Wednesday, October 25, 2023

வீட்டின் வாசலில் கோலமில்லை! வாசல் தெளிக்கவில்லை! விளக்கு எரியவில்லை! பூஜை விளக்கில் ஒரு பூ கூட இல்லை! வீட்டு முற்றத்தில் துளசி இல்லை! ஆனால் மங்களத்தை மட்டும் எதிர்பார்க்கின்றனர்...!


வாசல் தெளித்து கோலமிடுவது மிக முக்கியமானது! ஒரு வீட்டுற்கு வரும் மருமகள் பற்றி அறிந்து கொள்ள அவள் கோலமிடுவதை ஒரு குறிப்பாக கொண்டனர் பெரியோர்கள்..அவள் வீட்டின் முகப்பில் இடும் கோலம் அந்த வம்சத்தின் வளர்வை குறிக்க வல்லது..


திங்களும் வியாழனும் அவள் விளக்கை துலக்கத்துலக்க அந்த வம்சமே துலங்கும் என்பது பெரியோர் வாக்கு! 


காலையில் பூஜை அறையில் சுடர்விடும் தீபமும் கமழும் வாசனாதி தூபமும் ஒரு நாளை அற்புதமாக்கிவிடும்! தலைவன் அந்த பூஜை மேடையில் நெற்றிக்கு இடும் திலகம் அவனது வெற்றித்திலகமாக கட்டாயம் மாறும்..!


ஒரு சுமங்கலி வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி புஷ்பம் சாற்றி செய்யும் இல்ல வழிபாடு ஆயிரம் ஆலய வழிபாடுகளுக்கு சமானமானது என்பது என் கருத்து...வீட்டில் தெய்வத்திற்கு இடம் தந்த முன்னோர் கலாச்சாரம் எங்கே?!


வீட்டின் hall பகுதியில் பூஜை மேடை அமைப்பது எங்கள் ஊர் வழக்கம்.. இன்றோ ஒரு சுற்றுப்பெட்டிக்குள் விளக்கை அடைத்து வைக்கிறோம்... எங்கே நம் பூர்வ வழிபாட்டு முறைகள்..?!


வாசலில் கோலம் போட்டால் லட்சுமி கடாட்சம். பிள்ளை நெற்றியில் பக்தியின் சாயலில் நின்ற திருநீறு அவனை அபாயத்திலிருந்து ரட்சித்துவிடும்! 


நிற்க


நீங்கள் பணமே கொடுத்தாலும் நல்ல திருநீறும், நல்ல குங்குமமும், நல்ல சந்தனமும் கிடைப்பதில்லை.., 


பஸ்மஸ்னாநம் பவித்ரம்" என விபூதி இடுவது புனிதம் என்றனர்


குங்குமம் மங்களத்தின் அடையளம்..,


வைராக்யேன சந்தன" என சந்தனம் இடுவது வைராக்கியம் தர வல்லது என முன்னோர் சொல்லி உள்ளனர்...


இவற்றின் பயன்களை அறியாமல் நாம் இருத்தலாகாது...

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...