Monday, September 23, 2019

ஓர்_எழுத்தில்_ராமாயணம்

ஓர்_எழுத்தில்_ராமாயணம்



ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?*
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
 இதுவே தமிழின் சிறப்பு

அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்

Wednesday, September 4, 2019

#எதுவும்_நிலையில்லாதது #எம்_அரங்கனைத்_தவிர

#எதுவும்_நிலையில்லாதது
#எம்_அரங்கனைத்_தவிர

முதலில் அம்மா தான் எல்லாம் என்று இருந்தோம். இளமை ஏற ஏற அது மாறி மனைவி மேல் மோகம் முற்றத் தொடங்கியது (அல்லது கணவன் மேல்). பின் பிள்ளைகள் மேல் பாசம். அப்பாவின் மேல் அன்பு. நடுவில் பொருளின் மேல், சொத்தின் மேல் பற்று. அதை விரட்டிக் கொண்டு போகிறோம். புகழ், மதிப்பு என்று பேயாய் பறக்கிறோம். நாள் ஆக ஆக, மூப்பு வந்து சேருகிறது. அதன் கூடவே நோய். பின் இறப்பு, பின் பிறப்பு என்று வாழ்க்கை சக்கரம் உருண்டுகொண்டே இருக்கிறது ஒரு இலக்கு இல்லாமல்.

இது தேவையா ? இதை விட்டு பின் என்ன தான் செய்வது ?
பிள்ளை பெருமாள் ஐயங்கார், "திருவரங்க கலம்பகத்தில்" வழி காட்டுகிறார்.எல்லாவற்றையும் விட்டு விட்டு அந்த அரங்கனை தொழுங்கள் என்றுரைக்கிறார்.

ஆயினை, மனையை, சேயினை, பிதாவை
 அனத்தினை, தனத்தினை, விரும்பும்
 பேயினை மறந்து, நோயினை, மூப்பை
 பிறப்பினை, இறப்பினை, துடைப்பீர் -
 ஆயனை, முளரி வாயனை, எங்கள்
 அமலனை, கமலனைப் பயந்த
 தாயனை, நெடிய மாயனை, வடபால்-
 தரங்கனை, அரங்கனை - தொழுமே''

#பொருள்:

ஆயினை, = தாயாரை
மனையை, = மனைவியை
சேயினை, = பிள்ளைகளை
பிதாவை = தந்தையாரை
அனத்தினை, = எல்லாவற்றையும்
தனத்தினை, = செல்வத்தினை
விரும்பும்  பேயினை மறந்து, = இது போன்று எல்லாத்துக்கும் பேயாகப்
பறக்காமல், அவற்றை விட்டு விட்டு
நோயினை, = நோய்களை
மூப்பை = முதுமையை
பிறப்பினை, = மீண்டும் மீண்டும் பிறத்தலை
இறப்பினை, = இறத்தலை
துடைப்பீர் - = மாற்றுவீர்
ஆயனை, = ஆயர் குலத்தில் தோன்றியவனை
முளரி வாயனை,= புல்லாங்குழலை வாயில் கொண்டவனை
எங்கள்  அமலனை, = எங்கள் அமலனை
கமலனைப் = தாமரை மலரில் உள்ள பிரம்ம தேவனை
பயந்த = தந்த
தாயனை, = தாய் போன்றவனை (பிரம்மனை ஈன்றதால் விஷ்ணுவை தாய் என்றார் )
நெடிய மாயனை, = உயர்ந்த மாயக் கள்ளனை
வடபால்  தரங்கனை,= பாற்கடலில் பள்ளி கொண்டவனை
அரங்கனை = திருவரங்கத்தில் உள்ள அரங்கனை-
தொழுமே' = தொழுங்கள்

 மீண்டும் மீண்டும் சலிப்பு தரக்கூடிய விஷயங்களை விட்டு, இம்மைக்கும் மறுமைக்கும், நன்மை பயக்கும் விஷயங்களில், கவனத்தை செலுத்த வேண்டும் என்பது பாடலின் சாரம்.

