Sunday, September 19, 2021

Sagala Sowbakyam Ashtagam - Kuladeivam Version குலதெய்வம் பகவதி அம்மன்

ஜய ஜய மங்கள கௌரி மனோஹரி குலதேவதையே பகவதியை
ஜய ஜய மங்கள கௌரி மனோஹரி குலதேவதையே பகவதியை
ஜய ஜய மங்கள கௌரி மனோஹரி குலதேவதையே பகவதியை
ஜய ஜய மங்கள கௌரி மனோஹரி குலதேவதையே பகவதியை
ஜய ஜய மங்கள கௌரி மனோஹரி குலதேவதையே பகவதியை
ஜய ஜய மங்கள கௌரி மனோஹரி குலதேவதையே பகவதியை
ஜய ஜய மங்கள கௌரி மனோஹரி குலதேவதையே பகவதியை














Saturday, September 4, 2021

சுதர்சனம் என்பது மகா_சக்கரம் சக்கராயுதம்

 #சுதர்சனம்_என்பது

#மகா_சக்கரம் #சக்கராயுதம்

மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். திருமாலின் கையில் இருக்கும் அந்த சக்கரம் யார்?

திருவாழிஆழ்வான் உட்பட பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும்.

நடுவில் "ஓம்' என்ற தாரகத்தினையும்; "ஷ்ரௌம்' என்ற நரசிம்ம ஏகாட்சரத்தினையும், ஆறு இதழ்களில் "சகஸ்ரா ஹும்பட்' என்ற சுதர்சன ஆறு அட்சரங் களையும்; எட்டு இதழ்களில் "ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாட்சரங்களையும்; பன்னிரண்டு இதழ்களில் பிந்துக்களுடன் கூடிய "அம்' தொடங்கி "அ' வரையிலான மாத்ருகா அட்சரங்களையும் கொண்டு, நரசிம்மானுஷ்டுப் மந்திர ராஜத் தின் அட்சரங்களான "உக்ரம், வீரம், மகாவிஷ்ணும், ஜ்வலந்தம், ஸர்வதோமுகம், ந்ருஸிம்மம், பீஷணம், பத்ரம், ம்ருத்யும், ருத்யும் நமாம் யஹம்' என்ற சுலோகத்தை முப்பத்திரண்டு இதழ்களிலும் எழுதப்பட்டது.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு, அவன் செய்யும் நூறு பிழைகளைப் பொறுத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். சிசுபாலன் நூற்றியோராவது பிழையையும் புரிய, கிருஷ்ணரின் ஆணையின் பேரில் சீறி எழுந்து சிசுபாலனை அழித்தது சுதர்சனச் சக்கரமே!

மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல யாராலும் முடியாத நிலையில், பகவான் கிருஷ்ணன் கரத்திலிருந்த சக்கராயுதம்தான் சூரியனை மறைத்து, குருஷேத்திரத்தையே இருளச் செய்து, ஜயத்ரதன் மரணத்திற்குக் காரணமாகத் திகழ்ந்தது.

முதலை ஒன்று யானையின் காலைக் கவ்விப்பிடித்து தண்ணீருக்குள் இழுக்கவே, "ஆதிமூலமே' என்று கஜேந்திரன் குரல் கொடுக்க, திருமாலின் கையிலிருந்து புறப்பட்ட ஸ்ரீசுதர்சனச் சக்கரம் முதலையை வதைத்து, யானையைக் காப்பாற்றியது.

சுதர்சன சக்கரத்தால் சூழ்வினை ஓட்டும் விஷ்ணுவை, வியாழக் கிழமைகளில், விஷ்ணு கோலமிட்டு, ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம் சொல்லி வணங்க மலர்ச்சி தருவார் மஹாவிஷ்ணு. ஓம் நமோ நாராயணாய.

நம் பயத்தை தெளிவிக்கும் மந்திரம்

 நம் பயத்தை தெளிவிக்கும் மந்திரம்:


ஓயாது சொல்லி பயன் அடையுங்கள்!

🙏நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்🙏🌹🙏

🌷நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு முதல் காரணம் நம்முடைய பயம் தான். அதுவும் இன்றைய காலகட்டத்தில், இன்றைய சூழ்நிலையில் கண்ணுக்கு தெரியாத கிருமியின் மூலம் மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றினாலும், இதோடு சேர்த்து நம்முடைய முன்னோர்கள் கூறிய சில ஆன்மீக வழிகளையும் பின்பற்றுவது நல்ல பலனைத் தரும்.

