Monday, February 26, 2018

ஒவ்வொரு_மாதமும்_வரும் ஏகாதசி_விரதங்களின் பெயர்களும்_பயன்களும்

#ஒவ்வொரு_மாதமும்_வரும் #ஏகாதசி_விரதங்களின் #பெயர்களும்_பயன்களும்
-
🍀ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.🍀
-
🍀ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
-
01 🍀#சித்திரை_மாத வளர்பிறை ஏகாதசி, "#காமதா_ஏகாதசி" என்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி "#பாப_மோகினி_ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.🍀
-
02 🍀#வைகாசி_மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி "#மோகினி_ஏகாதசி" என்றும் தேய்பிறை ஏகாதசி "#வருதித்_ஏகாதசி" என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.🍀
-
03 🍀#ஆனி_மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "#நிர்ஜலா_ஏகாதசி" என்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி "#அபார_ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.🍀
-
04 🍀#ஆடி_மாதத்து வளர்பிறை ஏகாதசி "#சயனி_ஏகாதசி" என்றும் தேய்பிறை ஏகாதசி "#யோகினி_ஏகாதசி" என்றும் பெயர் பெற்றுள்ளது.  இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.🍀
-
05 🍀#ஆவணி_மாத வளர்பிறை ஏகாதசியானது "புத்ரஜா_ஏகாதசி" என்றும் தேய்பிறை ஏகாதசியானது "#காமிகா_ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.🍀
-
06 🍀#புரட்டாசி_மாத வளர்பிறை ஏகாதசி "#பத்மநாபா_ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "#அஜா_ஏகாதசி என்றும் பெயர் பெற்றது. (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.🍀
-
07 🍀#ஐப்பசி_மாத வளர்பிறை ஏகாதசி "#பாபாங்குசா_ஏகாதசி" என்றும், தேய்பிறை ஏகாதசி "#இந்திரா_ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.🍀
-
08 🍀#கார்த்திகை_மாத வளர்பிறை ஏகாதசி "#பிரபோதின_ஏகாதசி" எனப்படும்.இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான "#ரமா_ஏகாதசி" தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.🍀
-
09 🍀#மார்கழி_மாத ஏகாதசி "#வைகுண்ட_ஏகாதசி" என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "#உத்பத்தி_ஏகாதசி" எனப்படுகிறது.🍀
-
10 🍀#தை_மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரதா_ஏகாதசி" என்றும் தேய்பிறை ஏகாதசி "#சுபலா_ஏகாதசி என்றும் பெயர் பெறும்.  இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.🍀
-
11 🍀#மாசி_மாத வளர்பிறை ஏகாதசி "#ஜெயா_ஏகாதசி" என்றும் தேய்பிறை ஏகாதசி "#ஷட்திலா_ஏகாதசி" என்றும் அழைக்கப்படும்.  இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.🍀
-
12 🍀#பங்குனி தேய்பிறை ஏகாதசி "#விஜயா_ஏகாதசி" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர்.  வளர்பிறை ஏகாதசி "#ஆமலகி_ஏகாதசி" எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.🍀
-
"ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி "#கமலா_ஏகாதசி" எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.
-
-
|| -------- 🍀 ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🍀 -------- ||

