சௌமாங்கல்யம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், கல்வி, எல்லாம் தரக்கூடிய மந்த்ரம்..!
#ஸ்ரீஅபிராமி_ஸ்தோத்ரம்
🙏நமஸ்தே லலிதே!தேவி
ஸ்ரீ மந்ஸிம்ஹாஸநேச்வரி !
பக்தாநாம் இஷ்டதே ! மாத:
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏
🌷ஸ்ரீ லலிதையே! உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!
🙏சந்த்ரோதயம் க்ருதவதி!
தாடங்கேந , மஹேச்வரி
ஆயுர் தேஹி ஜகத்மாத:
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏
🌷மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழுநிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!
🙏ஸுதாகடேச ஸ்ரீ காந்தே! சரணாகதவத்ஸலே .
ஆரோக்யம் தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏
🌷அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரண் அடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே! அம்மா, அபிராமியே உனக்கு நமஸ்காரம். எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!
🙏கல்யாணி! மங்களம் – தேஹி, ஜகன்மங்கள காரிணி!
ஐச்வர்யம் தேஹி-மே, நித்யம்.
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏
🌷கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வ லோகங்களையும் மங்களகரமாக்குபவளே! நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக! அபிராமித்தாயே உனக்கு நமஸ்காரம்!
🙏சந்த்ர மண்டலமத்யஸ்தே! மஹாத்ரிபுரஸுந்தரி!
ஸ்ரீ சக்ரராஜ நிலயே ஹி
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏
🌷சந்திர மண்டலத்தின் நடுவே அமர்ந்த மகாதிரிபுர சுந்தரி நீயே அல்லவா! ஸ்ரீ சக்ர ராஜதானியின் அரசியான அபிராமியே உனக்கு நமஸ்காரம்!
🙏ராஜீவலோசனே, பூர்ணே!
பூர்ண சந்த்ரவிதாயினி!
ஸௌபாக்யம் தேஹிமே நித்யம்.
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏
🌷தாமரை போன்ற கண்ணழகியே! முழுமையானவளே, முழு நிலவைக் காட்டுபவளே, எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக! ஸ்ரீ அபிராமியே, உனக்கு நமஸ்காரம்!
🙏கணேசஸ்கந்த ஜநநி!
வேதரூபே! தனேச்வரி!
வித்யாம் ச தேஹி மே கீர்த்திம்
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏
🌷ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே, வேத சொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே. எனக்கு வித்தையில் கீர்த்தியைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!
🙏ஸுவாஸிநீ ப்ரியே மாத: ஸௌமங்கல்ய விவர்த்தினி!
மாங்கல்யம், தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏
🌷சுவாசினிகளால் போற்றப்படுபளே, பெண்கள் கணவருடன் வாழும் காலத்தை அதிகரித்து சௌமாங்கல்ய பதவியை அதிகரிக்கச் செய்பவளே. எனக்கு நித்ய சௌமாங்கல்யத்தை அருள்வாய் தாயே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!
🙏மார்க்கண்டேய மஹாபக்த ஸுப்ரஹ்மண்ய ஸுபூஜிதே.
ஸ்ரீ ராஜராஜேச்வரீ த்வம்ஹி!
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏
🌷மார்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யர் என்ற அபிராமி பட்டராலும் நன்கு பூஜை செய்து வழிபடப் பட்டவளே! ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா. ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!
🙏ஸாந்நித்யம் குரு கல்யாணி
மம பூஜா க்ருஹே சுபே
பிம்பே தீபே ததா புஷ்பே
ஹரித்ரா குங்குமே மம🙏
🌷கல்யாணியே! மங்களம் அருள்பவளே! என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக! உனது அருள் நிறைந்ததாக ஆக்குவாயாக!
🙏ஸ்ரீ அபிராம்யா இதம்
ஸ்தோத்ரம்
ய: படேத் சக்திஸந்நிதௌ
ஆயுர் பலம் யசோ வர்ச்சோ
மங்களம் ச பவேத் ஸுகம்🙏
🌷ஸ்ரீ அபிராமியன்னையின் இந்த துதியினை அகம் ஒன்றி தினம் சொல்ல எனக்கு ஆயுள், பலம், கீர்த்தி, ஆரோக்கியம் இவற்றோடு சகல சௌபாக்யமும் நிச்சயம் எனக்கும் கிடைக்க அருள் புரிவாய் அபிராமி தாயே.
அபிராமி அன்னையே சரணம் 🙏🌹🙏
No comments:
Post a Comment