🌷பயத்தை போக்கி, மன அழுத்தத்தை நீக்கி, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு, ஒரு மனிதனுக்கு மருந்து எது? என்பதற்கான பதிலை காஞ்சிபெரியவர் அழகாக கூறியுள்ளார். நம் மன பயத்தை போக்கக்கூடிய இந்த இரண்டு எழுத்து மந்திரம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் இந்த நேரத்தில், இந்த மந்திரம், நாம் எல்லோருடைய நினைவிலும் இருக்கிறதா, என்பது தெரியவில்லை. இந்த புனிதமான மந்திரத்தை நினைவு கூறுவதற்காகவே இந்த பதிவு.

🌷காஞ்சி பெரியவரை சந்திக்க வந்த ஒருவர் இந்த சந்தேகத்தினை, மகா பெரியவரை பார்த்து கேட்டிருக்கின்றார். ‘ராம நாமத்தை எப்பொழுதெல்லாம் உச்சரிக்க வேண்டும்’? என்ற கேள்விதான் அது? உன்னுடைய மூச்சை உள் வாங்கும் போதும், உன்னுடைய மூச்சு வெளிவரும் போதும் அதில் ராம நாமம் கலந்திருக்க வேண்டும். என்றவாறு பதில அளித்தார் காஞ்சிப் பெரியவர். இதற்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் உணர முடிகிறதா? ராம! ராம! ராம! என்ற மந்திரம் நம் மூச்சுடன் எப்போதுமே கலந்து இருக்க வேண்டும் என்பதைத்தான் இது குறிக்கிறது.

🌷எப்போது எல்லாம் உங்கள் மனதில் பயம் ஏற்படுகிறதோ, எப்போது எல்லாம் கஷ்டம் என்று நீங்கள் உணர்கிறீர்களோ, அப்பொதெல்லாம் இந்த இரண்டு எழுத்து மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கலாம். இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல இனம்புரியாத நம்பிக்கையும், தைரியமும் உங்களிடத்தில் வந்து சேரும் என்பது உறுதி. அதாவது அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் என்றாவது தோல்வி அடைந்துள்ளார், என்பதை நூல்களிலோ, வரலாற்றில் நாம் படித்து இருக்கின்றோமா? நிச்சயம் இல்லை. வெற்றியின் மைந்தன் தான் ஆஞ்சநேயர். இதற்கு காரணம் அவர் உச்சரித்துக் கொண்டிருந்த ராம நாமம் தான்

🌷அப்படி என்னதான் இந்த ராம மந்திரத்தில் அதிசயம் அடங்கியுள்ளது? என்று சிலர் கேள்வியை கேட்கலாம். இதற்கு காஞ்சி பெரியவர் சொன்ன பதில் இதுதான். “மருத்துவர்கள் உடல் பிரச்சினையைத் தீர்க்க மாத்திரை தருகிறார்கள். அந்த மருந்தில் என்ன இருக்கிறது, என்பதை ஆராய்ச்சி செய்தா பார்க்கிறீர்கள்! மருத்துவர் எழுதித்தரும் மருந்தை அப்படியே வாங்கி, சாப்பிட்ட பின்பு உங்களுக்கு பிரச்சனை தீருகிறதா? இதேபோல்தான் ‘#ராம’ மந்திரமும். இதற்குள் ஆயிரம் ரகசியங்கள் அடங்கியுள்ளன. இதன் அர்த்தம் தெரிந்து உச்சரிப்பவர்களாக இருந்தாலும் சரி. அர்த்தம் தெரியாமல் உச்சரிப்பவர்களாக இருந்தாலும் சரி. பலன் ஒன்றுதான்.” இப்படி ஒரு பதிலை சொன்னார் பெரியவர்.