Sunday, February 25, 2018

மறுபிறவி இல்லா வாழ்வளிக்கும் ஜெயா_ஏகாதசி

#மறுபிறவி_இல்லா_வாழ்வளிக்கும்_ஜெயா_ஏகாதசி
-
🍀பிப்ரவரி மாதம் 26ம் தேதி, திங்கட்கிழமை, மாசி மாதம் - சுக்ல(வளர்பிறை) பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை #ஜெயா_ஏகாதசியாக ‌கொண்டாடுவர். ஜெயா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.🍀
-
🍀தேவேந்திரனின் சாபத்திற்கு ஆளான #மால்யவான் எனும் மன்னனும் அவன் மனைவி #புஷ்பவந்தி எனும் தேவ கன்னிகையும் பூமியில் பேய் உருக்கொண்டு அலைந்து அரச மரத்தடியில் பசியால் வருந்தி, அன்றைய ஏகாதசி இரவில் கண் விழித்திருந்த காரணத்தால் சாப விமோசனம் பெற்ற தினம். இந்த விரதத்தால் பேய்களுக்கே நற்கதி கிட்டும் எனில், மானிடருக்கு கிடைக்கும் பேரருளைப் பற்றி சொல்லவா வேண்டும்?.🍀
-
🍀இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம். யுதிஷ்டிரா! இந்த விரதத்தை முறையோடு அனுஷ்டித்தால் அகால மரணத்தால் பூத, பிரேத, பிசாச ரூபம் பெற்ற ஆத்மாக்கள் அனைத்தும் அந்நிலையிலிருந்து விடுபட்டு நன்னிலை எய்துவர். மேலும் இந்த விரதமானது நம்மை பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்கும். இதனை மிகவும் சிரத்தையுடனும், பக்தியுடனும், விதிப்பூர்வமாக கடைபிடிக்க வேண்டும்.🍀
-
🍀இந்த நன்னாளின் மகத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன். கவனமாகக் கேள்!! என்று கூறத் தொடங்கினார். ஒருசமயம் தேவலோகத்தில் இந்திரனின் நந்தவனத்தில் அனைத்து தேவர்களும் உல்லாசமாக இருந்தனர். புஷ்பதண்டன் என்னும் கந்தர்வன் தலைமையில் இனிமையான கானம் ஒலித்துக் கொண்டிருந்தது. அதற்கேற்ப கந்தர்வ கன்னிகளும் அங்கே அழகாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.🍀
-
🍀அப்போது அங்கே அமராவதியின் ஆஸ்தான பாடகனான கந்தர்வன் சித்திரசேனன் அவனது மனைவி மாலினி மற்றும் அவர்களுடைய அழகான மகன் மால்யவான் உடன் அங்கே வந்தார். அப்போது அங்கே நாட்டியமாடிக் கொண்டிருந்த புஷ்பவதி என்னும் கந்தர்வ கன்னி மால்யவானின் அழகைக் கண்டு மயங்கினாள்.🍀
-
🍀அவளது நடன அசைவுகளால் அவனை கவர முயற்சி செய்தாள். அதைக் கண்ட மால்யவானும் அவளது அழகில் மயங்கி அவளை ரசித்தான். அதனால் அவனும் அங்கே பாடிக் கொண்டே அவளுடன் நடனமாடத் தொடங்கினான். ஆயினும் பிறரை மகிழ்விக்கும் பொருட்டு ஆடிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட மயக்கத்தினால் காம வயப்பட்டு சுருதியையும், தாளத்தையும் மறந்தனர். இதனால் சங்கீதத்தின் லயம் கெட, கானத்தின் ஆனந்தம் கெட்டது. இது தேவேந்திரனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.🍀
-
🍀அதனால் அவர் அவர்கள் இருவரையும் சபித்தார். நீங்கள் இருவரும் சங்கீதத்தின் புனிதத்தை மதிக்காமல் அவமானம் செய்தது அன்னை சரஸ்வதியை அவமதித்து போலாகும். மேலும் கற்றறிந்தோர் நிறைந்த சபைதனில் அடக்கம், பணிவு, நாணம் இன்றி செயல்பட்டதால் நீங்கள் இருவரும் தேவலோகம் விடுத்து பூலோகத்தில் சபிக்கப்பட்ட பிசாச ரூபம் கொண்டு வாழ்வை கழிக்கக் கடவது என்று சாபம் இட்டார்.🍀
-
🍀தேவேந்திரனின் கடுமையான சாபத்தினால் அவர்கள் இருவரும் அனைத்தையும் மறந்து பிசாச வடிவம் கொண்டு பூலோகத்தில் ஹிமாலய பர்வதத்தின் அடியில் வீழ்ந்து அங்கேயே வேதனை அடைய தொடங்கினர். என்ன தான் குகையில் வசித்தாலும் அங்கே இருந்த கடும் பனியினால் உடல் நடுக்கம் கொண்டு பற்கள் கிடுகிடுத்தன. மற்றும் ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டு, உடல் விறைத்துக் கொண்டு மிகவும் துன்பத்தை அனுபவித்து வந்தனர். இப்படியொரு வாழ்க்கை வாழ்வதை விட நரகவேதனையே மேலானது என்றெண்ணி ஒருவருக்கொருவர் அழுது கொண்டிருந்தனர்.🍀
