ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்
Friday, May 31, 2019
Friday, May 24, 2019
Thursday, May 23, 2019
லக்ஷ்மண விரதம்
*லக்ஷ்மண விரதம்*
ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற *அகஸ்திய மாமுனிவர்* அயோத்திக்கு வருகை புரிந்தார் அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும் அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து *ராவண கும்பகர்ண* வதத்தை விட *லக்ஷ்மணன்* ராவணன் மகன் *மேகநாதனை வதைத்ததே* மாபெரும் வீர செயல் என்றார்.அகஸ்தியர் அதை கேட்டு அனைவரும் ஆச்சிரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள் மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க *அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ* ஆனால் ஏதும் அறியாதவன் போல் *லக்ஷ்மணின் பெருமையை* என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய் சரி நானே கூறுகிறேன் சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு *மூன்று அறிய வரங்கள்* தரவேண்டும் என நிபந்தனை வைத்தான் அவை *1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்*
*2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும்* *3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்* என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான் அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர் இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும்( *பெண்ணையும்*) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார் அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்கமுடியுமா லக்ஷ்மணர் அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் *ரிஷிமுக பர்வதத்தில்* மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன் அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது. அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் *நித்ராதேவி* யிடம் ஒரு வரம் கேட்டேன் அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன் அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது மூன்றாவது *நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர்* நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் *பலா அதிபலா* என்னும் மிகவும் சக்திவாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார் அந்த *பலா அதிபலா* மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க *ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார்* லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார் *ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும்* என்பது எம் கருத்து..!
*ஸ்ரீ ராமஜெயம்* சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே,
*ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம்* சொல்வது புண்ணியமே..!
ஜெய் ஸ்ரீ ராம்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..

Monday, May 13, 2019
Radhekrishna
Radhekrishna....
Diseases can't stop you in enjoying Krishna...
Problems can't stop you in enjoying Krishna...
Failures can't stop you in enjoying Krishna...
People can't stop you in enjoying Krishna....
Situations can't stop you in enjoying Krishna....
Nothing can stop you in enjoying your Krishna....