🌷சாப்பிடும்போது, தூங்குவதற்கு முன்பு, நடக்கும்போது, நிற்கும்போது, உட்காரும்போது இப்படி உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு வர, ஒரு மன தைரியமும், போராடும் தன்மையும் கிடைக்கும். இதோடு சேர்த்து தோல்வியை சந்திக்க மாட்டீர்கள். வெற்றி மட்டுமே உங்கள் கையில் மீதமிருக்கும். உங்கள் கையில் இருக்கும் விஷத்தைக் கூட, அமிர்தமாக மாற்றும் சக்தி இந்த ‘ராம’ மந்திரத்திற்கு உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

🌷*பெரியவர் இவ்வளவு சொல்லியும் சிலபேருக்கு நம்பிக்கை கட்டாயமாக வராது. வெறும் ஐந்து நிமிடங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி ராம நாமத்தை உச்சரித்து விட்டு, அதன் பின்பு உங்களது பிரச்சினைகளுக்கான தீர்வினை, நீங்கள் சிந்தித்து பாருங்கள்! அதற்கான தீர்வு கிடைக்கிறதா, கிடைக்கவில்லையா என்று. பிரபஞ்ச சக்தியை இயக்கக் கூடியதாக சொல்லப்படுகிறது இந்த ‘ராம நாமம்’.

ஜெய் ஸ்ரீராம் 🙏🌹🙏

கங்கா தேவியை ஏன் சிவபெருமான் தன் தலையில் வைத்திருக்கிறார் தெரியுமா?

 *கங்கா தேவியை ஏன் சிவபெருமான் தன் தலையில் வைத்திருக்கிறார் தெரியுமா?*


சிவபெருமானுக்கு இரண்டு மனைவிகள் என்று யாவரும் கூறுதுண்டு. ஆனால் அது தவறு. சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும். அதற்கான விடையை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டிருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வழி தேடி முனிவர்களை நாடினான். அப்போது முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால் பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.

பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். வரம் தந்த கங்கா தேவி ஒரு நிபந்தனை விதித்தாள். நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே என் வலிமையை தாங்க கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும்தான் என் வலிமையை தாங்க முடியும்’ என்று கூறி மறைந்தாள்.

பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார். சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான் சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள்.

திருச்சிற்றம்பலம்...

🌷🌷🌷

கிருஷ்ணார்ப்பணம் என்பதன் அர்த்தம்

 ஹரே கிருஷ்ணா 🙏🏻🙏🏻


||கிருஷ்ணார்ப்பணம் என்பதன் அர்த்தம்||

ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில்
அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும்  காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.

துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.

கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து,  தொடுப்பான்.

பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.

கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்ட போனால்…..ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு, இது துளசிராமனின்

குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம்.

அவனைக் கூப்பிட்டு, "துளசிராமா!!!இதெல்லாம் அதிகப்ரசங்கித்தனம்;
நீ மாலை கட்டவேண்டுமே தவிர,  சூட்டக்கூடாது ! ” என்று கண்டித்தார்.

"ஸ்வாமி…! நான் சூட்டவில்லை ; கட்டிய மாலைகள் மொத்தம் 15. அத்தனையும் உங்களிடம் கொடுத்து விட்டேன் ! ” என்ற அவன் சொற்கள் அவர் காதில் விழவேயில்லை. "நாளையிலிருந்து அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியைச் செய் ! பூ கட்டவேண்டாம் ! ” கட்டளையாக வந்தது .

இதுவும் இறைவன் செயல் என்று, துளசிராமன்  நீரிறைக்கும் போதும்,  தொட்டிகளில் ஊற்றும்போதும், ” "கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனம் நிறைய சொல்லிக்கொள்வான். மனமும் நிறைந்தது!

இப்போதெல்லாம் சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும்முன்பே , அபிஷேகம் நடந்து முடிந்து, கருவறை ஈரமாகி இருக்கும். நனைந்து..நீர் சொட்டச் சொட்ட கிருஷ்ணர் சிலை சிரிக்கும்.

அர்ச்சகருக்கு கடும் கோபம், "துளசிராமா!!

நீ அபிஷேகம் செய்யுமளவுக்கு துணிந்து விட்டாயா! உன்னோடு பெரிய தொல்லையாகிவிட்டதே ! ” வைய்ய ஆரம்பிக்க.

துளசிராமன் கண்களில் கண்ணீர்." ஸ்வாமி! நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினேன்; உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகம் ஆனது என்று எனக்கு தெரியாது! என்றான்.