-
🍀தெய்வாதீனமாக அவர்கள் அங்கே வந்த சில காலத்திலேயே மகிமை வாய்ந்த ஜயா ஏகாதசி நன்னாள் தோன்றியது. அன்று இருவரும் குளிரினால் மிகுந்த வேதனை அடைந்து அன்று உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் பட்டினியாகக் கிடந்தனர். அவர்களை அறியாமலேயே அவர்கள் ஜயா ஏகாதசி விரதத்தினை அனுஷ்டித்தனர்.🍀
-
🍀குளிர் தாங்க முடியாமலும், பசி மயக்கத்தினாலும் அவர்களிருவரும் ஒரு அரசமரத்தடியில் அமர்ந்தனர். அன்றைய இரவை மிகவும் கஷ்டத்துடன் கழித்தனர். இவ்வாறாக தேவேந்திரனின் கடுமையான சாபத்தினால் துன்பப்பட்ட போதும், அறியாமல் அவர்கள் அனுஷ்டித்த ஜயா ஏகாதசி விரதத்தால் அவர்கள் இறைவன் ஸ்ரீ ஹரியின் அருளுக்குப் பாத்திரமானார்கள்.🍀
-
🍀மறுநாள் துவாதசி உதித்த வேளையில், இறைவன் அருளால் இருவரும் பிசாச ரூபம் நீங்கி அழகிய கந்தர்வ உடலைப் பெற்றனர். மேலும் அவர்கள் இருவரும் தேவலோகத்தை நோக்கிப் பயணிக்கையில் தேவகணங்களும், கந்தர்வர்களும் மலர்மாரி பொழிந்து அவர்களை வாழ்த்தினர். இருவரும் விரைவில் தேவலோகத்தை அடைந்து இந்திரனை வணங்கி நின்றனர்.🍀
-
🍀அதுகண்ட தேவேந்திரன், எனது கடுமையான சாபத்திலிருந்து நீங்கள் இருவரும் அப்படி என்ன புண்ணிய காரியம் செய்து இவ்வளவு விரைவாக முக்தி அடைந்தீர்கள் என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதற்கு மால்யவான், “ஹே தேவேந்திரா!! எம்பெருமான் இறைவன் ஸ்ரீ ஹரி மகாவிஷ்ணுவின் அருளால் மற்றும் ஜயா ஏகாதசி விரத புண்ணியத்தினாலும் தான் நாங்கள் எங்கள் பிசாச வடிவம் நீங்கி நன்னிலையை அடைந்தோம்” என்றான்.🍀
-
🍀அதனைக் கேட்ட இந்திரன், “ஹே மால்யவான்!! ஜயா ஏகாதசி விரதமிருந்து நீங்கள் இறைவன் ஸ்ரீ ஹரியை மகிழ்வித்து பாவங்கள் நீங்கி பவித்ரமடைந்தீர்கள். எனவே நீங்கள் இருவரும் இப்போது என்னுடைய வணக்கத்துக்கும், மரியாதைக்கும் உரியவர் ஆகிவிட்டீர்கள். ஏனெனில், எவரொருவர் ஈசனையும், நாராயணனையும் வழிபடுகிறார்களோ அவர்கள் தேவர்களின் வணக்கத்துக்கு உரியவர் ஆகிறார்கள் என்று கூறி, அவர்களை தேவலோகத்தில் உல்லாசமாக இருக்கும்படி கூறுகிறான்.🍀
-
🍀இவ்வாறு ஜயா ஏகாதசியின் மகத்துவத்தைக் கூறி முடித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர், “ஓ யுதிஷ்டிரா!! எவரொருவர் ஜயா ஏகாதசி விரதத்தை விதிபூர்வமாகக் கடைபிடிக்கிறாரோ, அவர் பூத, பிரேத, பிசாச உடல் மற்றும் தொல்லைகளிலிருந்து முக்தி பெறுவதோடு மட்டுமின்றி, அவர் அனைத்து பாவங்களில் இருந்து விடுபடுவதோடு, அவர் அனைத்து தானம், தவம், யாகம் ஆகியவற்றை செய்த பலனை அடைகிறார் என்று கூறினார்.🍀
-
🍀அதோடு விதிபூர்வமாக ஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அனைத்து புனித நதிகளில் நீராடிய பலனையும், 1000 ஆண்டு காலம் சுவர்கத்தில் வசிக்கும் பேற்றினைப் பெறுவார்கள். மேலும் எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் சாம வேதம் உச்சரித்து செய்யப்படும் அக்னிஸ்தோம யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார்.🍀
-
#கதாசாரம்: 🍀சங்கீதம் ஒரு சாதனை, ஒரு பவித்ர வித்யை ஆகும்.  இதன் புனிதம் கெடாது பராமரிப்பது அவசியம் ஆகும். மேன்மை வாய்ந்த பெரியோர் சபையில், பணிவையும் அவைய‌டக்கத்தையும், மரியாதையையும் பூண்டு நடப்பதால், பெரியவர்களின் ஆசீர்வாதம் கிட்டப்பெறும். மதியாது நடந்து, அவமதிப்பதால், கொடிய நரகத்தின் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.🍀
-
-
|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

