Friday, February 14, 2020

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ?

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ?

திருமாலின் கையிலுள்ள
சக்கரத்தை சக்கரத்தாழ்வார்
என்பர்.
சக்கரத்தை வழிபட்டால்
துன்பம் உடனடியாக தீரும்
என்பது ஐதீகம்.

பக்தனான பிரகலாதனை
காக்க திருமால்,
நரசிம்மாராக அவதரித்தார்.

தாயின் கருவில் இருந்து
வராததாலும் , கருடருடன்
வராத காரணத்தாலும்,
இந்த அவதாரத்தை அவசர
திருக்கோலம் என்பர்.

பக்த பிரகலாதனுக்காக
ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி
யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்...!

நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும்
அவர் வேகமாகச் சுழல்வார்.

அப்போது பின்னால் இருக்கும்
நரசிம்மர் நம் முன்னே வந்து
உடனடியாக குறைகளைத்
தீர்ப்பதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாரை நம்பினால்
சங்கடம் நீங்கி வாழ்வில் சகல
நன்மையும் உண்டாகும் என்று
சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நாளை என்பது நரசிம்மருக்கு
கிடையாது .
துன்பத்தில் இருந்து விடுபட்டு
உடனடியாக நற் பலன்களை
அடைய சக்கரத்தாழ்வரையும்
நரசிம்மரையும் ஒரு சேர
வழிபடுவது மிகச் சிறப்பு.

இதன் அடிப்படையில் தான்
சக்கரதாழ்வர்க்கு பின்
ஸ்ரீநரசிம்மர் இருப்பார்...!

Friday, February 7, 2020

என் பெருமாளே ...🙏



ரோஜாமலர் கூட்டத்தின் நடுவே இராஜாவாக அமர்ந்திருக்கும் பெருமாளே...

நீ சிரித்த சிரிப்பில் நான் சிந்தை மறந்தேன்...

என் செயல் மறந்தேன்...

என்னை மறந்தேன்...

என் உள்ளம் உன்னிடம் அடிமையானது...

இந்த அடிமையின் அன்பை ஏற்றுக்கொள் பெருமாளே...

இந்த அடிமையை உன்னோடு சேர்த்துக்கொள் பெருமாளே...

எல்லாம் உன் செயல் என்று ஏங்கிக் கிடக்கும் என்னை ஏற்றுக் கொள்வாயா ?...

என் பெருமாளே ...🙏

எனக்கு நீ மட்டுமே கதி...🙏

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...