அவ்வளவுதான் அர்ச்சகர் மறுநாளே மடப்பள்ளிக்கு மாற்றிவிட்டார். பிரஸாதம் தயாரிப்பு பணிகளில் ஒரு சிற்றாளன் ஆனான். இங்கும்…. காய் நறுக்கும்போதும் அவன், " கிருஷ்ணார்ப்பணம் ” என்றே தன்னுடைய செய்கைகளை கடவுளுக்கே காணிக்கையாக்கினான்.

அன்று. அர்ச்சகர் முன்னெச்சரிக்கையாக ……சன்னிதானத்தை பூட்டிச் சாவியை எடுத்துச் சென்றுவிட்டார் .

மறுநாள் ..அதிகாலையில் சந்நிதிக் கதவைத் திறக்கும்போதே கண்ணன் வாயில் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம்!!

"மடப்பள்ளியில் அப்போதுதான் தயாராகி, நெய்விட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தது ! அதற்குள் எப்படி இங்கு வந்தது ? நானும் கதவைப்பூட்டிதானே சென்றேன் ! பூனை , எலி கொண்டு வந்திருக்குமோ ?

துளசிராமனுக்கு  எந்த வேலை தந்தாலும்

அந்தப்பொருள் எப்படியோ எனக்கு முன்பே இங்கு வந்துவிடுகிறதே ! அவன் என்ன மந்திரவாதியா? "என்று குழம்பினார் அர்ச்சகர்.

இன்று எதுவும் கண்ணடிக்கவில்லை, ” துளசிராமா! நாளை முதல், நீ வாசலில், பக்தர்களின் செருப்பை பாதுக்காக்கும் வேலையைச் செய் ! நீ அதற்குத்தான் சரியானவன்! என்று கூறினார்.

"பூ, நீர்,பிரஸாதம் – எல்லாம் நல்ல பொருட்கள் ; சந்நிதிக்கு வந்துவிட்டன ; இனி என்ன ஆகிறதென்று பார்ப்போம் ; ” – இதுதான், அர்ச்சகரின் எண்ணம்.

இதையும் கடவுள் விருப்பம் என்று ஏற்றுக்கொண்ட துளசிராமன் .அன்றுமுதல் …வாசலில் நின்றிருந்தான்.

அதே, " கிருஷ்ணார்ப்பணம் " என்றே அந்த வேலையையும் செய்துகொண்டு இருந்தான். இன்றும் அர்ச்சகர் பூட்டி, சாவி கொண்டு சென்றார்.

மறுநாள் காலை ; சந்நிதிக்கதவு திறந்ததும், அர்ச்சகர் கண்ட காட்சி

உடலெல்லாம் அவருக்கு நடுங்கத்தொடங்கியது.

இதென்ன கிருஷ்ணா ! உன் பாதங்களில்…
ஒரு ஜோடி செருப்பு!!! பாதகமலங்களின் பாதுகையின் பீடத்தில்
சாதாரண தோல் செருப்பு ! எப்படி வந்தது ?

துளசிராமன் எப்படிப்பட்டவனானாலும், சந்நிதிப் பூட்டைத் திறந்து

இப்படி செருப்பை வைக்க யாருக்குத்தான் மனம் வரும் ?

ஆச்சரியம்,  அச்சம், அர்ச்சகருக்கு வேர்த்துக் கொட்டியது.

அப்போது. எங்கிருந்தோ ஒரு குரல்,

"அர்ச்சகரே ! பயப்பட வேண்டாம் அந்த துளசிராமனுக்கு நீ எந்த வேலை தந்தாலும், அவன், " கிருஷ்ணார்ப்பணம்" என்று எனக்குக் காணிக்கையாக்கி விடுகிறான்!
அப்படி அன்போடு அவன் தரும் காணிக்கையை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்.

நினைவெல்லாம் எங்கோ இருக்க செய்யும் பூஜையை விட,  எதை செய்தாலும் எனக்குக் காணிக்கையாக்குபவனின் அன்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

துளசிராமன் ஒரு யோகி !

அவன் அன்பு எனக்குப் பிரியமானது!என்றார் பகவான்.

கிருஷ்ண பகவானின் இந்தக் குரல் கேட்டு வாசல் பக்கம் ஓடிவந்து
அந்த யோகி துளசிராமனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார், அர்ச்சகர்!

ஆம் நாம் எந்த வேலை செய்தாலும் அதை நம் கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தால் அதை அவர் மனமார ஏற்றுக் கொள்வார்.