Friday, February 23, 2018

🍀மீனாட்சி பஞ்சரத்னம்🍀 (ஆதிசங்கரர் அருளியது) #திருமணம் தடை நீங்க#

🍀மீனாட்சி பஞ்சரத்னம்🍀 (ஆதிசங்கரர் அருளியது) திருமணம் #தடை #நீங்க

🍀உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம்
கேயூர ஹாரோஜ்ஜவலாம்
பிம்போஷ்ட்டீம் ஸ்மித தந்தபங்க்திருசிராம்
பீதாம்பரா (அ) அலங்க்ருதாம்
விஷ்ணுப்ரஹ்ம ஸூரேந்த்ர ஸேவிதபதாம்
தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ (அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்🍀
--
🍀முக்தாஹார லஸத்கிரீடருசிராம்
பூர்ணேந்து வக்த்ரப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிங்கிணீ மணிதராம்
பத்மப்ரபா பாஸூராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸூதாம்
வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ (அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்🍀
--
🍀ஸ்ரீ வித்யாம் சிவவாமபாக நிலயாம்
ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீ சக்ராங்கித பிந்து மத்யவஸதீம்
ஸ்ரீ மத் ஸபா நாயகீம்
ஸ்ரீ மத் ஷண்முக விக்னராஜ ஜனனீம்
ஸ்ரீ மஜ்ஜகன் மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்🍀
--
🍀ஸ்ரீமத் ஸூந்தர நாயகீம் பயஹராம்
ஜ்ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாஸனார்ச்சித பதாம்
நாராயணஸ்யானுஜாம்
வீணாவேணும்ருதங்க வாத்ய ரஸிகாம்
நானாவிதா (ஆ)டம்பராம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்🍀
--
🍀நானாயோகி முநீந்த்ரஹ்ருதயவஸதீம்
நானார்த்த ஸித்திப்ரதாம்
நானாபுஷ்ப விராஜிதாங்க்ரி யுகளாம்
நாராயணேநார்ச்சிதாம்
நாதப்ரஹ்ம மயீம் பராத்பரதராம்
நானார்த்த தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்🍀

 
 #பஞ்சரத்னம்🍀

(ஆதிசங்கரர் அருளியது)

#திருமணம் #தடை #நீங்க

🍀உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம்
கேயூர ஹாரோஜ்ஜவலாம்
பிம்போஷ்ட்டீம் ஸ்மித தந்தபங்க்திருசிராம்
பீதாம்பரா (அ) அலங்க்ருதாம்
விஷ்ணுப்ரஹ்ம ஸூரேந்த்ர ஸேவிதபதாம்
தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ (அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்🍀
--
🍀முக்தாஹார லஸத்கிரீடருசிராம்
பூர்ணேந்து வக்த்ரப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிங்கிணீ மணிதராம்
பத்மப்ரபா பாஸூராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸூதாம்
வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ (அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்🍀
--
🍀ஸ்ரீ வித்யாம் சிவவாமபாக நிலயாம்
ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீ சக்ராங்கித பிந்து மத்யவஸதீம்
ஸ்ரீ மத் ஸபா நாயகீம்
ஸ்ரீ மத் ஷண்முக விக்னராஜ ஜனனீம்
ஸ்ரீ மஜ்ஜகன் மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்🍀
--
🍀ஸ்ரீமத் ஸூந்தர நாயகீம் பயஹராம்
ஜ்ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாஸனார்ச்சித பதாம்
நாராயணஸ்யானுஜாம்
வீணாவேணும்ருதங்க வாத்ய ரஸிகாம்
நானாவிதா (ஆ)டம்பராம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்🍀
--
🍀நானாயோகி முநீந்த்ரஹ்ருதயவஸதீம்
நானார்த்த ஸித்திப்ரதாம்
நானாபுஷ்ப விராஜிதாங்க்ரி யுகளாம்
நாராயணேநார்ச்சிதாம்
நாதப்ரஹ்ம மயீம் பராத்பரதராம்
நானார்த்த தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்🍀

