Tuesday, May 30, 2023

ஸ்ரீ லக்ஷ்மி ஸ்துதி

 ஸ்ரீ லக்ஷ்மி ஸ்துதி.

🌼🍁🌼🍁🌼🍁🌼🍁

சுத்த லக்ஷ்ம்யை புத்தி லக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே ஸௌபாக்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


வசோ லக்ஷ்ம்யை காவ்ய லக்ஷ்ம்யை கான லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே ச்ருங்கார லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


தன லக்ஷ்ம்யை தான்ய லக்ஷ்ம்யை தரா லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே அஷ்டஐஸ்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


க்ருஹ லக்ஷ்ம்யை க்ராம லக்ஷ்ம்யை ராஜ்ய லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே ஸாம்ராஜ்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


சாந்தி லக்ஷ்ம்யை தாந்தி லக்ஷ்ம்யை க்ஷாந்தி லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமோ அஸ்த்வாத்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


ஸத்ய லக்ஷ்ம்யை தயா லக்ஷ்ம்யை ஸௌக்ய லக்ஷ்ம்யை நமோ நமஹ

நம: பாதிவ்ரத்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


கஜ லக்ஷ்ம்யை ராஜ லக்ஷ்ம்யை தேஜோ லக்ஷ்ம்யை நமோ நமஹ

நம: ஸர்வோதகர்ஷ் லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


ஸத்வ லக்ஷ்ம்யை தத்வ லக்ஷ்ம்யை போத லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே விஞ்ஞான லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


ஸ்தைர்ய லக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே அஸ்த்வௌதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


ஸித்தி லக்ஷ்ம்யை ருத்தி லக்ஷ்ம்யை வித்யா லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே கல்யாண லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


கீர்த்தி லக்ஷ்ம்யை மூர்த்தி லக்ஷ்ம்யை வர்ச்சோ லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே த்வனந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


ஜப லக்ஷ்ம்யை தபோ லக்ஷ்ம்யை வ்ரத லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே வைராக்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


மந்த்ர லக்ஷ்ம்யை தந்த்ர லக்ஷ்ம்யை யந்த்ர லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமோ குருக்ருபா லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


ஸபா லக்ஷ்ம்யை ப்ரபா லக்ஷ்ம்யை கலா லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே லாவண்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


வேத லக்ஷ்ம்யை நாத லக்ஷ்ம்யை சாஸ்த்ர லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே வேதாந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


க்ஷேத்ர லக்ஷ்ம்யை தீர்த்த லக்ஷ்ம்யை வேதி லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே ஸந்தான லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


யோக லக்ஷ்ம்யை போக லக்ஷ்ம்யை யக்ஞ லக்ஷ்ம்யை நமோ நமஹ

க்ஷீரார்வண புண்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


அன்ன லக்ஷ்ம்யை மனோ லக்ஷ்ம்யை ப்ரக்ஞால லக்ஷ்ம்யை நமோ நமஹ

விஷ்ணுவக்ஷோபூஷ லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


தர்ம லக்ஷ்ம்யை அர்த்த லக்ஷ்ம்யை காம லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே நிர்வாண லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


புண்ய லக்ஷ்ம்யை க்ஷேம லக்ஷ்ம்யை ச்ரத்தா லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே சைதன்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


பூ லக்ஷ்ம்யை தே புவர் லக்ஷ்ம்யை ஸுவர்ண லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே த்ரைலோக்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


மஹா லக்ஷ்ம்யை ஜன லக்ஷ்ம்யை தபோ லக்ஷ்ம்யை நமோ நமஹ

நம : ஸத்யலோக லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


பாவ லக்ஷ்ம்யை வ்ருத்தி லக்ஷ்ம்யை பவ்ய லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே வைகுண்ட லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


நித்ய லக்ஷ்ம்யை ஸத்ய லக்ஷ்ம்யை வம்ச லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே கைலாச லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


ப்ரக்ருதி லக்ஷ்ம்யை ஸ்ரீ லக்ஷ்ம்யை ஸ்வஸ்தி லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே கோலாகல லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


சக்தி லக்ஷ்ம்யை பக்தி லக்ஷ்ம்யை முக்தி லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ


நம: சக்ரராஜ லக்ஷ்ம்யை ஆதி லக்ஷ்ம்யை நமோ நமஹ

நமோ ப்ரம்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ

நிர்ஜல ஏகாதசி - 31/05/2023

 நிர்ஜல ஏகாதசி - 31/05/2023


இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவருக்கு, ஆண்டின் 24 ஏகாதசி விரதங்களையும் கடைப்பிடித்த புண்ணியம் கிடைக்கிறது.


இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்டாலே வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நிச்சயம் என்கிறது தர்ம சாஸ்திரம்.


நிர்ஜல ஏகாதசியை பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.


இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள்.  


மே/ ஜுன் மாதங்களில், வளர்பிறையில் தோன்றக்கூடிய நிர்ஜல ஏகாதசியின் விவரங்களை, பிரம்ம - வைவர்த்த புராணத்தில் வியாசதேவருக்கும், பீமசேனருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.


ஏகாதசி விஷ்ணுவுக்கும் உகந்த திதி. மே/ ஜுன் மாதங்களில் மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது.பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.


ஏகாதசி என்பது ஓர் புண்ணியகாலம் ஆகும். பரமாத்மாவுக்குப் பிரியமான திதி அது. அதைப் போற்றாத புராணமில்லை. 


பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் ஒரு முறை வியாசரை தரிசித்தபோது அவரை வணங்கி "குருதேவா, துன்பங்கள் பலப்பல. அவை எப்போது எப்படி மனிதர்களை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கலியுகத்திலோ, கேட்கவே வேண்டாம். அடை மழை போல, நேரம் காலம் பாராமல் அனைவரையும் படுத்தும். இந்த துன்பங்கள் நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள்'' என வேண்டினார்.


தர்மபுத்திரா, " எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, உபவாசம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை. சகல விதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன'' என்று பதில் சொன்னார் வியாசர். 


குருவே, ஏகாதசி விரதம் மிகவும் முக்கியமாகக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம் என்கிறார்கள். அன்னை குந்தி, அண்ணன் யுதிஷ்டிரர், திரௌபதி, அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என எல்லோரும் தவறாமல் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

அவர்கள் எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள். என்னால் செய்ய கூடியதா அது?


ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது. என்னைப்போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது. " விருகம் "என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது. ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய, என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது. 


 மற்றொரு பிரச்னை... ஏகாதசியும் ஏதோ மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ வந்தாலும் பரவாயில்லை. அது சரியாகப் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை வந்துவிடுகிறது. என்னால் அப்படியெல்லாம் அடிக்கடி சாப்பிடாமல் இருக்க முடியாது.


 போனால் போகிறதென்று வருடத்துக்கு ஒருநாள் வேண்டுமானால் உபவாசம் இருக்கலாம்.அப்படி நான் ஒருநாள் இருக்கும் விரதத்துக்கு ஓராண்டு விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்க வேண்டும். அப்படி ஏதேனும் வழி இருந்தால் சொல்லி உதவுங்கள் குருதேவா...” என்று பீமசேனன் அப்பாவியாகக் கேட்டான்.


நம்மில் பலருக்கும் மாதமிருமுறை வரும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்வதில் விருப்பம் இருக்கலாம்.


வியாசதேவர் பதிலளித்தார். கவலைப்படாதே பீமா. உனக்காகவே அமைந்ததைப் போல ஒரு ஏகாதசி இருக்கிறது.


மே/ஜுன் மாதங்களில் வளர்பிறையில் சூரியன் ரிஷப ராசி அல்லது மிதுன ராசியில் இருக்கும்போது தோன்றக்கூடிய ஏகாதசி நிர்ஜல ஏகாதசி எனப்படுகிறது. இந்த ஏகாதசியில் ஒருவர் நீரும் கூட அருந்தாமல் முழு உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி'' என வழிகாட்டினார் வியாசர். 


வியாசர் இப்படிச் சொன்னதும் பீமன் திடுக்கிட்டான்.


``என்ன நீர்கூட அருந்தக் கூடாதா?”


``ஆமாம் பீமா. ஜலம் என்றால் நீர். நிர்ஜலம் என்றால் நீர்கூட இல்லாமல் என்று பொருள். ஆனால் யோசித்துப்பார், இந்த ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீ ஓராண்டு முழுவதும் ஏகாதசி விரதம் மேற்கொண்ட பலனை எளிமையாகப் பெறலாம். அப்புறம் உன் இஷ்டம்” என்றார் வியாசர்.


`உணவு உண்ணாமல் இருப்பதே கடினம். அதில் நீரையும் துறக்க வேண்டுமா’


பீமன் யோசித்தான். ஆனாலும் இது நல்ல யோசனையாக இருந்தது. 


