கிவிட்டான். மாலையில், வீட்டுக்கு கிளம்பினான். "ஹரி நாராயணா' என்றபடியே கலப்பையை தூக்கி தோளில் வைத்தான். இரவாகி விட்டது. அவன் மனைவி சோறு போட்டாள். சாப்பிட்டான், தூங்கிவிட்டான். உணர்ச்சிவசத்தின் உச்சிக்கே போய்விட்டார் நாரதர். "இவனைப் போய் சிறந்த பக்தர் என்றாரே பகவான், நியாயம் கேட்போம்,'' என்றவர் அடுத்த கணம் வைகுண்டத்தில் நின்றார். ""பகவானே! அந்த வெங்கடேசன் இரண்டு தடவை தான் உன் நாமம் சொன்னான். நான் லட்சம் தடவை சொல்கிறேன். அவனா உயர்ந்த பக்தன்!'' என்று வெறுப்புடன் கேட்டார். ""நாரதா! அவன் எத்தனை தடவை ஹரிநாமம் சொன்னான்?'' ""இரண்டு தடவை''. "" சரி! அவனுக்கு எத்தனை வேலைகள் இருந்தன?'' ""நிறைய வேலை பார்த்தான், ஏற்றம் இறைத்தான், நாற்று நட்டான், உழுதான், பணியாளர்களை மேற்பார்வை செய்தான், கஷ்டப்பட்டு உழைத்தான்''. ""பார்த்தாயா! பல வேலைகளுக்கு மத்தியில் அவன் இரண்டு தடவை என் நாமம் சொன்னான். அவனைக் கவனிக்கும் ஒரே வேலையைச் செய்த இன்று ஒரு தடவை கூட என் நாமத்தைச் சொல்ல மறந்து விட்டாயே!'' என்றார். அதன்பிறகு நாரதர் பகவானிடம் பேசவே இல்லை.

Monday, September 10, 2018

ஸ்ரீ ராம தரிசனம்

ஸ்ரீ ராம தரிசனம்

‘ராமா.. நீயா என் வீட்டுக்கு வந்தாய்?’
தியாகராஜரின் அதிகாலை உருக்கம்

திருவையாற்றில் ஒரு மாலைப் பொழுது. தியாகராஜ சுவாமிகள் தனது வீட்டுத் திண்ணையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

‘‘நமஸ்காரம்...’’

குரல் கேட்டுக் கண் விழித்தார் தியாகராஜர். 80 வயது வயோதிகர் ஒருவரும், அவரின் மனைவியும், சுமார் 20 வயது இளைஞன் ஒருவரும் கைகூப்பி நின்றிருந்தனர் தெருவில். அவர்கள் உடம்பில் அழுக்கும், புழுதியும் படிந்திருந்தன. வெகு தூரத்திலிருந்து வந்தவர்கள் போல் தோற்றம் அளித்தனர்.

‘‘வாங்கோ... உள்ள வாங்கோ...’’ - அவர்களை வரவேற்று நமஸ்காரம் செய்தார் தியாகராஜர்.

‘மாதா, பிதா, குருவுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை தெய்வமாக நினை!’ என்கிறது உபநிஷத்துகளும் வேதங்களும். ‘அதிதி தேவோ பவ.’

வயோதிகர் பேச ஆரம்பித் தார்: ‘‘நாங்க வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து க்ஷேத்ராடனம் பண்ணிண்டு வர்றோம். ராமேஸ்வரம் போகணும். பகவான் கருணை வைக்கணும்... காலைல எழுந்து ஸ்நானம் செஞ்சுட்டு நடக்கணும். இன்னிக்கு ராத்திரி உங்க வீட்டுல தங்கலாம்னு இருக்கோம்!’’

‘‘ஆகா... தாராளமா தங்குங்கோ!’’ என்று மகிழ்வுடன் சம்மதித்த தியாகராஜர், தன் மனைவியிடம் இரவில் அவர்களுக்கும் சேர்த்துச் சமைக்கச் சொன்னார்.

அவர் மனைவியோ, ‘‘நமக்கே ராத்திரி சாப் பாட்டுக்கு அரிசி இல்லே... இவங்களை எப்படி உபசாரம் பண்றதுனும் தெரியலை. சரி... பக்கத்துல போய் கொஞ்சம் அரிசி கடன் வாங்கிண்டு வரேன்!’’ என்று கையில் பாத்திரத்துடன் மனைவி கிளம்பினார்.

அதை கவனித்த வயோதிகர், ‘‘எங்களுக்காகச் சமைக்க வேண்டாம். என்கிட்ட தேனும் தினை மாவும் இருக்கு. ரெண்டையும் பிசைஞ்சு, ரொட்டி மாதிரி தட்டி, சுட்டுச் சாப்பிட்டா ருசியா இருக்கும். நாம எல்லோரும் அதையே சாப்பிடுவோமே!’’ என்றார்.

அதன்படி அன்று இரவில் அனைவரும் பசியாறினர். வீட்டுத் தாழ்வாரத்தில் படுத்த விருந்தாளிகளிடம் தியாகராஜர் க்ஷேத்திராடனம் பற்றி விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தார்.

கோழி கூவிற்று. ‘‘அடடா... பொழுது விடிஞ்சாச்சா?’’ என்று எழுந்தார் வயோதிகர். உடனே அவர் மனைவியும், இளைஞனும் கூட எழுந்தனர். ‘‘நாங்க அப்படியே காவிரியில ஸ்நானம் செஞ்சுட்டுக் கிளம்பறோம்!’’ என்றார் முதியவர்.