கண்ணனின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

ஹரே கிருஷ்ணா🙏🌹

 🌷மகாபாரதப் போர் முடிந்து கிருஷ்ணர் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார்.


🌷"ஸ்வாமி,தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள். இந்தப் பாவத்திற்கு நானும் காரணமாகிவிட்டேன். பாவம் போக்க என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். இதற்கு பீஷ்மரே சரியானவர் எனக்கூறி அவரிடம் அழைத்துச் சென்று, வந்த விவரத்தைக் கூறினார் கண்ணன்.

🌷பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்,"ஏன் என்னைத் தேடி வந்திருக்கிறாய்.உன் அருகில் நிற்கிறானே கண்ணன்,அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள்.

🌷10வது நாள் யுத்தம். நான் கௌரவ சேனைக்கு தலைமைத் தாங்கி புறப்பட்டேன். அப்போது துரியோதனன் வந்து, "பாட்டனாரே.உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன், மகாபலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே. உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே. நீர் கபடம் செய்கிறீர். எனக்கு துரோகம் செய்கிறீர்.

🌷இந்த பத்து நாள் யுத்தத்தில்,நம் சேனைகளுக்குக் கடும் சேதம். இத்தனைக்கும் நீர் சேனாபதி.நாம் தோற்பதற்குக் காரணம் நீர். உம் பிரிய பேரன்மார் பாண்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில் ஒன்றும் செய்யாமல் வந்துவிடுகிறீர்.

🌷உமக்கு இருப்பது பாண்டவர் மீதான பரிவு"என்று சொல்லி என்னைத் திட்டினான். 'அஸ்தினாபுரத்தைக் காப்பேன்’ என்று என் தந்தைக்குச்செய்து கொடுத்த சத்தியத்தைக் காத்துவரும் எனக்கு, இப்படி ஒரு அவச்சொல் கேட்க சகிக்கவில்லை.

🌷அவன் சொன்ன வார்த்தைகளைச் சகிக்க மாட்டாமல் அவனிடம் ஒரு சபதம் செய்தேன்."இன்றைக்கு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கும் யுத்தத்தில் என்ன நடக்கிறது பார்.

🌷 நான் செய்யும் கோரயுத்தம் தாங்காமல், இந்தப் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று சபதம் செய்த கிருஷ்ணனையே ஆயுதம் ஏந்தச் செய்கிறேன்"என்று அவனிடம் சபதம் செய்தேன்.

🌷அப்படியே நான் போர்க்களத்துக்கு வந்த வேகத்தில், துரியோதனன் நாவினால் என்னைச் சுட்ட வடு ஏற்படுத்திய கோபம். வெறியோடு யுத்தம் செய்தேன்.எதிரில் தேரில் வந்தான் கண்ணன் அர்ஜுனனுடன். அவன் மீது அம்பை எய்தேன்.அவனை மட்டுமா அடித்தேன். விஷ்ணு பக்தனான நான் கண்ணனுக்கு சந்தனாபிஷேகம் செய்து திருப்பாதங்களைக் கழுவாமல்,அந்தப் போர்க்களத்தில் என்ன செய்தேன்?கண்ணன் மீது அம்பு விட்டு அவன் உடலிலிருந்து ஓடும் செங்குருதியால் அவன் பாதங்களை நனைத்து அபிஷேகம் செய்தேன். கிருஷ்ணனோ சிரித்துக் கொண்டிருந்தான்.ஆனால் நான் அடித்த அடியில் காண்டீபம் நழுவி மூர்ச்சையாகி விழுந்தான் அர்ஜுனன். பார்த்தான் கிருஷ்ணன்,தேரிலிருந்து குதித்தான்.அப்போது அவன் போட்டிருந்த மேல் வஸ்திரம் நழுவிக்கீழே விழுந்தது.

🌷அதைத் தாண்டிக் கொண்டு அவன் வந்தான். விழுந்திருந்த ஒரு தேரின் சக்கரத்தை ஆயுதமாகக் கையில் ஏந்திக்கொண்டு,என்னை நோக்கி வந்தான். நானோ, 'அப்பா கிருஷ்ணா, அந்தப் பாவி துரியோதனன் போட்ட உப்பு போகட்டும். எனக்கு உன் சக்கரத்தால் மோட்சம் கிடைக்கட்டும்’ என்று சொல்லிக்கொண்டு எதிர்கொண்டேன்.