பீமசேனன், குருவின் வாக்கை வேதவாக்காகக் கொண்டு இந்த விரதத்தை மேற்கொள்ள முடிவு செய்தான். அவ்வாறே நிர்ஜலா ஏகாதசி விரதத்தையும் முடித்தான். அதனால் அவனுக்குப் புண்ணிய பலன்கள் கிடைத்தன.


 பீமனே உணவை விட்டு உபவாசித்த ஏகாதசி என்பதால் அந்த ஏகாதசிக்கு " பீம ஏகாதசி " என்றும் " பாண்டவ ஏகாதசி " என்றும் பெயர் உண்டானது.


துன்பங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி இது.


நிர்ஜல ஏகாதசி விரத பலன் :-


நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால் மற்றைய ஏகாதசி விரதமிருந்த பலனுண்டு. 


புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.


வாழ்வில் வளமும் செல்வமும் பெருகும். பிறவி பிணி நீங்கும். 


ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம். 


இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள்.


மேலும், அவர்களது இறப்பிற்குப் பின், அவர்களை அழைத்துச் செல்ல யமதூதர்கள் வர மாட்டார்கள். மாறாக விஷ்ணு தூதர்கள் வருவார்கள். அந்த ஆன்மா, விஷ்ணுவின் திருப்பாதத்தை அடையும்.


நிர்ஜல ஏகாதசியை பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.

இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். 


இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்டாலே வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நிச்சயம் என்கிறது தர்ம சாஸ்திரம்


அத்தகைய அற்புதமான ஏகாதசி தினம் நாளை (31/05/2023) வாய்த்துள்ளது. 


இன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தவர்கள் உபவாசித்தும் முடியாதவர்கள் முழு அரிசியால் ஆன உணவைத் தவிர்த்தும் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபடலாம்.


 நாள் முழுவதும் நாராயண நாமமோ அல்லது ராம நாமமோ சொல்லி ஜபம் செய்யலாம். இதன் மூலம் நம் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.


நாராயண!! நாராயண!!

Monday, May 8, 2023


 எத்தனை எத்தனையோ ஊர்களில் எவ்வளவோ கிராமங்கள் வித்தியாசமான பெயர்களோடு இருக்கின்றன.


ஆனால், மிக வித்தியாசமாக, திதிகளில் ஒன்றான ஏகாதசியின் பெயரால் அழைக்கப்படும் ஒரு கிராமம் இருக்கிறது என்பது ஆச்சர்யம் அல்லவா! அதைவிட மேலும் ஓர் அபூர்வமும் உண்டு அங்கே. அது, ராமபிரான் தனக்குத்தானே சிலை வடித்து பிரதிஷ்டை செய்த இடம் என்பதுதான். அந்த அற்புதத்தை அறிந்த கொள்ள வேண்டாமா? இதோ அந்த அதிசயக் கோயில்!

ஒரு காலத்தில் தஞ்சை அரசர்களால் வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட ஊர், வடுவூர். ஓர் ஏகாதசி தினத்தன்று இந்த ஊர் தானமளிக்கப்பட்டதால், ஏகாதசி கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூரில், ருக்மணி சத்யபாமா சமேத கோபாலன் இருந்த இடத்தில்தான் கோதண்டராமர் மூலவராக எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

அவர் இங்கு கோயில் கொண்ட விதம் சுவையானது.

தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற பதினான்கு ஆண்டு காலம் வனவாசம் மேற்கொண்ட ராமன், பின்னர் அயோத்தி நோக்கிப் பயணிக்க ஆயத்தமானார். ஆனால் ராமபிரானின் அருள் ஒளியில் திளைத்துப் பழிகிய ரிஷிகளோ ராமபிரானைப் பிரிய மனமின்றி அவர் தம்முடனே இருக்க வேண்டுமென வேண்டினார்கள்.

அன்புக்கும் கடமைக்கும் இடையில் நின்று சிந்தித்த அண்ணல் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு தமது ஆசிரமத்தில் அமர்ந்து யோசிக்கலானார்.

அதையடுத்து ராமர் தமது சந்தரவடிவை தன் கையாலேயே விக்ரகமாக வடித்து தமது ஆசிரம வாயிலில் வைத்துவிட்டு உள்ளே சீதாபிராட்டியுடன் இருந்தார்.

மறுநாள், ரிஷிகளும் முனிபுங்கவர்களும் பிரானையும், பிராட்டியையும் வழக்கம் போல் தரிசிக்க ஆசிரமத்துக்கு வந்தனர். அப்போது ஆசிரம வாயிலில் இருந்த ராமரின் சுந்தரச்சிலையில் இதயத்தைப் பறிகொடுத்து மயங்கி நின்றனர். பின்னர் உள்ளே சென்று ராமரை தங்களுடனே தங்கியருள மீண்டும் வேண்டி நின்றனர்.