அரங்கனைத் தொழுவோம் அவன் திருவடி பெறுவோம்




Tuesday, September 3, 2019

Significance of Nama Sangeerthanam

இடையூற்றுக்கும் இடையூறு உண்டு.
எந்த நல்ல காரியத்துக்கும் இடையூறுகள் குறுக்கிடுவது உண்டு. பெரிய பெரிய காரியங்களுக்குப் பெரிய பெரிய இடையூறுகள் வந்து குறுக்கிடுவதையும் காண்கிறோம். எனவே இக்கன்னியருள் ஒருத்தி இத்தகைய கேள்வி ஒன்றை எழுப்பினாள். 'நாம் நெடுநாளாகச் செய்திருக்கும் பிழைகள் பாவங்கள் எல்லாம் இன்று நாம் செய்யக் கருதும் இந்த நல்ல காரியத்துக்கு இடையூறு விளைக்கலாமே!' என்றாள். அந்த இடையூறுகளை யெல்லாம் அநாயாசமாகத் தொலைத்து எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிப்பதற்கு ஒரு ராஜ வழி இருக்கிறது என்கிறாள் விசேஷ நம்பிக்கையுள்ள ஒரு பெண்.
சுருங்கச் சொன்னால், நாம ஸங்கீர்த்தனம் பண்ணுவதே அந்த வழி என்கிறாள். பகவத் நாம ஸங்கீர்த்தனமும் பண்ணிக் காட்டுகிறாள். அது தீயாகிப் பாவங்களை யெல்லாம் நீறாக்கிவிடும் என்கிறாள்.. நாம ஸங்கீர்த்தன வழிக்கு ஒரு முன்மாதிரியாகவும் பேசுகிறாள். "மாயனை" என்று தொடங்குகிறாள். 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்று பாடுகிறாள்.
மேலும் நாம ஸங்கீர்த்தனம் செய்கிறாள். யமுனைத் துறைவன் என்கிறாள். ஆயர்குல மணி விளக்கு என்கிறாள். தாமோதரன் என்கிறாள். இவை பொருள் பொதிந்த பெயர்கள் மட்டுமல்ல, பொருள் புதைந்த பெயர்களும்கூட. முதல் முதல் மாயன் என்ற பெயரைத்தான் பாருங்கள்: இறைவனுடைய வழிகளும் செயல்களும் மாயமானவை – அதாவது ஆச்சரியமானவை.
'வடமதுரை மைந்தன்' என்ற திருப்பெயரைப் பாருங்கள், இவன் பிறக்கும்போதே தாய் தந்தையர்களின் கால் விலங்குகள் இற்று முறிந்து போய் விட்டனவாம்
ஆயர்குல விளக்கு என்று பெயரிட்டு அழைப்பதிலும் புதை பொருள் உண்டு. வேதம் ஓதியும் காண முடியாத கடவுளை மாடு மேய்த்துக் கண்டுகொண்டார்களாம் ஆயர்கள். மறைக்கு முன்னே சென்று மறைந்தவன் மாட்டுக்குப் பின்னே ஆய்ப்பாடி காண நடந்து சென்றானாம். இத்தகைய எளிமையை உணர்த்துகிறது இப்பெயர்.
'தாமோதரன்' என்ற பெயரின் பொருள் மேலும் விசேஷமானது. 'கயிற்றுத் தழும்பை வயிற்றில் உடையவன்' என்பது இப் பெயரின் பொருள். தன் பிறப்பினால் பெற்ற வயிற்றுக்குப் பெருமை தந்தான்; தன் வயிற்றுத் தழும்பினால், தாயை வாழ்வித்தான்; உலகையும் வாழ்வித்தான்.
இப்போது செய்ய வேண்டியது, அகத் தூய்மையுடன் நாம ஸங்கீர்த்தனம் செய்யவேண்டியதுதான். அகத் தூய்மைக்கு அறிகுறியாகத் தூய மலர்களையும் தூவித்தொழுது பேறுபெறக் கூடும் என்கிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக, "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" பிழையும் பாவமும் நீறாகிவிடும் என்கிறாள். சாம்பலுமின்றி மாய்ந்து போகும் என்பதையும் குறிப்பாக உணர்த்துகிறாள்.
முன்பு செய்த பிழைகள் மட்டுமா? – இனிமேல் நம்மை அறியாமல் நேரிடத்தக்க பாவங்களும் தீய்ந்து போகும் என்கிறாள்.



 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...