🌷அப்போது மயக்கம் தெளிந்து எழுந்தான் பார்த்தன். கையில் சக்கரத்தோடு என்னை நோக்கி ஓடி வந்த கண்ணனைக் கண்டான். உடனே கண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு, “ஹே கிருஷ்ணா! இந்தப் போரில் ஆயுதமெடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த நீ உன் சத்தியத்தை மீறலாமா?’ எனக் கேட்டான்.

🌷கண்ணன் சொன்னான்,"என் சத்தியம் கிடக்கட்டும். நீ செய்த சத்தியத்தை நான் காக்க வேண்டாமா? கிருஷ்ணன் பாதத்தில் நான் தஞ்சம், அவன் என்னைக் காப்பான் என்றாயே. இப்போது இந்தக் கிழவன் உன் கதையை முடித்துவிடுவான் போலிருக்கிறதே. நீ செய்த சத்தியத்தைக் காக்க என் சத்தியம் போனால் பரவாயில்லை என்றான்.

🌷அவர்கள் இருவர் பேசுவதும் என் காதில் விழுந்தது.உண்மையில் தர்மா, கிருஷ்ணன் தன் சத்தியத்தை மீறுவதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை.அர்ஜுனன் சத்தியத்தைக் காப்பதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை.காலையில் துரியோதனனிடம் நான் செய்தேனல்லவா ஒரு சத்தியம். "இன்று போர்க்களத்தில் கிருஷ்ணனையே ஆயுதம் எடுக்க
வைக்கவில்லை என்றால் நான் கங்கையின் புத்திரன் இல்லை" என்று.என்னுடைய அந்த சத்தியத்தைக் காப்பதற்காக, எனக்காகவே என் பிரபு ஆயுதம் எடுத்தார்"என்றார் பீஷ்மர் கண்களில் நீர் தளும்ப.

🌷இதிலிருந்து பக்தர்களுக்காகத்தான் கண்ணன் என்ற உண்மையை புரிய வைத்துவிட்டார் கிருஷ்ண பரமாத்மா.
கிருஷ்ணார்பணம்🙏🏻

ஹரே கிருஷ்ணா🙏🌹

ஸ்ரீஅபிராமி_ஸ்தோத்ரம்

 சௌமாங்கல்யம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், கல்வி, எல்லாம் தரக்கூடிய மந்த்ரம்..!


#ஸ்ரீஅபிராமி_ஸ்தோத்ரம்

🙏நமஸ்தே லலிதே!தேவி
ஸ்ரீ மந்ஸிம்ஹாஸநேச்வரி !
பக்தாநாம் இஷ்டதே ! மாத:
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏

🌷ஸ்ரீ லலிதையே! உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

🙏சந்த்ரோதயம் க்ருதவதி!
தாடங்கேந , மஹேச்வரி
ஆயுர் தேஹி ஜகத்மாத:
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏

🌷மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழுநிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

🙏ஸுதாகடேச ஸ்ரீ காந்தே! சரணாகதவத்ஸலே .
ஆரோக்யம் தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏

🌷அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரண் அடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே! அம்மா, அபிராமியே உனக்கு நமஸ்காரம். எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!

🙏கல்யாணி! மங்களம் – தேஹி, ஜகன்மங்கள காரிணி!
ஐச்வர்யம் தேஹி-மே, நித்யம்.
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏

🌷கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வ லோகங்களையும் மங்களகரமாக்குபவளே! நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக! அபிராமித்தாயே உனக்கு நமஸ்காரம்!

🙏சந்த்ர மண்டலமத்யஸ்தே! மஹாத்ரிபுரஸுந்தரி!
ஸ்ரீ சக்ரராஜ நிலயே ஹி
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏

🌷சந்திர மண்டலத்தின் நடுவே அமர்ந்த மகாதிரிபுர சுந்தரி நீயே அல்லவா! ஸ்ரீ சக்ர ராஜதானியின் அரசியான அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

🙏ராஜீவலோசனே, பூர்ணே!
பூர்ண சந்த்ரவிதாயினி!
ஸௌபாக்யம் தேஹிமே நித்யம்.
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏

🌷தாமரை போன்ற கண்ணழகியே! முழுமையானவளே, முழு நிலவைக் காட்டுபவளே, எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக! ஸ்ரீ அபிராமியே, உனக்கு நமஸ்காரம்!