தியாகராஜர், தன் மனைவியுடன் அவர்களை நமஸ்காரம் செய்தார். பின்பு வாசலில் இறங்கி, அவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் தியாகராஜர். சட்டென்று அந்த வயோதிகர் வில்லுடன் ராமபிரானாகவும், அவருடன் வந்த முதிய பெண்மணி சீதா பிராட்டி யாகவும், இளைஞன் அனுமனாகவும் காட்சியளித்து மறைந்தனர்.

தியாகராஜர் பரவசத்துடன் தெருவில் ஆனந்தக் கூத்தாடினார். ‘‘ராமா... ராமா... நீயா எனது வீட்டுக்கு வந்தே?... என் தெய்வமே... நீயா வந்தாய்? ரொம்ப தூரத்திலேருந்து நடந்து வந்ததா
சொன்னியே... பேசியே ராத்திரி முழுக்க உன்னை தூங்க விடலையே... மகாபாவி நான்!

காலைப் பிடித்து அமுக்கி, உன் கால் வலியைப் போக்காமல் பேசிக் கொண்டே இருந்தேனே. ராத்திரி நீ கொண்டு வந்ததை நாங்க சாப்பிட்டோமே? என் வீட்டுல தரித்திரம் தாண்டவமாடறதுனு தெரிஞ்சிண்டு, நீ ஒரு தாய்- தகப்பனா இருந்து எங்க பசியைப் போக்கினியே...’’ என்று புரண்டு புரண்டு அழுதார் தியாகராஜ சுவாமிகள்.

அப்போது அவரிடமிருந்து பிறந்த வசந்தா ராக கீர்த்தனைதான், ‘சீதம்ம மாயம்மா...’ என்பது.

ராம் ராம் ராம் ராம் ராம் ராம்....

2 நிமிடத்தில் கீதை

2 நிமிடத்தில் கீதை

ஸ்வாமி! 5 நிமிடங்கள்தான் இருக்கு ஆபீஸிலிருந்து கிளம்ப. அதுக்குள்ள பகவத் கீதையை சொல்லமுடியுமா?,

         அடியேன், "ஒ...இன்னும் 5 நிமிடம் இருக்கா?" நமக்கு இரண்டே நிமிடம் போதுமே கீதையைச் சொல்லிவிட.. என்று கூறி பகவத் கீதை என்பது ஒன்றுமில்லை.

         #விடு - #பிடி அல்லது #பிடி - #விடு அவ்வளவுதான் என்றவுடன்

         கேட்டவர் ஒரு கோபமான பார்வையுடன் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தார்.

         பிறகு விளக்கிய போது உணர்ந்தார்...

         அடியேன், #விடு - #பிடி  என்றால் இந்த உலக பந்தங்களையெல்லாம் உதறித் தள்ளிவிடு. அதேநேரம் பரந்தாமன் பாதங்களை இறுகப் பிடித்துக் கொள் அல்லது இறுகப் பற்றிக் கொள் என்று அர்த்தம்.

         ஆனால் நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு இந்த உலக பந்தங்களையெல்லாம் உதறித் தள்ளுவது சுலபத்தில் முடிகின்ற காரியமில்லை. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களை இறுகப் பற்றுவது?

         அப்படியானால் கவலை வேண்டாம். இன்னொரு வழி இருக்கின்றது. அதுதான் அடியேன் சொன்ன இன்னொன்று அதாவது #பிடி - #விடு.

         என்ன ஓய் குழப்புகிறீர்?

         குழப்பம் ஒன்றுமில்லை. பிடி என்றால் முதலில் பரந்தாமன் திருப்பாதங்களைப் பிடி அல்லது பற்று. அந்தப் பிடி இறுக இறுக இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாகத் தகர்ந்துவிடும்.

         அது எப்படி பற்று தானாக விலகும்?

         சரி..உமக்கு இப்போ ஒரு உபமானம் சொல்லுகிறேன்..கேளும்.

         ஹோமத்துக்கான சில சமித்துக் குச்சிகள் ஒரு கயிற்றால் இறுக்கக் கட்டப்பட்டுள்ளன. அதனை அவிழ்க்க முடியவில்லை.  (இது நம்முடைய உலக பாசபந்தம்).

         வேறொரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே அதைவிட இறுகக் கட்டி ஒரு குலுக்கு குலுக்கி இறுக்கினால் (இந்த புதிய கட்டு என்பது பகவானின் திருப்பாதத்தைப் பற்றிய நம் உறுதியான பிடிப்பு), புதிய கயிற்றின் இறுக்கத்தில் பழைய கயிற்றின் இறுக்கம் தானாகத் தளர்ந்து கழன்று  விடும். அதுபோல நாம் பகவான் மீதான நம் பற்றை இறுக்கிக் கொண்டே சென்றால் உலகப் பற்று என்பது நம்மைவிட்டு தானகவே விலகிவிடும்.

         உலக பந்தங்களை விட்டு பரந்தாமன் திருப்பாதங்களைப் பற்றுவது ஞானிகளின் ஞான மார்கம்.

         பரந்தாமன் திருப்பாதங்களை முதலில் பற்றி தானாக உலக பந்தங்களை விட்டுவிடுவது பக்தி மார்கம். அதாவது சாமான்ய மக்களான நமக்கானது.

         இவ்வளவுதான் கீதையின் தத்துவம்.

                                #ஆலயதரிசனம்

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...