Monday, August 3, 2020

பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதீர்கள் !

பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதீர்கள் !

உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !

நீங்கள் சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள்
வாழ்விலும் இருந்தது !

அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள் !

நீங்களும் அவர்களைப் போல் முயற்சித்துப் பாருங்கள் !

தகப்பன் கொடுமைக்காரனா ?
ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய்யுங்கள் !

தாயால் கெட்ட பெயரா ?
பரதனைப் போல் பக்தி செய்யுங்கள்

அண்ணனே உங்களை அவமதிக்கிறானா ?
தியாகராஜரைப் போல் பக்தி செய்யுங்கள்

குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா?
குசேலரைப் போல் பக்தி
செய்யுங்கள்

மனைவி அடங்காப் பிடாரியா ?
சந்த் துகாராமைப் போல் பக்தி செய்யுங்கள்

கணவன் கொலைகாரப் பாவியா ?
மீராவைப் போல் பக்தி
செய்யுங்கள்

புகுந்த வீட்டில் கொடுமையா ?
சக்குபாயைப் போல் பக்தி செய்யுங்கள்

பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ?
பூந்தானத்தைப் போல் பக்தி
செய்யுங்கள்

பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயா?
நாரதரைப் போல் பக்தி செய்யுங்கள்

நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ?
விதுரரைப் போல் பக்தி செய்யுங்கள்

நீங்கள் தப்பான குடும்பத்தில் பிறந்தவளா ?
கானோ பாத்ராவைப் போல் பக்தி செய்யுங்கள்

உடலில் வியாதியால் வேதனையா ?
நாராயண பட்டத்ரியைப் போல் பக்தி செய்யுங்கள்

யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா?
ஜயதேவரைப் போல் பக்தி செய்யுங்கள்

இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறீர்களா ?
குந்திதேவியைப் போல் பக்தி
செய்யுங்கள்

மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறீர்களா ?
மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய்யுங்கள்

சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ?
பாண்டவர்களைப் போல் பக்தி செய்யுங்கள்

உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ?
ஜயமல்லரைப் போல் பக்தி செய்யுங்கள்

பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ?
கைகேயியைப் போல் பக்தி செய்யுங்கள்

உங்கள் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ?
நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய்யுங்கள்

குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ?
வால்மீகியைப் போல் பக்தி
செய்யுங்கள்

கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றீர்களா
பீஷ்மரைப் போல் பக்தி செய்யுங்கள்

உங்கள் கணவன் கஞ்சனா ?
புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப் போல் பக்தி செய்யுங்கள்

வியாபாரத்தில் நஷ்டமா ?
சாருகாதாஸரைப் போல் பக்தி செய்யுங்கள்

உங்கள் கணவன் நாஸ்திகனா ?
மண்டோதரியைப் போல் பக்தி
செய்யுங்கள்

உங்கள் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா?
விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய்யுங்கள்

கணவன் உங்களை கண்டு கொள்வதில்லையா ?
சுநீதியைப் போல் பக்தி
செய்யுங்கள்

குடும்பத்தினர் உங்களை ஒதுக்கிவிட்டார்களா ?
ஜடபரதரைப் போல் பக்தி செய்யுங்கள்

நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ?
அக்ரூரரைப் போல் பக்தி செய்யுங்கள்

ஊரே உங்களை ஒதுக்கிவிட்டதா ?
சோகாமேளரைப் போல் பக்தி செய்யுங்கள்

சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ?
ரந்திதேவரைப் போல் பக்தி செய்யுங்கள்

உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா?
யசோதையைப் போல் பக்தி செய்யுங்கள்

பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ?
தேவகியைப் போல் பக்தி செய்யுங்கள் !

பிறவிக் குருடனா ?
சூர்தாஸரைப் போல் பக்தி செய்யுங்கள்

உடல் ஊனமுற்றவரா ?
கூர்மதாஸரைப் போல் பக்தி செய்யுங்கள்

நீங்கள் ப்ருஹந்நிலை போல் அரவாணியா ?
சுஹக்ஷாவைப் போல் பக்தி செய்யுங்கள்

நீங்கள் பிச்சை எடுத்து வாழ்கின்றீர்களா ?
பந்து மஹாந்தியைப் போல் பக்தி
செய்யுங்கள்

உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா?
பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய்யுங்கள்

வாழ்க்கையே பிரச்சனையா ?
மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப்
போல் பக்தி செய்யுங்கள்

இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !
பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு
என்றும் ஒரே ஆதாரம் !

அதை செய்யாமல் நீங்கள் எதைச் செய்தாலும்
உங்களுக்கு சமாதானம் இல்லை !

இதுவரை காரணம் சொல்லி உங்கள் ஆனந்தத்தை
நீங்கள் தொலைத்தது போதாதோ ?

இனிமேல் காரணம் சொல்லாதீர்கள்

இறைவனிடம் பக்தி செய்ய தொடங்கிவிடுங்கள்.....

சிந்தனை கதை

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

*💗சிந்தனை கதை...*

*இறைவன் நம்மை சோதிப்பது நமது உண்மையான குணத்தை நாம் அறியவே..!!*

குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது.
“யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு.

ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே…அனைத்து அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்டான்.

“நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்.” என்று கூறினார் குரு.

மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.

மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.

“இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களை கேட்டார் குரு.

"இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவைதான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களை கேட்டார்.

“தெரியவில்லை."

"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழேதள்ளி கவிழ்த்தார்.

அதிலிருந்து தேன் வெளியேவந்தது.

மற்றொரு ஜாடியை கவிழ்த்தார்.

அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

“ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள்என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்றுநினைத்துக்கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது."

"இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும்வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம்.

ஆனால் சோதனையை சந்திக்கும்போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது."

"நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது.

நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்” என்றார்.

”கெட்டவர்களுக்கும் , சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவிசாய்ப்பதில்லை.

இறைவன் நம்மை சோதிப்பதும் நமது: உண்மையான குணத்தை நாம் அறியவே. அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே.

அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம்
அறிந்து கொண்டால்தான்
நம்மை திருத்திக்கொள்ளமுடியும்
இல்லையெனில் நமதுதவறுகளை திருத்திக் கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்.

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...