🙏கணேசஸ்கந்த ஜநநி!
வேதரூபே! தனேச்வரி!
வித்யாம் ச தேஹி மே கீர்த்திம்
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏

🌷ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே, வேத சொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே. எனக்கு வித்தையில் கீர்த்தியைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!

🙏ஸுவாஸிநீ ப்ரியே மாத: ஸௌமங்கல்ய விவர்த்தினி!
மாங்கல்யம், தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏

🌷சுவாசினிகளால் போற்றப்படுபளே, பெண்கள் கணவருடன் வாழும் காலத்தை அதிகரித்து சௌமாங்கல்ய பதவியை அதிகரிக்கச் செய்பவளே. எனக்கு நித்ய சௌமாங்கல்யத்தை அருள்வாய் தாயே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!

🙏மார்க்கண்டேய மஹாபக்த ஸுப்ரஹ்மண்ய ஸுபூஜிதே.
ஸ்ரீ ராஜராஜேச்வரீ த்வம்ஹி!
ஸ்ரீ அபிராமி! நமோஸ்துதே.🙏

🌷மார்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யர் என்ற அபிராமி பட்டராலும் நன்கு பூஜை செய்து வழிபடப் பட்டவளே! ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா. ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

🙏ஸாந்நித்யம் குரு கல்யாணி
மம பூஜா க்ருஹே சுபே
பிம்பே தீபே ததா புஷ்பே
ஹரித்ரா குங்குமே மம🙏

🌷கல்யாணியே! மங்களம் அருள்பவளே! என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக! உனது அருள் நிறைந்ததாக ஆக்குவாயாக!

🙏ஸ்ரீ அபிராம்யா இதம்
ஸ்தோத்ரம்
ய: படேத் சக்திஸந்நிதௌ
ஆயுர் பலம் யசோ வர்ச்சோ
மங்களம் ச பவேத் ஸுகம்🙏

🌷ஸ்ரீ அபிராமியன்னையின் இந்த துதியினை அகம் ஒன்றி தினம் சொல்ல எனக்கு ஆயுள், பலம், கீர்த்தி, ஆரோக்கியம் இவற்றோடு சகல சௌபாக்யமும் நிச்சயம் எனக்கும் கிடைக்க அருள் புரிவாய் அபிராமி தாயே.

அபிராமி அன்னையே சரணம் 🙏🌹🙏

ஆண்டவன் தங்கும் இடம் எது?

 ஆண்டவன் தங்கும் இடம் எது?*


கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான்...
வீதியெங்கும் அலங்கார வளைவுகள்...
பூரணகும்பம் கொண்டு வரவேற்பு...

பீஷ்மர், துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான்...

கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!!

கண்ணன் கேட்கிறான்: "பச்சை வர்ணம் பூசப்பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே..! அது யாருடைய வீடு?''

"அச்சுதா அது என்னுடைய வீடு" துரோணர் சொல்கிறார்.

கண்ணன்: "சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே! அது யாருடைய வீடு?"

கிருபர்:  ''மாதவா! அது என்னுடைய வீடு.''

கண்ணன்: "மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"

பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"

கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"

அஸ்வத்தாமன்:  "ரிஷிகேசா.. அது என்னுடைய வீடு''

கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப் பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் பரம சாத்வீகம் பொருந்தி நிற்கிறதே...! அது யாருடைய வீடு?"

*விதுரர்: "கண்ணா.. அது உன்னுடைய வீடு!"*

கண்ணன்:  "என்னுடைய வீடா? இந்த அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று எண்ணியிருந்தேன்... இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது நான் பிறர் வீட்டில் தங்குவதா?''

பீஷ்மர், கிருபர் யாவரும் அவரவர் வீட்டுக்கு கண்ணனை அழைத்தனர்.

''நான் என் வீட்டிற்கு போகிறேன்.'' - என்று சொல்லிவிட்டு விதுரர் வீட்டிற்குள் நுழைந்தான் கண்ணன்.

எல்லாமே இறைவனுடையது என்கிற அர்ப்பண உணர்வுடையவரையே கடவுள் விரும்புகிறார்...

*'யான்' "என்னுடையது என்னும் செருக்கை அறுப்பவனின் உள்ளத்தில்தான் ஆண்டவன் இருப்பான்!"* 🙏💐

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...