அப்போது அந்த சீலர்களை நோக்கி ராமர், "உங்களுக்கு நான் வேண்டுமா? என்து சிலை உருவம் வேண்டுமா?' எனக் கேட்டார். சிலையை கண்டு மனம் மயங்கியிருந்த தவசீலர்களின் மனம் அதிலேயே லயித்து இருந்ததால் சிலைக்கு மாற்று எது என்பதை மறந்து, தங்களுக்கு அந்தச் சிலையே வேண்டும் எனக் கூறிவிட்டனர்.

புன்னகையுடன் அதற்கு சம்மதித்த ராமர், அச்சிலையை அங்கேயே விட்டுவிட்டு லட்சுமணர், சீதாபிராட்டி சகிதம் காட்டை விட்டு நாட்டை நோக்கிப் பயணமானார்.

வெகுகாலம் கழித்து, கானகத்தில் அச்சிலைகளைக் கண்ட திருக்கண்ணபுரம் வாசிகள் ராமபிரானின் சிலையை தங்கள் ஊருக்குக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆராதித்து வரலாயினர்.

பின்னர் ஒரு கல்ப காலத்தில் திருக்கண்ணபுரவாசிகள் ராமபிரானின் சிலையோடு தாங்கள் செய்து வைத்திருந்த சீதை, லட்சுமணர், பரதன், அனுமன் சிலைகளையும் திருத்துறைப்பூண்டியை அடுத்த தலைஞாயிறு எனும் கிராமத்தில், ஓர் அரசமரத்தின் அடியில் பாதுகாப்புக்காக புதைத்து வைத்தனர்.

காலவெள்ளத்தில் எத்தனையோ ஆண்டுகள் கடந்தன. அப்போது தஞ்சையை சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். ஒரு நாள் மன்னரின் கனவில் ராமரே காட்சியளித்து, தாம் தலைஞாயிறு எனும் இடத்தில் குறிப்பிட்ட மரத்தினடியில் புதையுண்டிருப்பதாகவும்; தம்மை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து ஆராதிக்குமாறும் கூறினார்.

திடுக்கிட்டெழுந்த மன்னர், தம் பரிவாரங்கள் படைசூழ தலைஞாயிறு சென்று குறிப்பிட்ட இடத்தில் தோண்டி விக்ரகங்களை வெளியே எடுத்து வியந்தார். பின்னர் அச்சிலைகளுடன் மன்னர் பரிவாரம் கிளம்ப, அந்த நள்ளிரவில் உள்ளூர் மக்கள் விழித்தெழுந்து, சிலைகளை மன்னர் கொண்டு செல்லாமல் தடுத்தனர். அவர்களை சமாதானம் செய்து பரதர், லட்சுமணர் சிலைகளை மட்டும் அவர்களிடம் கொடுத்தவிட்டு, ராமர், சீதை, அனுமன் சிலைகளுடன் மன்னர் புறப்பட்டார்.

தஞ்சை நோக்கித் திரும்பும் வழியில் நடுநிசி ஆகிவிடவே வடுவூரில் விக்ரகங்களுடன், தம் பரிவாரம் புடைசூழ மன்னர் சற்று தங்கி ஓய்வெடுத்தார். ஒற்றுமையும் பண்பாடும்மிக்க வடுவூர் பெருமக்கள் ஒரு சேரத் திரண்டு, மேற்படி அர்ச்சா பிம்பங்களை மன்னர் எடுத்துச் செல்ல வேண்டாமென விண்ணப்பித்து வடுவூரிலேயே ஏற்கனவே இருந்த ருக்மணி சத்யபாமா சமேத கோபாலன் கோயிலில் பிரதான மூர்த்தியாக ராமரை பிரதிஷ்டை செய்துவிட வேண்டுமென மன்றாடி நின்றனர்.

முதலில் மன்னர் மறுத்தார். ஆனால் ஊர்மக்கள் அனைவரும் ஆலயத்தின் மொட்டை கோபுரத்தில் ஏறி நின்று குதித்து உயிர்விட்டு பிராணதியாகம் செய்ய உறுதி பூணவே, மன்னர் அவர்களின் உறுதிக்கும், ராமபக்திக்கும் மெச்சி வியந்து, அச்சிலைகளை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்ய சம்மதித்தார். அது முதல் கோபாலன் கோயிலின் பிரதான மூர்த்தியாக ராமர் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

மூலவர் சன்னதியில் உற்சவர் ராமராக, ராமரே செய்தருளிய ராமரின் விக்ரகம் இன்றும் காண்போரைக் கவர்வதாய் உள்ளது.