 


Tuesday, February 20, 2018

பச்சை மயில் வாகனனே song lyrics

#பச்சை #மயில் #வாகனனே
-

🍀பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்ரமண்யனே வா இங்கு
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே🍀
-
🍀கொச்சை மொழியானாலும் உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – எந்தன்
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா🍀
-
🍀நெஞ்சமெனும் கோவிலமைத்தே – அதில்
நேர்மையெனும் தீபம் வைத்தே - நீ
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா – முருகா
சேவல் கொடி மயில் வீரா 🍀
-
🍀வெள்ளமது பள்ளம் தனிலே – பாயும்
தன்மைபோல் உள்ளம் தனிலே – நீ
மெல்ல மெல்லப் புகுந்து வீட்டாய் – எந்தன்
கள்ள மெல்லாம் கரைந்ததப்பா🍀
-
🍀ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா – நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நீறைந்தவனே🍀
-
🍀அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனந் தந்தாய் - உனக்கு
ஆனந்த கோடி நமஸ்காரம்🍀

Sunday, February 18, 2018

ஆதித்ய_ஹ்ருதயம்(#சூரிய_வணக்கம்)

#ஆதித்ய_ஹ்ருதயம்(#சூரிய_வணக்கம்)


-
🌹"ஆதித்ய ஹ்ருதயம்" மகத்தான சக்தி வாய்ந்த மந்திரம். இராவணனுடனான போரின்போது இராமபிரான் மனச்சோர்வுற்றபோது அகத்திய மாமுனிவர் இராமனுக்கு அருளிய உபதேச மந்திரம் இது.🌹
-
🌹சூரியனின் ஆற்றலை, திறனைப் போற்றித் துதிக்கும் இதனை தினமும் பக்தியோடு பாராயணம் செய்து வந்தால் பகைகள் விலகும்; தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும். ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும்.🌹
-
🌹அகஸ்திய மகரிஷிக்கு உலகை பற்றி கவலை அதிகமாக ஏற்பட்டது. இப்போதே இப்படி அநீதிகள் தலைவிரித்தாடுகிறதே இனி போக போக எப்படி இருக்குமோ? என்ற கவலை பயத்தை கொடுத்தது. இதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தார். அநியாயங்கள் பெருகாமல் அதை தடுப்பதும் தட்டி கேட்பதும் பெண்களாகதான் இருப்பார்கள். ஆகவே பராசக்தியிடம் முறையிடுவோம் என்ற எண்ணத்துடன் தேவியை அணுகி தன் மன கவலைகளை கூறினார் அகஸ்தியர்.🌹
-
🌹நல்ல உள்ளமும், மன தைரியமும் கொடுக்க கூடிய ஆற்றலும் சக்தியும், “ஆதித்ய ஹருதய“த்திற்கு இருக்கிறது என்று கூறினாள் பராசக்தி. எந்த ஒரு நல்ல விஷயத்தையும் முதலில் நல்லவர்களிடம் சொன்னால்தான் அது முழுமை அடையும் என்ற எண்ணத்தால் பல வருடம் ஆகியும் மந்திரத்தை வெளியிடாமல் பொறுமையாக இருந்தார் அகஸ்திய முனிவர்.🌹
-
🌹ஸ்ரீ ராமசந்திரர், இராவணனிடம் போர் செய்து கொண்டு இருந்தார். பல அம்புகளை ஏவியும் இராவணனை கொல்ல முடியாமல் மிகவும் மன வேதனையில் இருந்தார். இராவணனும் முடிவில்லாத போரினால் மயங்கி விழுந்தார்.  ஆனாலும் இராவணன் போரை நிறுத்துவதாக இல்லை. இன்னும் எத்தனை மணி நேரமோ, எத்தனை நாட்களோ இப்படி போரை தொடர்வது? என்ற விரக்தியின் எல்லைக்கே போனார் ஸ்ரீராமர். இறைவனாக இருந்தாலும் மனித பிறவி எடுத்தால் விதியை அனுபவித்துதான் தீர வேண்டும்.🌹
-
🌹ஆனால் விதியை ஒரளவு மாற்றும் சக்தி முனிவர்களுக்கு இருக்கிறது என்பதால் தன் குருவாக நினைக்கும் அகஸ்தியரை மனதால் பிராத்தனை செய்தார். பிராத்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது போல் அகஸ்திய முனிவர் ஸ்ரீராமரின் முன்னே தோன்றி, “ராமா… உலக நன்மைக்காக பராசக்தி ஆதித்ய ஹிருதய மந்திரத்தை எனக்கு உபதேசித்தார். அதை உனக்கு உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை உச்சரித்தால் சகல நன்மைகளும், விரோதிகளை வீழ்த்தும் சக்தியும் கிடைக்கும்.!“ என்றார் அகஸ்திய முனிவர்.🌹
-
🌹முனிவர் கூறியது போல் ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தார் ஸ்ரீ ராமசந்திரர். அதன் பலனாக அதிக சக்தியும், புத்துணர்ச்சியோடும் இராவணனை வீழ்த்தினார்.  சூரியனுக்கு உகந்த ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தால் வல்லவனுக்கு வல்லவனாகலாம் என்றார் சக்திதேவி🌹

