Wednesday, October 2, 2024

 ராகம்: ஹம்சத்வனி


கலை நிறை கணபதியே காஞ்சி காமகோடியே

காலமெல்லாம் வேண்டுகிறோம் உம் துணையே

(கலை நிறை கணபதியே)


வினை தீர்க்கும் விக்னவிநாயகனே அருள்வாயே

வேண்டுவன எல்லாம் தரும் வேதநாயகனே வருவாயே

(கலை நிறை கணபதியே)


ஔவைக்கு அருள் புரிந்த ஞான கணபதியே

ஔடதமாகப் பிணி போக்கும் ஔடதமூர்த்தியே

பிள்ளையார் சுழி போட்டு எச்செயலும் செய்வோமே

பெரியவா பாதம் தொட்டு எப்பணியும் தொடங்குவோமே

(கலை நிறை கணபதியே)


ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர 

காஞ்சி சங்கர காமகோடி சங்கர 

Vani Jayaraman 

01.11.2023

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...