Thursday, May 9, 2019
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு, அத்வைத சித்தாந்தத்தை இவ்வுலகுக்கு அளித்த ஆதி சங்கரர் வாழ்ந்தது வெறும் 32 வருடங்கள் மட்டுமே.
எட்டு வயது பாலகனுக்கு என்ன தெரியும் ? ஆனால், அவன் அந்த வயதில் துறவறம் மேற்கொள்ளவிருக்கும் செய்தியை அறிந்து அதிர்ந்துபோன அவனது தாய் ஆர்யாம்பாளுக்கு, தான் சந்நியாசம் மேற்கொள்ள கலங்கிய மனதோடு சம்மதித்த அந்த தாய்க்கு, ஆறுதலாய் ஒரு வாக்களிக்கிறான், சங்கரன் “அம்மா, நீ என்னை எப்போது அழைத்தாலும், நான் இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அக்கணமே உன் முன் இருப்பேன்”.
இன்புற்ற தாய், தன் பிள்ளையைப் பிரியச் சம்மதிக்கிறாள்.
தாயின் இறுதிக்காலம் நெருங்குகிறது. தன் பிள்ளை இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்று அறிந்துகொண்ட அந்தத் தாய், அவனை தான் மட்டுமே சொந்தம் கொண்டாடக்கூடாது என்று இத்தனை காலம், தன் பிள்ளையை அழைக்காமல், வைராக்கியமாக இருந்த ஆர்யாம்பாளுக்கு இப்போது மகனைக் காணவேண்டும் என்று தோன்றுகிறது. இதுவே இறுதி முறையாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. தன் பிள்ளை தனக்களித்த வாக்கில் இருந்து தவற மாட்டான் என்று அவள் அறிவாள்.
முதுமை காரணமாய் தான் இழந்து கொண்டிருந்தும் சக்தியை ஒன்றுகூட்டி, "சங்கரா", "சங்கரா" "சங்கரா" என்று ஹீனமாய் முனக மட்டுமே அவளால் முடிகிறது.
நேரம் கடக்கிறது. "அம்மா" என்று ஆசையாய் தன் பிள்ளை அழைக்கும் குரலை அவள் செவிகள் இப்போது கேட்கின்றன. "சங்கரா, வந்துவிட்டாயா ? அருகில் வா. என் தலையை உன் மடிமீது ஏந்திக்கொள்" என்கிறாள், கண்பார்வை மங்கிப்போன ஆர்யாம்பாள். அருகில் வந்த சங்கரனை ஆசையுடன் தொட்டுத் தழுவுகிறாள். சங்கரன், இப்போது, தன் தாய் சொல்லியதைப்போல, அவளது தலையை அன்புடன் எடுத்து தனது மடியின் மீது வைத்துக்கொள்கிறான்.
அந்தத் தாயின் மனம் இப்போது துணுக்குறுகிறது. சங்கரன், கைகளிலும், மார்பிலும் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அவளை உறுத்துகின்றன, அவளது மனதையும். ஆர்யாம்பாளின் மனம் உடைந்து போகிறது. என் பிள்ளை என்னிடம், "துறவறம் போகிறேன்" என்று பொய் சொல்லிவிட்டானோ ? பெற்ற தாயையும், இவ்வுலக ஆசைகளையும் துறந்த ஒரு துறவிக்கு ஆபரணங்கள் எதற்கு ? துறவற தர்மத்தில் இருந்து தவறிவிட்டானே, என் பிள்ளை" என்று அவனிடம் சொல்லாமல், உள்ளே அழுகிறாள்.
இப்போது, மீண்டும் "அம்மா" என்று அழைக்கும் குரல். பதில் சொல்ல மனமில்லை, ஆர்யாம்பாளுக்கு. சங்கரன் கேட்கிறான், "அம்மா, உனக்கு வாக்களித்திருந்த படியே, நீ அழைத்ததும் நான்தான் வந்துவிட்டேனே. ஏன், என் அழைப்புக்கு பதில் குரல் கொடுக்கவில்லை ? நான் வரத் தாமதம் செய்துவிட்டேனா ? அதனால் உனக்கு கோபமா ?"
ஆர்யாம்பாளுக்கு அதிர்ச்சி. தன் பிள்ளை இப்போதுதான் வருகிறான். அப்படியானால், நான் யார் மடியில் தலைவைத்து படுத்திருக்கிறேன் ?" நடப்பதை மகனிடம் சொல்கிறாள்.
ஆதி சங்கரருக்கு உண்மை புரிந்தது. தெருக்கோடியில் கோயில் கொண்டிருக்கும் கண்ணனை உள்ளம் கனிந்து வணங்குகிறார். "அம்மா, நான் துறவரம் சென்றபோது நமது தெருவின் கோடியிலுள்ள ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் கண்ணனிடம், நான் வரும்வரை என் தாயைப் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டுப் போனேன். நான் வருவதற்கு தாமதித்த சில நொடிகளைக் கூடப் பொறுக்காத கண்ணன், தானே வந்திருக்கிறான், உன் தலை சாய மடியும் தந்திருக்கிறான்".
ஆர்யாம்பாள் இப்போது கண்ணனை, அந்த தயாளனை எண்ணிக் கண் கலங்குகிறாள். "கிருஷ்ணா, நான் அழைத்தவுடன் வரவேண்டும் என்பதற்காக, உன் ஆபரணங்களைக் கூடக் களையாமல் வந்தாயா ?"
குளத்தில், தன் காலைக் கவ்விய முதலையின் பிடியில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளப் போராடி, தன்னால் முடியாதபோது, இறுதியில் 'ஆதிமூலமே' என்று அலறிய கஜேந்திரன் என்ற யானையின் பிளிறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில் பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த எம்பெருமான், அவசர அவசரமாகக் கிளம்ப யத்தனித்தபோது, அவனது உத்தரீயம் (மேல் துணி) பிராட்டியின் கையில் சிக்கிக் கொள்ள, அவனது அவசரம் அறிந்த கருடன், அவனைவிட வேகமாக பறந்து வந்து அவன் முன் நிற்க, சக்ராயுதமானது, தானாகவே பறந்து வந்து அவனது வலது திருக்கரத்தில் பொருந்திக் கொள்ள, பகவான் விரைந்துசென்று யானையைக் காத்தருளினான்.
தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம் அளிப்பது ஒன்றே குறி ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்தி ஆறுதல் சொல்ல எப்படி ஒரு தாய் அவசரமாக ஓடி வருவாளோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பான்.
ஆதிசங்கரரின் தாயார் சமாதியும், அதில் சங்கரர் ஏற்றிவைத்த விளக்கும், தாயாருக்கு காவல் இருந்த கிருஷ்ணரின் ஆலயமும் காலடியில் இன்றும் உள்ளது. உலகத்தையே துறந்தாலும் பெற்ற தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை மகான்கள் செய்யத் தவறியதில்லை.
"பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே"
ஏ மூட மனமே, கோவிந்தனை துதிசெய். நீ போகும் காலம் வருகையில், நீ கற்ற எந்த கல்வியும் உன்னுடன் வராது, உன்னைக் காக்காது. கோவிந்தனை துதிசெய். அவன் தாள் பற்று.
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர

கோவிந்த! சரணாகதம்
அட்சய திருதியை தினத்தை பெண் மானம் காத்த தினம் என அழைக்கலாம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்தார். அதோடு தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார். துர்க்குணம் கொண்ட துரியோதனன் பாஞ்சாலியின் சேலையை உரிந்து மானபங்கப்படுத்த உத்தரவிட்டான். மானம் காக்க பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள் கூட அவளுக்கு உதவ முன் வரவில்லை. இந்த நிலையில் தெய்வமே துணை என....
சங்கு சக்ர கதாபாணி ஸ்ரீமத் துவாராக நிலய அச்சுதா!
ஹே கோவிந்த! சரணாகதம் - என்று பாஞ்சாலி கத்தினாள்.
இந்த சமயத்தில், துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் தன் தேவியரான ருக்மணி, சத்யபாமாவுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். பாஞ்சாலியின் கூக்குரல் அவரது காதில் கேட்டது. ஒருகணம் தாமதித்தால் கூட அந்த அபலைப் பெண்ணின் மானம் பறிபோகும் என்பதால் ஊஞ்சலில் இருந்த படியே கையை உயர்த்தி அட்சய என்றார். அவரது கையிலிருந்து புறப்பட்ட ஆடை, பாஞ்சாலியின் உடலைச் சுற்றியது.
துச்சாதனன் பாஞ்சாலி சேலையை இழுக்க, இழுக்க அது கிருஷ்ணரின் அட்சய என்ற உத்தரவால் வளர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால் துச்சாதனன் கை சோர்ந்து மயங்கி விட்டான். இப்படியாக கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திரிதியை ஆகும். இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெறலாம்.

Subscribe to:
Posts (Atom)
அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது. இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...
-
Yadirajan vadivalagu paRpamenaththigazh painGgazhalum thanN pallavamE viralum pAvanamAgiya paiNthuvarAdai padhiNtha marunGgazhagum mu...
-
Thiruppavai Pasuram is a popular bhajan addressed to Lord Perumal or Mahavishnu. Written by Saint Andal, also known as Nachiar and Ko...