-
|| ----- ----- திருச்சிற்றம்பலம் ----- ----- ||

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி



பக்தியுடன் ஸ்ரீ நரசிம்ஹ பெருமாளை துதித்து பூஜை செய்தால் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி : --

1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:

2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:

3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:

4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:

5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:

6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:

7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:

8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:

பொருள் : --

1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை

2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே

3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே

4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே

5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே

6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே

7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.

8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்.

காணும் இடமெல்லாம் வேங்கடம்...


காணும் இடமெல்லாம் வேங்கடம்...

வேங்கடம் சென்றடைந்தேன்;
வேங்குழலோடு அவன் நின்றான்!
எங்கெல்லாம் காணப்புக்கினும்−
அங்கெல்லாம், ஆயனாய், அவன் சிரித்தான்!

பாவைக்கு அவன், கண்ணனாய்
தெரிந்தானே!
பார்வையில் தான், மாறுபாடோ?
பரிதவித்து நான் இருக்க−ஒரு
புரிதலுடன், அவன் சிரித்தான்!

காதலிலே விழுந்தார்க்கு−
காண்பதெல்லாம் ஓர் உருவம்;
கன்னி நான் விழுந்ததுவோ,
கண்ணன் எனும் அதி மதுரம்!

மீண்டு வர ஆசையில்லை;
மோகக் கடல் மூழ்கி விட்டேன்!
மாதவனை என் மனச்சிறையில்−
மயக்கத்தொடு, ஒளித்து விட்டேன்!

என்னை நானும் இழந்ததனால்,
எங்கும் அவனாய், காட்சித் தந்தான்;
கண்ணின் தவறு ஏதும் இல்லை−
கண்ணன் என்னில் கலந்து விட்டான்!

Saturday, February 17, 2018

Nama Traya Astra Mantra -> Mantra To Cure Illness


விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில வார்த்தைகள்

விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில வார்த்தைகள்

முடிந்த போதெல்லாம் கூறுங்கள் நன்மை அடையுங்கள்

ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)

படிப்பில் வல்லவனாக:-
************************
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி:


வயிற்று வலி நீங்க:-
********************
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:


உற்சாகம் ஏற்பட:-
******************
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல:


ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட:-
**********************
மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி:


கண்பார்வை தெளிவுபெற :-
****************************
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்


பெருமதிப்பு ஏற்பட :-
*********************
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநர:


எண்ணிய காரியம் நிறைவேற :-
*******************************
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன:


கல்யாணம் நடக்க :-
*********************
காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு:


உயர்ந்த பதவி ஏற்பட :-
************************
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ:


மரண பயம் நீங்க :-
******************
வைகுண்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது:


அழியாச் செல்வம் ஏற்பட :-
****************************
அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ மஹாதந:


நல்ல புத்தி ஏற்பட :-
*******************
ஸர்வதர்சீ விமுக்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்


சுகம் உண்டாக :-
*****************
ஆநந்தோ நந்தநோ நந்த:
ஸத்யதர்மா த்ரிவிக்ரம:


க்ஷேமம் உண்டாக :-
********************
அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ:


துன்பங்கள் தொலைய :-
**********************
பூசயோ பூஷணோ பூதிர்
விசோக: சோகநாசன:


வியாதிகள் நீங்க :-
******************
பூர்ண: பூரயிதா புண்ய:
புண்யகீர்த்தி ரநாமய:


மோக்ஷமடைய :-
*****************
சத்கதி: சத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண:


சத்ருவை ஜெயிக்க :-
********************
ஸுலப: ஸுவ்ருத: ஸித்த:
சத்ருஜிச் சத்ருதாபன:


ஆபத்து விலக :-
****************
அமூர்த்திரநகோ சிந்த்யோ
பயக்ருத் பயநாசந:


மங்களம் பெருக :-
*****************
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி
ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:


துர்சொப்பனம் நீங்க :-
*********************
உத்தாரணோ துஷ்க்ருதிஹா
புண்யோ துஸ்ஸ்வப்நநாசந:


பாபங்கள் நீங்க :-
****************
தேவகீ நந்தந: ஸ்ரஷ்டா

க்ஷிதீச: பாபநாசந:

🍀திருமாலின் தசாவதாரம்🍀


🍀#திருமாலின் தசாவதாரம்🍀

-
வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக #தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.
-
🍀#மச்சாவதாரம்:
திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.
-
🍀#கூர்மாவதாரம்:
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர்.
-
🍀#வராக_அவதாரம்:
பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.
-
🍀#நரசிம்ம_அவதாரம்:
அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.
-
🍀#வாமன_அவதாரம்:
பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.
-
🍀#பரசுராம_அவதாரம்:
ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.
-
🍀#ராமாவதாரம்:
ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.
-
🍀#பலராம_அவதாரம்:
கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.
-
🍀#கிருஷ்ணாவதாரம்:
வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.
-
🍀#கல்கி_அவதாரம்:
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

கலியுகம் - A Brief Note...



கலியுகம் 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது.
தற்பொழுது 5,105 ஆண்டுகளே முடிவடைந்து உள்ளது.யுகம் நிறைவு பெற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.

'சம்பளம்' என்னும் கிராமத்தில் 'விஷ்ணு யசஸூ' என்ற வேதியருடைய இல்லத்தில் பாற்கடல் வாசனான பரந்தாமன் கோடி சூர்ய பிரகாசமாய் கல்கி அவதாரம் எடுத்து அருளுவார். ஸ்ரீகல்கி, தர்மத்துக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் சம்ஹரித்து, உலகம் முழுவதும் வேத தர்மத்தை நிலை பெறச் செய்தருளுவார்.
தர்மத்தை நிலை நிறுத்துவதே இறை அவதாரங்களின் நோக்கமே அன்றி, புவியை அழிப்பது அல்ல.பிரளயம் கல்பத்தின் முடிவில் மட்டுமே நிகழும்.ஒரு கல்பம் 14 மன்வந்திரங்களைக் கொண்டது.
ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களைக் கொண்டது.நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம் (கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்).
தற்பொழுது நடைபெறுவது வைவசுவத (7ஆம்) மன்வந்திரம் - 28ஆவது சதுர்யுகத்தின் கலியுகம்.இதன் முடிவில் 29ஆவது சதுர்யுகத்தின் முதல் யுகமான 'கிருத யுகம்' துவங்கும்.தர்மவிரோத செயல்களைக் காணும் பொழுது 'கலி முற்றிவிட்டது' என்று பொதுவாகக் குறிப்பிடும் மரபு உள்ளது.

உண்மையில் இவை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் அளவுக்கு கலிக் கொடுமைகள் முற்ற இன்னும் எண்ணற்ற ஆண்டுகள் மீதமுள்ளது.

நடைபெறும் அதர்ம நிகழ்வுகளை, கலியின் மீது பழியை ஏற்றி வைத்து கண்டும் காணாது இருந்து விடாமல், ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு உட்பட்டு, இயன்ற அளவில் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தை நிலை நிறுத்த முயல வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு.

"சதூர்யுக முடிவில் பிரளயம் வரும்" என்ற பிழையான கருத்து நிலவி வருகிறது.
இதற்கு புராணங்களில் எவ்வித சான்றும் எல்லை.கல்பத்தின் முடிவிலேயே பிரளயம் நிகழும்.இப்பிரளயம் 'நைமித்திக பிரளயம்' என்று குறிக்கப் படுகிறது.