பிற்காலத்தில் வடுவூர் மக்கள் லட்சுமணர் சிலையையும் வார்த்தனர். அது பென் வடிவாகவே அமைந்துவிடவே, அதை அழகிய சுந்தரி அம்மனாக பிரதிஷ்டை செய்து, அதற்குத் தனி ஆலயம் அமைத்தனர்.

ஜெகன்மோகனரான மூலவர் கோதண்டராமர், சீதா பிராட்டி, லட்சுமணர், அனுமன் சமேதராய் திருக்கல்யாண கோலத்தில் கருவரையில் காட்சி தருகிறார். நாச்சியாரான சீதா பிராட்டிக்குத் தனி சந்நதி இல்லை.

இத்தலத்து ஆதி பெருமாள் ருக்மணி - சத்யபாமா சமேத கோபாலன், மகா மண்டபத்தின் வடப்புறம் திருப்பள்ளி அறையில் தினசரி பூஜை கண்டருளுகிறார்.

தலவிருட்சம், மகிழமரம். ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் வில்வம் ஒன்றும் உள்ளது.

திருக்குடந்தை பெருமாள் ஆராவமுதன் எழுந்தருளி இரு தினங்கள் இருந்து பெருமாள் சடாரி பிரதிஷ்டை செய்து உகந்தருளிய தலம் இது.

ஸ்ரீமத் அகோபில மடம் 43-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் இத்தலத்தில் எழுந்தருளி "கற்பார் ராமபிரானை அல்லால்' எனும் திருவாய்மொழி 7-5-1 பாசுரத்தையும், "மன்னு புகழ் கௌசலை தன்' எனும் குலசேகர ஆழ்வாரின் திருமொழி 8-1 பாசுரத்தையும் டோலையிட்டு சமர்ப்பித்தார்.

ஆசார்யர்களால் போற்றப்பட்ட பிரார்த்தனைத் தலமான வடுவூர் கோதண்டராமரை நாமும் வணங்கி வளம் பெறுவோம்!

தஞ்சாவூர் - மன்னார்குடி பேருந்து வழித்தடத்தில் 24 கி.மீ. தொலைவில் வடுவூர் உள்ளது.

மகாலட்சுமி_இருக்கும் 26_இடங்கள்


மகாலட்சுமி_இருக்கும்  26_இடங்கள்


மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்.


1. திருமால் மார்பு


திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.


2. பசுவின் பின்புறம்


பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப் பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.


3. யானையின் மத்தகம்


யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. (ஓங்காரம் போன்றது) அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.


4. தாமரை


மலர்களில் சிறந்தது தாமரை. ‘பூவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆதலின் அவளை மலர்மகள் என்பர்.


5. திருவிளக்கு


விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.


6. சந்தனம்


மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்.


7. தாம்பூலம்


தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்.


8. கோமயம்


பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். ‘ஐந்தாடுவான் அரன்’ என்பார் அப்பர். வாயிலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாரா, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது. பஞ்ச கவ்யம் பரம ஒளஷதம் என்பர்.


9. கன்னிப்பெண்கள்


தூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர். அவர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வது உலக வழக்கு.


10. உள்ளங்கை


உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.


11. பசுமாட்டின் கால்தூசு


புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் நில்லாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். மாடு என்றால் செல்வந்தானே!


12. வேள்விப்புகை  

  

வேள்விப் புகை உயிர் காக்கும். போபாலில் வேள்வி நடந்த இரு வீடுகளுக்குள்ளே நச்சுக்காற்று நுழையவில்லை. வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும்.


13. சங்கு


சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. நிதியின் ஓர் அளவை சங்கம் என்பர். ‘சங்கநிதி... பதுமநிதி இரண்டுந்தந்து’ எனும் நாவரசர் சொல் உணர்வோம்.


14. வில்வமரம்


வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றி னாள். வில்வம் சிவபெருமானுக்கு உகந்த பத்திரம். அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.


15. நெல்லி மரம்


நெல்லி ஆயுளை வளர்க்கும்: ஆரோக்கியம் தரும். அதனடி யில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிதிருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலன் உண்டு.


16. தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்.  

17. வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்  

18. கலகமில்லாத மகளிர் வாழும் இடம்  

19. தானியக் குவியல்  

20. கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்  

21. பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்  

22. பகிர்ந்துண்டு வாழும் மனிதர்  

23. நாவடக்கம் உள்ளவர்  

24. மிதமாக உண்பவர்  

25. பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்  

26. தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்.

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...