Wednesday, February 14, 2018

காதல்நாயகி_ஆண்டாள்

💖#காதல்_நாயகி_ஆண்டாள்💖
-
கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் போன்ற அனைத்தையும் கடந்தது தான், காதல் யோகம். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவன் இறைவன். அதனால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே… ஏன் இந்த பிரபஞ்சமே அவன் தான். இறைவனிடம் இருந்து தொடங்கியதை அவனிடமே முடித்துக்கொள்வதுதான் முழுமை. இறைவனை பல்வேறு வழிகளில் அடைய முடியும் என்று வேதங்களும் சாஸ்திரங்களும் வழிகாட்டி உள்ளன. பலரும் அப்படியே இறைவனை அடைந்தும் இருக்கிறார்கள்.
-
படைத்தவன் வேறு… படைப்பு வேறு என்று எண்ணாமல், படைத்தவன் மீதே காதல் வசப்பட்டு அவனாகவே மாற விரும்புவது தான் காதல் யோகம். பாரதத்தில் கிருஷ்ணன் மீது கோபியர்கள் கொண்ட காதல் இந்த வகைதான். ஆண்டாளின் பக்தி உணர்வு தான் அதனினும் மேலானது.
-
தண்ணீரில் மூழ்குபவன் மூச்சுக்காக எத்தனை தூரம் ஏங்குவானோ, அப்படி வரவேண்டும் இறைவன் மீது பக்தி என்பார்கள்.  இங்கே ஆண்டாள் அதனை எல்லாம் தாண்டிப் போய்விட்டாள்.
-
"#கொள்ளும் பயனொன்று இல்லாத
கொங்கைதன்னைக் கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில்
எறிந்தென் அழலைத் தீர்ப்பேனே#."
-
– என்கிறாள். கண்ணனுக்காக காத்திருந்து காத்திருந்து பயனில்லாத என் மார்பகத்தைப் பறித்து அவன் மீதே வீசியெறிகிறேன் என்று ஆவேசப்படுகிறாள். இந்த ஊடல் காதலுக்கே உரியது.  காதல் வசப்பட்டவர்களுக்கு எங்கேயும் எப்போதும் எல்லாமே காதல் தான் என்பதைக் கவனியுங்கள்.
-
#பைம்பொழில் வாழ்குயில்காள்! மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்! அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெருமானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே?#
-
சாலையில் சும்மா போய்க்கொண்டு இருப்பவரைக் கூப்பிட்டுவைத்து கும்முவது என்பார்களே… இங்கேயும் அப்படித்தான் நிகழ்கிறது.  குயில்களையும் மயில்களையும் மலர்களையும் அன்போடு அழைப்பவள், அடுத்த கணமே, பஞ்சமா பாதகர்களே என்று திட்டவும் செய்கிறாள். ஏனாம், அவற்றை எல்லாம் பார்க்கும்போது காதலன் கண்ணனின் ஞாபகம் வருகிறதாம்.
-
இறைவனுடன் பேதமறக் கலந்துவிட்டதால், மதுசூதனனின் கைத்தலம் பற்றுவதாக கனவு காணுகிறாள். வாழை, கமுகு பந்தலிட, பூரண பொற்குடத்துடன் தோரணம் நாட்டப்படுகிறது. இந்திரலோகத்து தேவர்கள் எல்லோரும் வாழ்த்த வந்திருக்க, ஆண்டாள் பட்டுடுத்தி வருகிறாள்.  வாரணமாயிரத்துடன் மாயவன் வந்துசேர, மத்தளம் கொட்ட, சங்குகள் ஊதப்பட்டது. முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்ட பந்தலில் மதுசூதனன் கைத்தலம் பற்றினாளாம் மங்கை. கண்களில் இறைவனுடன் தொடங்கிய உறவு காதலாகி, கனவிலே கனிந்து கருவறையில் இணைந்து கொண்டது.
-
இதைவிட ஒரு பக்தி உண்டா அல்லது இதைவிட ஒரு காதல் உண்டா? உண்மையில் காதல் இறைவனைவிட உயர்வானது. ஆண்டாள் காதலை விட பெரியவள்.
-

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...